நோய் மருந்து மருத்துவம் பற்றிய இணைய தளங்கள்!

ஓகஸ்ட் 7, 2010

“எங்கெங்கு காணினும் போலிகளடா! என்று சொல்லும் அளவுக்கு போலிகள் நிறைந்துள்ள காலமிது. போலி மருத்துவர்கள் கைது, போலி மருந்துகள் பறிமுதல் என்றெல்லாம் செய்திகள் வரும்போது நம் இதயத்துடிப்பு எகிறுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

போலி எது? அசல் எது? என்று அவ்வளவு எளிதாகப் பிரித்தறிய இயன்றிடாதபடி நடமாடும் இந்த ”பசுத் தோல் போர்த்திய பன்றிகளிடமிருந்து” தப்பிக்க வழி தான் என்ன? என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது தான் நச்சென்று நான்கு இணைய தளங்கள் கிடைத்தன. அவற்றைப் பகிரும் முகம் தான் இப் பதிவு… நோய், மருந்து, மருத்துவம் பற்றிய இணைய தளங்கள்!

முதலாவதாக Drugs.Com இணைய தளம் பற்றி,

நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த மருந்து விற்பன்னர்கள் சேர்ந்த்து நடத்தும் Drugsite Trust ஆல் நடத்தப்படும் இணைய தளம். 107,000  மருந்துகள் A to Z வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த Food and Drug Administration (FDA) புதிதாக அங்கீகரிக்கும் மருந்துகள் பற்றிய விவரங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன. இத்தளத்தினை எவ்வாறு உபயோகிப்பது?

நம்ம ரஜினி சிவாஜி படத்துல வெள்ளையா மாற ஒரு கிரீம் போடுவாறே அது மாதிரி “ஆறே வாரங்களில் சிகப்பழகு பெற” எதாவது கிரீம் போடுறீங்களா? அந்த மருந்து அட்டையில் உள்ள அதன் வேதிப் பெயரைக் கண்டறியுங்கள்… உதாரணத்திற்கு, Hydroquinone. இதனை இத் தளத்தில் உள்ளீடு செய்து தேடு என்று கட்டளை பிறப்பித்தால்,

இந்த மருந்து நம் உடலில் செய்யும் மகத்துவங்கள் என்ன?

மருந்தை உபயோகிக்கும் முன் என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும்?

எவ்வாறு உபயோகிக்க வேண்டும்?

அளவுக்கு அதிகமானால் (Over Dose) என்னென்ன பிரச்சினைகள் வரும்?

என்று எல்லா விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கிறது.

இதன் மூலம் நமக்கு மருந்தெழுதிக் கொடுத்த Doctor, அந்த மருந்தை எடுத்துக் கொடுத்த Pharmacist ஆகியோர் (போலிகளாக இருக்கும் பட்சத்தில்) தவறுகளைத் தவிர்க்கலாம். உண்மையில் அந்த மருந்து நமக்குத் தேவை தானா? இல்லை காசுக்கு வந்த கேடா? என்றும் அறியலாம்.

சரி அடுத்த இணையத்துக்கு இணைக்கறதுக்கு முன்னாடி இன்னொரு விஷயத்தையும் பாத்துருவோம். மருந்துகளில் இருக்கும் USP, IP, BP என்ற எழுத்துக்களை பார்த்திருக்கிறீர்களா? அப்படின்னா,

USP: United States Pharmacopeia
IP: Indian Pharmacopeia
BP: British Pharmacopeia

என்று பொருள் படும் . எந்த நாட்டு மருத்துவ விதிகளின் படி உருவாக்கப்பட்ட கலவை இந்த மருந்து என்பதனைக் குறிக்கும்.

இரண்டாவதாக,

”கண்டதைப் படித்தவன் பண்டிதன் ஆவான்” அப்படின்னு கேள்விப் பட்டு இருக்கீங்களா? அதற்காகவே வடிவமைக்கப் பட்ட இணையம் தான் விக்கிபீடியா. எதனைக் கேட்டாலும் எங்கிருக்கிறது என்று சொல்லும் Google இணையத்தைவிட, எதனையும் தன்னகத்தே கொண்ட Wikipedia இணையதளம் நமக்கெல்லாம் ஒரு வரப் பிரசாதம். பல்துறைக் கலைக் களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியாவில் நாம் என்ன வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, ECG என்று தேடுங்கள்.. ECG  பற்றிய அனைத்தும் கிடைக்கும்.. பொறுமையும், நேரமும், கற்றுக் கொள்ளும் ஆர்வமும் இருப்பவர்களுக்கு கலங்கரை விளக்கம் விக்கிபீடியா.

மூன்றாவதாக,

நமக்கென்று ஒரு நாளும் தளர்வறியாமல் துடிக்கும் இதயத்தைப் பற்றி என்றாவது ஒரு நாள் நாம் அக்கறை கொண்டுள்ளோமா?

சச்சின் டெண்டுல்கரின் சாதனை சதங்களின் எண்ணிக்கையை விரல் நுனியில் வைத்திருக்கும் நாம், நம் விரல் நுனியில் இருந்து எடுக்கப்படும் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பற்றி என்றாவது சிந்தித்ததுண்டா?

ஆம் எனில் நன்று. இல்லையெனில் இதோ முத்தான மூன்றாவது இணைய தளம் medicinenet.com.

அற்புதமான பல விஷயங்களை உள்ளடக்கிய இந்த இணையதளம். மருத்துவரின் அறிவை நீங்கள் பெற உதவுகிறோம் என்கிறது இது.

Slideshows

Diseases & Conditions

Symptoms & Signs

Procedures & Tests

Medications

Image Collection

Medical Dictionary

Pet Health

என்று பிரிவுகள் அடங்கியது.

Slide Show பிரிவு அழகான புகைப்படங்களுடன், வலப்புறம் அதற்கேற்ற குறிப்பினையும் வழங்குகிறது.

உடல் எடை குறைக்க,

முடி உதிர்வதைத் தடுக்க,

புகைப் பழக்கத்தைக் கைவிட,

பற்களை வெண்மையாக்க,

உணவுகள் மூலம் மூளையை சுறுசுறுப்பாக வைக்க

என்று மொத்தம் 31 Slide Showக்கள் அமைக்கப் பட்டுள்ளன.

அடுத்துள்ள Diseases & Conditions பிரிவில் ஒரு நோய் பற்றிய அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. A to Z வரிசையில் அமைந்துள்ள இது நோயின் அனைத்து நிலைகள், எவ்வாறு உருவாகிறது, என்னென்ன சிகிச்சை முறைகள் மேற்கொள்ளலாம் என்பது பற்றி விவரிக்கிறது.

Symptoms & Signs பகுதியில் ஆண், பெண் உடல் புகைப்படத்துடன் எந்தெந்த பகுதியில், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்று விளக்கப்படுகிறது.

எனக்கு கால் வலிக்குது, கை வலிக்குது என்று வலியை உணர்பவர்கள் என்னென்ன வியாதியாக இருக்கலாம் என்று இப்பகுதியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்துள்ள Procedures & Tests பகுதியில்

நம் உடம்பில் என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன?

ஏன் செய்யப்படுகின்றன?

எது Normal Value?

அதிகமாக இருந்தால் என்ன?

குறைவாக இருந்தால் என்ன?

என்று விலாவாரியாக விளக்கம் தரப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு Hemoglobin அப்பிடிங்கற இரத்த சிவப்பு செல்களில் ஆக்ஸிஜனை எடுத்துச்செல்லும் ஊர்தி பற்றி பார்ப்போம். ஆண்களுக்கு 14-18 gm/dl  பெண்களுக்கு 12-16 gm/dl  இருக்க வேண்டும். இது குறைவாக இருந்தால் அனீமியா என்னும் நோய் தாக்குகிறது. அதிகமாக இருப்பது எம்ப்ஸீமா எனப்படுகிறது.

காய்ச்சல், தலைவலி அப்படீன்னு ஆஸ்பத்திரிக்கு போனாலே Blood Test, Urine Test ன்னு போட்டுத் தாக்குறாங்களா? மறக்காம அவங்க கிட்ட Test Reports வாங்கீட்டு வந்துருங்க… நம்ம உடம்ப பத்தி நாமளே தெரிஞ்சுக்கலாம்.

நான்காவதாக, Doctor.NDTV.Com இணைய தளம்,

…for the better health of Indians  என்னும் நோக்கத்துடன், 311 Experts மூலம் மெருகூட்டப்படும்  NDTV இணையம் இது. இங்கே நம் உடல் நலம் சம்பந்தப்பட்ட கேள்விகளை நாம் கேட்கலாம். விடை கிடைக்கும். இது போக Calculators என்னும் பகுதியில் Body Mass Index என்னும் உடல் பருமன் கணக்கிடும் பகுதி, உடல் நலம் சார்ந்த கட்டுரைகள் , புகைப்படங்கள் ஆகியவை அமைந்துள்ளன. இவை அனைத்தையும் எழுதுபவர்கள் மருத்துவர்கள் என்பது இதன் தனிச் சிறப்பு.

Science Is A Good Servant But A Bad Master என்பார்கள். மேற்கூறிய இணையங்களையும் அவ்வாறே பயன்படுத்துங்கள். .Servant ஆக மட்டும். அவற்றை Master ஆக விடாதீர்கள். போலிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள, மருத்துவ அறிவை வளர்த்துக் கொள்ள மட்டும் பயன்படுத்துங்கள். சுய மருத்துவத்தில் இறங்கி விட வேண்டாம்.

இந்த இடுகை ta.indli.Com பயனர்களை சென்றடைய இங்கே வாக்களியுங்கள்.

உங்கள் நண்பர்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றிகளுடன்,

ராம்மோகன்.

பிற பயனுள்ள இணைய தளங்கள் பற்றிய இடுகைகள்:

வேலை வாய்ப்பு தேடலில் வெற்றி பெற!

பணம் செய்ய உதவும் இணையதளங்கள்

Scientific Information- அறிவியல் பற்றிய தளங்கள்

Video Sites

E Books – மின் புத்தகங்கள்

Technology Information

பங்குச் சந்தை பற்றிய இணையதளங்கள்

Advertisements

வேலை வாய்ப்பு தேடலில் வெற்றி பெற!

ஜூலை 10, 2010

வேலை தேடுவது என்பது கனிகள் நிறைந்த மாமரத்தில் இருந்து கனியைப் பறிப்பது போன்றது.

வேலை தேடும் வேலை!

சிலர் கண்ணை மூடிக் கொண்டு மரத்தில் கல்லெறிவர்(அனைத்து    வேலைகளுக்கும் விண்ணப்பிப்பது),

சிலர் அர்ச்சுனன் போல் குறி வைத்துத் தாக்குவர்(தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலைக்கு மட்டும் விண்ணப்பிப்பது),

சிலர் மாமரத்தின் அடியில் படுத்துக் கொண்டு மாங்கனிகள் கிடைக்காதா என ஏங்குவர் ( மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு காத்திருப்பர்).

எது எப்படியோ!

வேலை வாய்ப்புத் தேடலில் வெற்றி பெற இணையதளங்களின் பங்கு இன்றியமையாதது. அவைகளைப் பற்றிப் பார்ப்போம்!

வேலை வேண்டுமா வேலை!

முதலில்,

Naukri.com இணையதளம். என் நினைவறிந்த காலத்தில் இருந்து முதலிடத்தில் இருக்கும் வேலை வாய்ப்பு தேடல் இயந்திரம். (Job Search Engine). இத்தளத்தில் நீங்கள் வேலை தேடுவது, விண்ணப்பிப்பது மட்டுமல்லாது, பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இருக்கும் தேவை பற்றிய அறிவிப்புகளை, அந்த நிறுவனங்களின் Career இணைப்பிலிருந்து பெறலாம். இது மட்டுமல்லாது உங்கள் தகுதிக்கேற்ற வேலைகளை உங்கள் மின்னஞ்சல், அலைபேசியில் பெறுவதோடு SMS மூலமும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இரண்டாவதாக,

Shine.com வலைத்தளம். வேலை வாய்ப்புத் தேடலுக்கான அனைத்து அம்சங்களுடன், இதன் மற்ற சிறப்பம்சங்கள் Career Advice மற்றும் Industry Information. வேலை தேடும் வேலையின் அடுத்த அங்கமான நேர்முகத்தேர்வுக்கு இந்த இரண்டு பிரிவுகளும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

மூன்றாவதாக,

Freshersworld.com இணையம். முற்றிலும் புதியவர்களுக்கானது. கல்லூரியில் இருந்து வெளியே காலடி எடுத்து வைப்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது. வேலைவாய்ப்புத் தேடலின் முதல் மைல் கல்லான Written Test என்றாலே பலருக்கு அலர்ஜி. இதில் வெற்றி பெற வெவ்வேறு நிறுவனங்களின் Placement Papers இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போக MBA, GATE, GRE போன்ற முதுகலைக் கல்லூரிப் படிப்புகளுக்குத் தயாராவதற்கான வளங்கள் கிடைக்கின்றன.

விஸ்வநாதன் வேலை வேண்டும்!

அடுத்ததாக

Careerage.com இணையத்தளம். உங்கள் Qualification மூலம் வேலை தேடும் சிறப்பு இதன் வெற்றிக்கான காரணம். மற்ற வேலை வாய்ப்பு தேடல் இயந்திரங்களின் குறையும் இதுவே. கல்லூரியில் படித்த படிப்பை தேர்வு செய்து வேலை தேடலாம் இந்த இணையத்தில்.

ஐந்தாவதாக,

fundoodatajobs.com தளம். நீங்கள் இத்தளத்தில் நேரடியாக நிறுவனங்களுக்கே உங்கள் Resume அனுப்ப முடியும். Apply Directly to Companies என்ற வாசகத்தை தாங்கி வரும் இந்த இணையம் உங்கள் வேலை வேட்டையில், வெற்றி பெற உதவும் என்பதில் சந்தேகமில்லை.

சரி, சரி,

”அரைக் காசு சம்பளமானாலும் அரசாங்க சம்பளம், கால் காசு சம்பளமானாலும் கவர்ன்மெண்ட் சம்பளம்” என்ற நோக்கம் கொண்டவரா நீங்கள்… அரசாங்க வேலையில் உள்ள காலியிடங்கள் பற்றிய அறிவிப்புகளை தரும் தளங்கள் இதோ… sarkarjobs.comமற்றும் http://sarkari-naukri.blogspot.com/

A to Z வேலை வாய்ப்புத் தளங்களின் தொகுப்பு:

http://jobsitesindia.com

உங்கள் வேலை தேடும் படலத்தில் வெற்றிச் செய்தியைப் பெற விழையும்,

ராம்மோகன்.


Best Cosmetics for Life

ஜூன் 23, 2010

The best cosmetics in life

Have all them in Life for Better Tomorrows!

TRUTH for Lips....

PITY for Eyes....

CHARITY for Hands.....

கலாம்

SMILE for Face....

LOVE for Heart...


நூறாவது பதிவு – Rammohan’s Blog

ஜூன் 2, 2010

இதோ வந்துவிட்டது நூறாவது பதிவு….

எத்தனை ரன்கள் எடுத்தாலும் நூறு அடித்தவுடன் வருகின்ற மகிழ்ச்சி, ஆரவாரம் , கொண்டாட்டம் இருக்கிறதே! அது தான் நூறு என்ற எண்ணின் தனிச் சிறப்பு!

நவம்பர் 26,2008 பதிவுலகில் WordPress வாயிலாக நுழைந்த நாள். அதற்கு முன்னர் Blogspot ல் வலைப்பூ வைத்திருந்தாலும் நாம் எழுதி என்னத்த சாதிக்கப் போகிறோம் என்ற ஒரு எண்ணம்/ சோம்பல் இருந்தது. Blospot ல் இருந்த Themes பிடிக்காததாலும், WordPress ன் எளிமையான அமைப்பாலும் இங்கு வந்தாயிற்று…

இணையதளங்களுக்கு சமூக மாற்றத்திற்கு வித்திடும் சக்தி இருக்கின்றது என்பதை கண்கூடாக ஆனந்த விகடனின் கட்டுரையான விகடன் ஸ்டார் அலேக்யா வும், குமுதத்தின் சாதித்துக் கொண்டிருக்கும் செந்தில்குமார் கட்டுரையும் கண்கூடாக உணர்த்தியது. இக்கட்டுரைகள், இவர்களது செயல்பாடுகள் தந்த உற்சாகத்தால் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன், எனக்கென்று சில கொள்கைகள் வகுத்துக் கொண்டு! பதிவில் எழுத விஷயங்கள், படங்கள், காணொளிகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் தனிமனித/ சமூக முன்னேற்றத்திற்கு வித்திடும் பதிவுகளை மட்டும் எழுதுவது/ பகிர்ந்து கொள்வது என்ற உறுதி கொண்டேன். அதனால் தன்னம்பிக்கை, தொழில்நுட்பம், சமூக மேம்பாடு அவ்வப்போது சற்று ’மதிமயக்காத’ பொழுதுபோக்கு என்று எனக்கே உரிய பாதையை வகுத்துக் கொண்டேன்.

பா.ராகவன் அவர்கள் தனது Excellent புத்தகத்தில் எழுதிய, ”புத்தகம் என்பது வாசிப்பவரை ஒரு அங்குலமாவது உயர்த்த வேண்டும்” என்கிற கூற்று பதிவுலகத்திற்கும் பொருந்தும். அதனால் ஒவ்வொரு பதிவையும், ”வாசிப்பவர்கள் ஒரு mm ஆவது உயர வேண்டும்” என்று மிக்க கவனத்துடன் பதிப்பிக்கிறேன்.

Tamilish தளத்தின் வருகைக்குப் பின்னர் தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் அதிகமாயினர் என்றாலும், தரமான இடுகைகளுக்கு இருக்கும் ஆதரவு குறைவு என்பது பல சமயங்களில் காணப் பெற்றேன். என் தளத்திற்கென்று தனியாக வாசகர்கள் இல்லாதது, குறைவான இடுகைகளிடுவது, பின்னூட்டங்களுக்கு சரியான பதிலளிக்காமலிருப்பது, ”காரசாரமாக” பதிவுகள் எழுதாமல் ”ஒரு mm ஆவது உயர வேண்டும்” போன்ற ”கொள்கைப் பிடிப்புகளை” வைத்திருப்பது போன்றவையும் குறைவான பார்வைகள்/ பின்னூட்டங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்பதை உணர்ந்தாலும், அதனைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் மன நிறைவுடன், நிதானமாக எடுத்து வைக்கிறேன் ஒவ்வொரு அடியையும்!

–  ராம்மோகன்


Creative Ads of Gawaskar

மே 11, 2010

சென்னையை சேர்ந்தவர் கவாஸ்கர் விஸ்வநாதன். இவர் தனது கற்பனைத் திறமையால் பல சமுக நலன் மிக்க விளம்பரங்களை  உருவாக்கி தனது வலைப் பதிவில் (My Creatives) இணைத்துள்ளார். ஒரு தமிழருககுள்ளே   ஒளிந்திருந்த கற்பனைத் திறமையை பாராட்டும் வாய்ப்பாகவும் அவரது திறமைகளை எனது வலைப் பக்கத்திற்கு வருபவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக இதைக்கருதுகிறேன்.

இதோ முதலாவது படைப்பு.

இன்றைய அவசியத்தேவை….?

மரங்கள்.

இதே நிலை நீடித்தால் இந்தியாவின் தேசியக் கோடியில் பசுமையின் அடையாளமான பச்சை நிறம் காணாமல் போய்விடும் என்கிறார்.அதனால் மரம் வெட்டுவதை நிறுத்தி விடுங்கள்!

இந்த படத்தை பார்த்தீர்களா ?

ஏசு  சிலுவை இல்லாமல் இருக்கிறாரா?

மரங்கள் பற்றாக்குறை!

Drink & Drive என்பது Drink & Die என்பதே!

இதோ இரத்த தானைத்தை வலியுறுத்தும் அற்புதமான படைப்பு.

He is not alive now

என்ற ஒரு வரிக் கதையை

He is alive now

என்று மாற்றும் சக்தி நம்மிடம் தான் உள்ளது.

அதனால் இரத்த தானம் செய்வோம் என்கிறார்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த தனது வழிமுறைகளைக் சொல்கிறார். இதோ…

வளரும் தமிழரை வாழ்த்துவோம்  வாருங்கள்!

அவரது இணையம்: http://www.gawaskar.blogspot.com/

(மேலும் பல விளம்பர படங்கள் காணக் கிடைக்கின்றன)

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்

Recent Posts:

பணம் செய்ய உதவும் இணையதளங்கள்

Technology Development – Video

மே தின வாழ்த்துக்கள்!

கன்னியாகுமரி புகைப்படங்கள்

Phobia – பயம் பயமறியாது!

Google India Shopping Tool


பணம் செய்ய உதவும் இணையதளங்கள்

மே 7, 2010

ஏற்கனவே பங்குச் சந்தை பற்றிய இணையதளங்கள் இடுகைக்கு இருந்த வரவேற்பும் இந்த இடுகைக்குக் காரணம். இதுவரை இந்த இடுகை 600 முறை பார்வையிடப்பட்டுள்ளது. தினமும் ஒருவராவது இதனைப் படித்துப் பயன்பெறுகிறார். இது போன்ற பயனுள்ள இணையதளங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதன் விளைவே பின்வருகிறது.

பணம் சம்பாதிக்க, சேமிக்க, நல்வழியில் செலவழிக்க வழிகளை தந்துதவும் இணையங்களைக் காண்போம்.

முதலாவதாக,

Google  ளின் ஒரு சேவை. இங்கே யார் வேண்டுமானாலும் எந்த தலைப்பில் வேண்டுமானாலும் Tips கொடுக்கலாம். Google பயனர்கள் வாக்களிக்கலாம். சிறந்த Tips முன்னணியில் இருக்கும். Finance தலைப்பிலுள்ள Tips மிகவும் பயனளிக்கும் என நம்பலாம். Online ல் பில் கட்டணங்களை செலுத்துங்கள், நேரம், பெட்ரோல் ஆகியவற்றை சேமியுங்கள் (How to Pay your BSNL Bills Online?) என்பது போன்ற ஒரு வரி Tips நிறைய காணக் கிடைக்கின்றன.

இரண்டாவதாக,

இந்த இணையதளம் பன்முகத் தன்மைகள் கொண்டது. Loan, Life Insurance, Fixed Deposits போன்ற சேவை வழங்கும் நிறுவனங்களை Compare செய்ய உதவுகிறது. உதாரணத்திற்கு Fixed Deposit ற்கு அதிக வட்டி வழங்கும் Bank ஐ 39 வங்கிகள் அடங்கிய வரிசையில் இருந்து தேர்ந்தெடுக்கலாம். இதே போல் Mediclaim அல்லது மற்ற Insurance சேவையில் உள்ள நிறுவனங்களின் Premium தொகையை ஆராய்ந்து நமக்குத் தேவையான திட்டத்தை தேர்வு செய்யலாம்.

மூன்றாவதாக,

Google ன் Tipjar போன்றதொரு இணையதளம். சிறிது விளக்கங்களுடன். இங்கே பணத்தை சேமிக்க மட்டுமல்ல, Rapid share போன்ற இணையதளங்களில் Download செய்யும் நேரத்தை குறைக்க, புதிதாக சந்தைக்கு வந்துள்ள Gadgets இயக்குவது பற்றி அறிய, Software ன் Shortcut அறிந்து வேலைப்பளுவைக் குறைக்க என்று ஏகப்பட்ட பயனுள்ள செய்திகள் நிரம்பிக் கிடக்கின்றன.

நான்காவதாக,

பெரும்பாலும் இணையதளங்கள் வைத்து பணம் சம்பாதிப்பதைப் பற்றிக் கூறுகிறது. .Com Domain கள் வைத்திருப்பதன் பயன்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இன்று இணைய உலகில் Traffic, SEO என்னும் இரு காரணிகள் ஒரு இணையதளத்தின் வளர்ச்சிக்கான அவசியமானவை. இது பற்றிய உதாரணங்களும் தரப்பட்டுள்ளன.

ஐந்தாவதாக,

இங்கே தொழில்முனைவோருக்கான குறிப்புகள், Freelancing பற்றிய கட்டுரைகள், கல்லூரி மாணவர்களுக்கான பகுதி நேரத் தொழில்கள் என பல்வேறு கட்டுரைகள் விளக்கமாக, உதாரணங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆறாவதாக,

littlepeoplewealth.com இணையத்தில், 97 ways to Save Money என்னும் கட்டுரையில் உங்கள் செலவுகளைக் குறைப்பது, வருமானத்தினை அதிகரிப்பது, குழந்தைகள் செலவு, மளிகைச் செலவு போன்றவற்றைக் குறைப்பதற்கான வழிகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக,

http://taxworry.com/

ஜூலை மாதம் வந்தாலே, வருமான வரி கட்டவேண்டுமே என்று அடிவயிறு கலங்க ஆரம்பித்து விடும். இங்கே வருமான வரி பற்றிய பல்வேறு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

கடைசியாக,

20 Money Hacks என்னும் தலைப்பிலான இடுகை மாறுபட்ட கோணத்தில் ஆனால் எளிமையாக நம் நிதி நிலைமயை உயர்த்தும் வழிகளைச் சொல்கிறது. உதாரணத்திற்கு உடற்பயிற்சி செய்யுங்கள் என்கிறது. இது எவ்வாறு நம் நிதி நிலைமையை உயர்த்தும்? உடற்பயிற்சி உடலை நோயிலிருந்து காக்கும். அதனால் மருத்துவச் செலவுகள் குறைவதால் சேமிப்பு உயரும் என்கின்றது. இது போன்று பல கட்டுரைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

பணம் பற்றிய ஒரு கூற்று:

When you have Money in Hand, only you forget who are you,

When you donot have Money in your Hand, the whole world forgets who you are.

கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்கள் தங்கள் நிதிநிலையை எள்ளளவாவது உயர்த்த உதவும் என எண்ணுகிறேன்.

பணம் சேர்ப்பதோடல்லாது, ஏழை எளியோருக்கு கொடுத்து உதவுங்கள்.

தர்மம் தலை காக்கும்.

அதற்கான இணையங்களும் இதோ:

1. சென்னையைச் சேர்ந்த இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள சாரல் சமூக நல அமைப்பு – ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது. சாரலின் உதவிகள் புகைப்படத் தொகுப்பு, சாரலுக்கு நிதி உதவி அளிக்க


2. Give India என்னும் இணையவழி  200 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கும் அமைப்பு. மேலதிக விவரங்கள் Give India தளத்தில்


Technology Development – Video

மே 4, 2010

இந்த வீடியோவைப் பாருங்கள்..உலகம் எத்தனை வேகமாக முன்னேறி வருகிறது என்பது தெரியும்…

இனி மேலாவது நாளை, நாளை என்று  எந்த வேலையயும் தள்ளிப் போடாமல், இன்றே, இப்பொழுதே என்று செய்து முடித்து வெற்றி வாகை சூடுவோமாக!

”சரி சரி வீடியோவப் பத்தி சொல்லு” என்கிறீர்களா? இதோ சில….

அமெரிக்க மக்கள் தொகையை விட IQ அதிகமுள்ள 25% இந்தியர்கள் அதிகமிருப்பர்.

8 ல் 1 அமெரிக்க தம்பதியரின் முதல் சந்திப்பே இணையத்தில் தான்.

200 மில்லியன் உறுப்பினர்கள் Myspace  தளத்தில் உள்ளனர். Myspace ஒரு நாடாக இருந்தால் அது,

உலகில் மக்கள் தொகையில் 5ஆவது பெரிய நாடாயிருக்கும்.

Google  ல் ஒரு மாதத்திற்கு 31 பில்லியன் தேடல்கள் நடக்கின்றன. அப்படீன்னா B.G (Before Google) யுகத்தில் மக்களின் கேள்விகளிக்கு யார் விடையளித்திருப்பார்கள்?

50 மில்லியன் பேரை சென்றடைய Radio வுக்கு 38 வருடங்கள், TV க்கு 13 வருடங்கள் பிடித்தன. ஆனால் இணையத்திற்கு 4 வருடங்களும் Ipod க்கு 3 வருடங்கள், Facebook ற்கு 2 வருடங்களுமே ஆனது.

ஷேக்ஸ்பியர் இருந்த காலத்தை விட தற்போது ஆங்கில எழுத்துக்கள் 5 மடங்கு அதிகமாயிருக்கின்றது.

தொழில்நுட்பத் தகவல்கள் 2 வருடத்திற்கு ஒரு முறை இரு மடங்காகிறது. அப்படின்னா 1 Year ல படிக்கிற பாடம் 3 rd  Year ல Outdate ஆயிருக்கும்.

2049 ல உலகத்தில இருக்கற மனுசங்க வேலை எல்லாத்தையும் செய்யற மாதிரி ஒரு கம்ப்யூட்டர் கண்டுபிடிச்சிருப்பாங்க…

என்ன தலை சுத்துதா? கீழே விழறதுக்கு முன்னாடி,

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்.

Recent Posts:

Technology Development – Video

மே தின வாழ்த்துக்கள்!

கன்னியாகுமரி புகைப்படங்கள்

Phobia – பயம் பயமறியாது!

Google India Shopping Tool