காரில் கலக்குவது எப்படி?

ஜூலை 2, 2010

இந்த அற்புதமான கார் வித்தை வீடியோவைப் பாருங்கள்…

தயவு செய்து இது போல் முயற்சிக்க வேண்டாம்.

Other Videos from this Blog:

Train without Stops – From China

Sunitha Krishnan @ TED.Com

Best Videos of Cricket

SixthSense technology – TED.Com Video

CII Sohrabji Godrej Green Business Center Hyderabad

Advertisements

Best Cosmetics for Life

ஜூன் 23, 2010

The best cosmetics in life

Have all them in Life for Better Tomorrows!

TRUTH for Lips....

PITY for Eyes....

CHARITY for Hands.....

கலாம்

SMILE for Face....

LOVE for Heart...


நூறாவது பதிவு – Rammohan’s Blog

ஜூன் 2, 2010

இதோ வந்துவிட்டது நூறாவது பதிவு….

எத்தனை ரன்கள் எடுத்தாலும் நூறு அடித்தவுடன் வருகின்ற மகிழ்ச்சி, ஆரவாரம் , கொண்டாட்டம் இருக்கிறதே! அது தான் நூறு என்ற எண்ணின் தனிச் சிறப்பு!

நவம்பர் 26,2008 பதிவுலகில் WordPress வாயிலாக நுழைந்த நாள். அதற்கு முன்னர் Blogspot ல் வலைப்பூ வைத்திருந்தாலும் நாம் எழுதி என்னத்த சாதிக்கப் போகிறோம் என்ற ஒரு எண்ணம்/ சோம்பல் இருந்தது. Blospot ல் இருந்த Themes பிடிக்காததாலும், WordPress ன் எளிமையான அமைப்பாலும் இங்கு வந்தாயிற்று…

இணையதளங்களுக்கு சமூக மாற்றத்திற்கு வித்திடும் சக்தி இருக்கின்றது என்பதை கண்கூடாக ஆனந்த விகடனின் கட்டுரையான விகடன் ஸ்டார் அலேக்யா வும், குமுதத்தின் சாதித்துக் கொண்டிருக்கும் செந்தில்குமார் கட்டுரையும் கண்கூடாக உணர்த்தியது. இக்கட்டுரைகள், இவர்களது செயல்பாடுகள் தந்த உற்சாகத்தால் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன், எனக்கென்று சில கொள்கைகள் வகுத்துக் கொண்டு! பதிவில் எழுத விஷயங்கள், படங்கள், காணொளிகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் தனிமனித/ சமூக முன்னேற்றத்திற்கு வித்திடும் பதிவுகளை மட்டும் எழுதுவது/ பகிர்ந்து கொள்வது என்ற உறுதி கொண்டேன். அதனால் தன்னம்பிக்கை, தொழில்நுட்பம், சமூக மேம்பாடு அவ்வப்போது சற்று ’மதிமயக்காத’ பொழுதுபோக்கு என்று எனக்கே உரிய பாதையை வகுத்துக் கொண்டேன்.

பா.ராகவன் அவர்கள் தனது Excellent புத்தகத்தில் எழுதிய, ”புத்தகம் என்பது வாசிப்பவரை ஒரு அங்குலமாவது உயர்த்த வேண்டும்” என்கிற கூற்று பதிவுலகத்திற்கும் பொருந்தும். அதனால் ஒவ்வொரு பதிவையும், ”வாசிப்பவர்கள் ஒரு mm ஆவது உயர வேண்டும்” என்று மிக்க கவனத்துடன் பதிப்பிக்கிறேன்.

Tamilish தளத்தின் வருகைக்குப் பின்னர் தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் அதிகமாயினர் என்றாலும், தரமான இடுகைகளுக்கு இருக்கும் ஆதரவு குறைவு என்பது பல சமயங்களில் காணப் பெற்றேன். என் தளத்திற்கென்று தனியாக வாசகர்கள் இல்லாதது, குறைவான இடுகைகளிடுவது, பின்னூட்டங்களுக்கு சரியான பதிலளிக்காமலிருப்பது, ”காரசாரமாக” பதிவுகள் எழுதாமல் ”ஒரு mm ஆவது உயர வேண்டும்” போன்ற ”கொள்கைப் பிடிப்புகளை” வைத்திருப்பது போன்றவையும் குறைவான பார்வைகள்/ பின்னூட்டங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்பதை உணர்ந்தாலும், அதனைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் மன நிறைவுடன், நிதானமாக எடுத்து வைக்கிறேன் ஒவ்வொரு அடியையும்!

–  ராம்மோகன்


Creative Ads of Gawaskar

மே 11, 2010

சென்னையை சேர்ந்தவர் கவாஸ்கர் விஸ்வநாதன். இவர் தனது கற்பனைத் திறமையால் பல சமுக நலன் மிக்க விளம்பரங்களை  உருவாக்கி தனது வலைப் பதிவில் (My Creatives) இணைத்துள்ளார். ஒரு தமிழருககுள்ளே   ஒளிந்திருந்த கற்பனைத் திறமையை பாராட்டும் வாய்ப்பாகவும் அவரது திறமைகளை எனது வலைப் பக்கத்திற்கு வருபவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக இதைக்கருதுகிறேன்.

இதோ முதலாவது படைப்பு.

இன்றைய அவசியத்தேவை….?

மரங்கள்.

இதே நிலை நீடித்தால் இந்தியாவின் தேசியக் கோடியில் பசுமையின் அடையாளமான பச்சை நிறம் காணாமல் போய்விடும் என்கிறார்.அதனால் மரம் வெட்டுவதை நிறுத்தி விடுங்கள்!

இந்த படத்தை பார்த்தீர்களா ?

ஏசு  சிலுவை இல்லாமல் இருக்கிறாரா?

மரங்கள் பற்றாக்குறை!

Drink & Drive என்பது Drink & Die என்பதே!

இதோ இரத்த தானைத்தை வலியுறுத்தும் அற்புதமான படைப்பு.

He is not alive now

என்ற ஒரு வரிக் கதையை

He is alive now

என்று மாற்றும் சக்தி நம்மிடம் தான் உள்ளது.

அதனால் இரத்த தானம் செய்வோம் என்கிறார்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த தனது வழிமுறைகளைக் சொல்கிறார். இதோ…

வளரும் தமிழரை வாழ்த்துவோம்  வாருங்கள்!

அவரது இணையம்: http://www.gawaskar.blogspot.com/

(மேலும் பல விளம்பர படங்கள் காணக் கிடைக்கின்றன)

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்

Recent Posts:

பணம் செய்ய உதவும் இணையதளங்கள்

Technology Development – Video

மே தின வாழ்த்துக்கள்!

கன்னியாகுமரி புகைப்படங்கள்

Phobia – பயம் பயமறியாது!

Google India Shopping Tool


Technology Development – Video

மே 4, 2010

இந்த வீடியோவைப் பாருங்கள்..உலகம் எத்தனை வேகமாக முன்னேறி வருகிறது என்பது தெரியும்…

இனி மேலாவது நாளை, நாளை என்று  எந்த வேலையயும் தள்ளிப் போடாமல், இன்றே, இப்பொழுதே என்று செய்து முடித்து வெற்றி வாகை சூடுவோமாக!

”சரி சரி வீடியோவப் பத்தி சொல்லு” என்கிறீர்களா? இதோ சில….

அமெரிக்க மக்கள் தொகையை விட IQ அதிகமுள்ள 25% இந்தியர்கள் அதிகமிருப்பர்.

8 ல் 1 அமெரிக்க தம்பதியரின் முதல் சந்திப்பே இணையத்தில் தான்.

200 மில்லியன் உறுப்பினர்கள் Myspace  தளத்தில் உள்ளனர். Myspace ஒரு நாடாக இருந்தால் அது,

உலகில் மக்கள் தொகையில் 5ஆவது பெரிய நாடாயிருக்கும்.

Google  ல் ஒரு மாதத்திற்கு 31 பில்லியன் தேடல்கள் நடக்கின்றன. அப்படீன்னா B.G (Before Google) யுகத்தில் மக்களின் கேள்விகளிக்கு யார் விடையளித்திருப்பார்கள்?

50 மில்லியன் பேரை சென்றடைய Radio வுக்கு 38 வருடங்கள், TV க்கு 13 வருடங்கள் பிடித்தன. ஆனால் இணையத்திற்கு 4 வருடங்களும் Ipod க்கு 3 வருடங்கள், Facebook ற்கு 2 வருடங்களுமே ஆனது.

ஷேக்ஸ்பியர் இருந்த காலத்தை விட தற்போது ஆங்கில எழுத்துக்கள் 5 மடங்கு அதிகமாயிருக்கின்றது.

தொழில்நுட்பத் தகவல்கள் 2 வருடத்திற்கு ஒரு முறை இரு மடங்காகிறது. அப்படின்னா 1 Year ல படிக்கிற பாடம் 3 rd  Year ல Outdate ஆயிருக்கும்.

2049 ல உலகத்தில இருக்கற மனுசங்க வேலை எல்லாத்தையும் செய்யற மாதிரி ஒரு கம்ப்யூட்டர் கண்டுபிடிச்சிருப்பாங்க…

என்ன தலை சுத்துதா? கீழே விழறதுக்கு முன்னாடி,

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்.

Recent Posts:

Technology Development – Video

மே தின வாழ்த்துக்கள்!

கன்னியாகுமரி புகைப்படங்கள்

Phobia – பயம் பயமறியாது!

Google India Shopping Tool


Google India Shopping Tool

ஏப்ரல் 14, 2010

Google தனது இந்திய சேவையின் மேலும் ஒரு அம்சமாக Shopping Tool ஐ வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 30,000 இணையதளங்களில் இருந்து தகவல்களை சேகரித்து நமக்கு கொடுக்கும்.

எடுத்துக்காட்டாக Sony Ericsson k810i என்ற மொபைல் போனின் விலை பற்றி அறிய,

1.Google.co.in இணையதளத்திற்கு செல்லுங்கள்.

2. Search boxல் Sony Ericsson k810i என்று Type செய்து Search செய்யுங்கள்.

3. இப்போது மேலே உள்ள Show Options என்னும் இணைப்பை அழுத்துங்கள்.

4. இடது புறம் உள்ள Shopping என்னும் இணைப்பை அழுத்தி Sony Ericsson k810i எந்த விலையில் இணையத்தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

5. இடது புறம் உள்ள விலையை வைத்து வடிகட்டும் வசதியினையும் நமது Price Range கொடுத்தும் உபயோகித்துக் கொள்ளலாம்.

இணையதளத்தின் மூலம் பொருட்களை வாங்குகிறோமோ, இல்லையோ Washing Machine, TV, Refrigerator, Laptop போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கும் முன் அதன் விலைப் பட்டையை முடிவு செய்து குறைவான விலைக்கு வாங்க இத்தளம் உதவிடும் என நினைக்கிறேன்.

வாழ்க Google சேவை!

மேலும் கூகுளின் SMS Channel-இலவச சேவை பற்றி அறிய..

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்

Recent Posts:

விக்ருதி வருட‌ ராசி பலன்கள்

விக்ருதி – தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Excellent Excel Games for Download

சுயம் போற்றி…தன்னம்பிக்கையூட்டும் கவிதை

Chicken a la carte -Short Film: 6 Min



Excellent Excel Games for Download

ஏப்ரல் 12, 2010
நண்பர்களே,
கீழே அற்புதமான Excel Games க்கான இணைப்புகள் கொடுத்துள்ளேன். சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் அதே நேரம் அறிவுக்கூர்மை, மன ஒருமைப்பாட்டை வளர்க்கும் விளையாட்டுக்களாக இருக்கும் என நம்புகிறேன்.
Wing Match Ding என்ற இந்த விளையாட்டு ஒரே மாதிரியான தோற்றங்களை கண்டறியும் ஒன்று. நீங்கள் சரியாகச் சொல்ல சொல்ல Level அதிகரித்துக்கொண்டே செல்லும்.
SUDOKU என்னும் விளையாட்டுப் புதிர்களை தீர்க்க உதவும் கோப்பு இதோ.ஆங்கில, தமிழ் தினசரிகளில் தவிர்க்க முடியாத கணிதப்புதிராகி விட்டது இது. நீங்கள் விடை கண்டறிந்த பிறகு சரிபார்க்க உபயோகித்துக் கொள்ளலாம்.
berulex என்னும் விளையாட்டு.ஒரே மாதிரியான பந்துகளை ஓடிக்கொண்டிருக்கும் வட்டத்தி சேர்ப்பது.
இது சும்மானாச்சி காமெடிக்கி…உங்க பேர சொன்னா உங்களுக்கேத்த வேலய சொல்லும்.

இது மினி கோல்ஃப் விளையட்டு. Mouse மூலமாகவே இதனை விளையாடமுடியும். Target fix செய்வதிலும்,அதனை சரியாக Achieve செய்யவும் இது உதவுகிறது என்கின்றனர்.
இது சிறிது அறிவை வளர்த்திட உதவும் விசயம் (Close பண்ணீறாதீங்க) …35 கார் தயாரிக்கும் கம்பெனிகளின் லோகோக்கள் உள்ள Quiz இது. NDTV Profit, Business Line போன்றவற்றில் கேட்கும் கேள்விகளைப் போன்றது..கார் மீது பிரியம் உள்ளவர்களும் விளையாடி அறிவைச் சோதித்துக் கொள்ளலாம்.

எனக்கு கார் கம்பெனிகள் மட்டுமல்ல,அத்தனை கம்பெனிகளும் அத்துபடி என்கிறீர்களா? இதோ உங்களுக்காக..

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்க

வும்

Recent Posts:

சுயம் போற்றி…தன்னம்பிக்கையூட்டும் கவிதை

Chicken a la carte -Short Film: 6 Min

LeoFEST- தினமணி செய்தி

உலகின் பசி போக்குங்கள்…Free Rice.Com

3000 ஆவது வருடம்..

VICTORY- வெற்றிக்கான விளக்கம்!