Twitter இணைய தளத்தில் பிரபலங்கள்

ஓகஸ்ட் 12, 2010

எப்பப் பாத்தாலும் இன்று புதிதாய் கற்போம் அப்படீன்னு எதாவது எழுத வேண்டியது… யார் இதெல்லாம் படிப்பாங்க.. என்று நண்பர்கள் சிலர் கேட்டதாலும், வலைப்பக்கத்திற்கு வருகை தருவோர் கண்களுக்கு சிறிது ஓய்வளிக்கவும் இந்த பதிவு…

ஆனந்த விகடனில் கலர் புல் பக்கங்களில் வருமே வலை பாயுதே…

Twitter மற்றும் Facebook ல் உள்ள பிரபலங்கள் எழுதும் காமெடிகள், வெளிவிடும் புகைப்படங்கள்…. அது மாதிரி நாமும் ஏதாவது பண்ணலாம், பொழுதுபோக்கிற்காக …. என்று நினைத்துக் கொண்டே கூகிளாரிடம் தேடுதல் வேட்டையைத் துவங்கிய போது கிட்டியவைகள் இரண்டு இணையதளங்கள்…

http://www.celebtweets.in/

http://www.indiancelebsontwitter.com/

அங்க பாத்தப்ப தான் நிறைய பேர் ட்விட்டுறது தெரிஞ்சது…

நமக்கு நல்லா தெரிஞ்ச A.R. ரஹ்மான், நரேன் கார்த்திகேயன், விஸ்வனாதன் ஆனந்த், த்ரிஷா, சிம்பு, நமிதா, சோனியா அகர்வால், செல்வராகவன், மாளவிகா, ஸ்ருதி ஹாசன், ஜெனிலியா, மாதவன், ஸ்ரேயா, யுவன் சங்கர் ராஜா, சுசித்ரா, G.V.பிரகாஷ், K.V.ஆனந்த், P.C. ஸ்ரீராம், ஹாரிஸ் ஜெயராஜ்,

அப்புறம் நம்ம ”சரக்கு மாஸ்டர்” விஜய் மல்லையா,”Task Master” நரேந்திர மோடி, ”Flying Master” கோபிநாத், ”மாஸ்டர் பிளாஸ்டர்” சச்சின், “ Yes We Can” பாரக் ஒபாமா, “அமைதி விரும்பி” தலாய் லாமா, ”சாஃப்ட்வேர் சுல்தான்” பில் கேட்ஸ், ”வேட்டைக்காரன்” அபினவ் பிந்த்ரா, ”பாகிஸ்தான் மருமகள்” சானியா மிர்சா, ”சமந்தா புகழ்” சசி தாரூர், ”Doordharshan சாந்தி” மந்த்ரா பேடி, ”IPL T20 வசூல் ராஜா” லலித் மோடி, “ஜீவனாம்சம் கொடுப்பதற்காகவே சம்பாதிக்கும்” டைகர் வுட்ஸ், ”பஞ்சாப் டீமால் பஞ்சராகிப் போன” பிரீத்தி ஜிந்தா, அப்படீன்னு ஒரு பெரிய லிஸ்டே இருக்கு…

மற்றவர்கள் வாழ்க்கையில் நுழைந்து பார்ப்பதென்றாலே ஒரு வித சந்தோஷம் தான்….

இதோ Twitter ல் சுட்டவை… பாருங்க… படிங்க… சந்தோசமா இருங்க…

த்ரிஷா: குடுத்து வெச்ச டால்பின் குட்டி….

நமீதா: ராத்திரி 01:45 க்கு முதல் அனுபவம் …. ட்விட்டரில்….

பிரீத்தி ஜிந்தா: சாப்பிட்ட அளவுக்காவுது ரன் அடிச்சிருக்கலாம்….

ஜெனிஃபர் லோபஸ் :இவ்ளோ இருக்கே எத போட்டுக்கறது?

மாதவன் :என் செல்லக் குட்டி… என் புஜ்ஜுக் குட்டி….

தோனி :ஒரு வழியா மேட்ச் முடிஞ்சது… Rest எடுக்க விடமாட்டிங்கறாங்க….

சச்சின்: பந்தையும் பிடிப்பேன், நண்டையும் பிடிப்பேன்…

சோனியா அகர்வால் : எனக்கு பிடித்தது இது... உங்களுக்கு பிடித்தது எது??

அப்புறமா பார்த்தேன்… Chennai Corporation க்கும் ஒரு Twitter Account இருக்கறதை…

Twitter பைத்தியம் யாரையும் விட்டு வெக்கலை போல….

கடைசியா…

என்னதான் காமெடி ட்ராக் படமானாலும் ஒரு Message கண்டிப்பா இருக்கும்… அதனால…

சரக்கு மாஸ்டர், Task Master, Flying Master மாதிரி நீங்களும் உங்க துறைல மாஸ்டர் ஆகணுமா?

10,000 மணி நேர உழைப்பை உங்கள் துறையில் கொட்டுங்கள்…. நீங்களும் மாஸ்டர் தான்… மேலே குறிப்பிட்ட எல்லா மாஸ்டர்களும் இதைச் செய்திருப்பார்களாம்… Malcolm Gladwell கூறுகிறார்…

என்ன 10,000 மணி நேர சூட்சுமத்தை பின்பற்ற ஆரம்பிச்சாச்சா?

வாழ்த்துக்களுடன்,

ராம்மோகன்

இந்த இடுகை ta.indli.Com பயனர்களை சென்றடைய இங்கே வாக்களியுங்கள்.

உங்கள் நண்பர்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளுங்கள்

பிற பயனுள்ள இணைய தளங்கள் பற்றிய இடுகைகள்:

நோய் மருந்து மருத்துவம் பற்றிய இணைய தளங்கள்!

வேலை வாய்ப்பு தேடலில் வெற்றி பெற!

பணம் செய்ய உதவும் இணையதளங்கள்

Scientific Information- அறிவியல் பற்றிய தளங்கள்

Video Sites

E Books – மின் புத்தகங்கள்

Technology Information

பங்குச் சந்தை பற்றிய இணையதளங்கள்