kelungalplus… ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில்…

ஜூலை 29, 2010

கேளுங்கள் பிளஸ் … ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அற்புதமான நிகழ்ச்சி…

இதில் கல்வி, அறிவியல், கலை, சரித்திரம், கம்ப்யூட்டர், விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமகாலத்திய நிகழ்வுகள் குறித்த நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்படுகிறது. இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களின் பதில்களும் அவை தொடர்பான படக் காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன.

எல்லா வயதினருக்கும் குறிப்பாக மாணவர்களுக்குப் பயன் தரும் இந்த நிகழ்ச்சிக்கு கேள்விகளை அனுப்ப விரும்புவோர் தபால், இ-மெயில் அல்லது எஸ்எம்.எஸ் மூலம் அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேளுங்கள், ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி, தபால் பெட்டி எண் -3173,  சென்னை -32

இ-மெயில்: kelungalplus@gmail.com

நிகழ்ச்சி நேரங்கள்:

On Sundays:        5.30 pm

On Tuesdays:     12.30 pm (Retelecast – Subject to changes)

On Thursdays:    9.30 pm (Retelecast – Subject to changes)

நிகழ்ச்சியை நடத்தும் ஆதித்யா அவர்களின் இணையம்:

http://kelungal.webs.com/

kelungal plus இன்றைய நிகழ்ச்சியில் Kaprekar’s constant பற்றி தெரிந்து கொண்டேன். Kaprekar என்பவர் இந்திய கணித மேதை.

6174 மற்றும் 495 Kaprekar’s constant எனப்படுகிறது. இதனை அறிய ,

ஏதேனும் 4 இலக்க எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள்.

பெரிய இலக்கத்தில் இருந்து சிறிய இலக்கம் நோக்கி எழுதுங்கள்.அதேபோல் சிறிய இலக்கத்தில் இருந்து பெரிய இலக்கம் நோக்கி எழுதுங்கள். இரண்டையும் கழித்தால் Kaprekar’s constant வருகிறதா என்று பாருங்கள். இல்லையெனில் மறுபடியும் தொடருங்கள்… கண்டிப்பாக இறுதியில் 6174  வரும் என்கிறார் Kaprekar.

For example, choose 3524:

5432 – 2345 = 3087

8730 – 0378 = 8352

8532 – 2358 = 6174

9831 reaches 6174 after 7 iterations:

9831 – 1389 = 8442

8442 – 2448 = 5994

9954 – 4599 = 5355

5553 – 3555 = 1998

9981 – 1899 = 8082

8820 – 0288 = 8532 (rather than 882 – 288 = 594)

8532 – 2358 = 6174

எப்பூடி?

இந்த இடுகை ta.indli.Com பயனர்களை சென்றடைய இங்கே வாக்களியுங்கள்.

இன்று புதிதாய் கற்போம்! கேளுங்கள் பிளஸ் மூலமாக…