ஹைகூ கவிதைகள்- இறையன்பு

ஜூலை 10, 2010

இறையன்பு அவர்கள் எழுதிய ”முகத்தில் தெளித்த சாரல்” புத்தகத்திலிருந்து….

தலைப்பு: வெட்டுப்பட்டால் பெட்டிக்குள்…

கருப்பொருள் ஹைகூ கவிதை:

“பெட்டிக்கு வந்த பிறகு

எல்லோருமே சமம்-

சதுரங்கக் காய்கள்” – ISSA

ஆங்கில மொழி பெயர்ப்பு:

Once in the box

everyone of them equal in the Chess pieces – ISSA

இறையன்பு அவர்கள் ஹைகூ கவிதை:

சதுரங்கக் காய்களில்

ராணிகளுக்குத் தான் மதிப்பு

அவற்றால் தான் யாரையும்

எப்படியும் வெட்ட முடியும்-

கவிழ்க்க முடியும்-

அழிக்க முடியும்.

மேலோட்டமாகப் பார்த்தால்

ராஜாக்களுக்குத்தான் சக்தி அதிகம்.

ஆனால் அந்த சக்தியைக்

கூட்டுபவர்களாகவும்

குறைப்பவர்களாகவும்,

குலைப்பவர்களாகவும்

இருப்பவர்கள் எப்போதும்

ராணிகளாய் இருக்கிறார்கள்.

சாம்ராஜ்யங்கள் பல சரிந்ததற்கு

ராஜாக்களைக்காட்டிலும்

ராணிகள் தான் காரணம்.

எவ்வளவு வலிமை பெற்ற சதுரங்கக்

காயாக இருந்தால் என்ன?

அது இருக்கும் இடத்தில் தான்

அதன் சக்தி

தீர்மானிக்கப்படுகிறது.

மூலையில் முடங்கினால்

ராணியைச் சின்ன கூனி கூட

வீழ்த்தலாம்

என்பதற்கு ராமாயணம்

மட்டுமல்ல

சதுரங்கமும் சான்று.

பக்கவாட்டிலேயே நகர்ந்தால்

நேரே வரும் பிரச்சனைகளை

எதிர்கொள்ளும் திராணி

இருக்காது என்பது

பிஷப் மூலமும்

நேரடியான எதிரிகள் மீது

மட்டுமே

கவனமிருந்தால்

மறைமுக ஆபத்துகள்

விழிகளுக்குத் தெரியாது

என்பது ரூக் மூலம்

வெளிப்படும்

வாழ்க்கைத் தத்துவம்

சதுரங்கத்தில் புலப்படும்.

சின்னச் சின்ன வெற்றிகளுக்கு

ஆசைபடாமல்

திடமான இலட்சியத்துடன்

இறுதிவரை

பயணிப்பவன்

சிப்பாயின் நிலையிலிருந்து

மிக உயர்ந்த நிலைக்கு மாற

முடியும்

என்பதற்குக் கடைசிக்

கட்டத்தில் சிப்பாய் நிலை உயரும்

காட்சியே சாட்சி.

சதுரங்கம் விளையாட்டு

மட்டுமல்ல வாழ்க்கையைக் கற்றுத் தரும்

போதனை.

இதுவரை போனவை போகட்டும்

இனிமேலாவது

விழிப்புணர்விருந்தால் போதும்.

எத்தனை காய்கள் என்பதிலும்

எப்படி அவற்றை

உபயோகப்படுத்துகிறோம்

என்பதே சூக்குமம்.

ஆனால் விளையாடி முடிந்த

பிறகும்

சதுரங்கம் கற்றுத்தருகிறது-

பெட்டிக்குள் போன பிறகு

காய்கள் எல்லாம் சமம்தான்

என்கிற உண்மையை.

மரணம்

எல்லோரையும் சமமாக்குகிறது.

அமைதியாக்குகிறது.

ஆனால்

அதற்கு முன் நடக்கும் நிகழ்வுகள்

தான்

முக்கியமானவை.

பெட்டிக்குள் போனால்

ஒன்று தானே

என்பதால் சதுரங்கக்காய்கள்

சும்மா இருப்பதில்லை.

இன்னும் சொல்லப்போனால்

சதுரங்கக் காய்களுக்கு ஏது

மரியாதை?

அது நம்மிடம் இருந்துதான்

ஆரம்பமாகிறது.

எதற்கு அதிக அதிகாரம்

என்பதை நாம் தான்

தருகிறோம்-

நம்மிடமிருந்து அதிகாரத்தை

அவை எடுத்துக் கொள்கின்றன.

நமது ராஜாக்களுக்கும்

ராணிகளுக்கும்

நம்மிடம் இருந்தே அதிகாரம்

அளிக்கப்பட்டிருக்கின்றன.

பல திறமைகள்

பெட்டிக்குள் முடங்கிக்

கிடக்கின்றன

உரிய களம் இல்லாமல்

நல்ல தளம் இல்லாமல்

பெட்டி என்பது

சதுரங்கப்பெட்டி மட்டுமல்ல-

சவப்பெட்டி மட்டுமல்ல

ஆற்றலை சிறைப்படுத்தும்

அனைத்துக்குமே

அவை பொருந்தும்.

Advertisements

ஹிந்தி தமிழ் வழியில்…

ஜூலை 10, 2010

ஹிந்தி தமிழ் வழியில் கற்க மத்திய அரசின் Central Hindi Directorate அமைப்பானது தொலைதூரக் கல்வி முறையில் ஹிந்தியில் Certificate Course in Hindi மற்றும் Diploma Course in Hindi ஆகிய இரண்டு பாடங்களைக் கற்றுத் தருகிறது. Certificate Couse ஐ தமிழ், ஆங்கிலம், மலையாளம் மற்றும் வங்காள மொழிகளின் மூலமாக ஹிந்தி கற்கலாம்..

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது:

1. விண்ணப்பத்தின் மாதிரியைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

2. 50 ரூபாய்க்கு Demand Draft யை Director, Central Hindi Directorate payable at New Delhi என்ற பெயரில் எடுத்துக் கொள்ளவும்.

3. விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, The Deputy Director, Department of Correspondance Courses, Central Hindi Directorate, West Block -7, R.K. Puram, New Delhi – 110066 என்ற முகவரிக்கு ஜூலை 30 ஆம் தேதிக்குள் அனுப்பவும்.

வாருங்கள்… ஹிந்தி மொழி கற்போம்… தமிழ் மொழி வழியில்…


சுயம் போற்றி…தன்னம்பிக்கையூட்டும் கவிதை

ஏப்ரல் 10, 2010

முழுக்கவிதையும் seshadrir.com இணையத்தில்…

மேலே உள்ள படத்தினை கிளிக்கி படிக்க.


தேசப்பற்று-இன்று!

மார்ச் 27, 2010

படித்த இளைஞனே!

வா!

படித்து விட்டாயா?

வந்தவுடன் என்ன அவசரம்?

ஜார்ஜ் புஷ் உன் கனவில் வருகிறாரா?

பில் கேட்ஸ் உன் முன் மாதிரியா?

சரி நீ!

இந்திய இளைஞனே தான்!

இந்தியாவை விட்டுப்

போய் விட வேண்டும் என்ற எண்ணம்

இந்திய இளைஞனைத் தவிர

எந்த இளைஞனுக்கும் வராது!

உன் அதிகபட்ச இலட்சியம்

ஆறாயிரம் மைல்கள் தாண்டிய

அமெரிக்கா!

உன் குறைந்தபட்சஇலட்சியம்

இரண்டாயிரம் மைல்கள் தாண்டிய

அரேபியா!

வயிற்றை

இந்தியாவில் நிரப்பிக் கொண்டு

மூளையை

அயல் நாட்டில் விற்கப் போகிறாய்!

உன்னை

இந்தியப் புழு என்றால்

அழுவாய்!

அமெரிக்கப் புழு என்றால்

ஆனந்தமாவாய்!

அமெரிக்க-பிரிட்டிஷ்

தூதரக சாலைகளை

நடந்து நடந்து தேய்ப்பாய்!

ஒரு வழியாய் பயணமாவாய்…

அதுவும்

இந்தியன் ஏர்லைன்ஸ் என்றால்

“ச்சீ” என்பாய்!

என்னே உன் தேசியப் பற்று!

நீ இந்தியத் தாயின்

கண்ணில் விழுந்த

தூசி அல்ல…ஊசி!

உனக்கு சின்ன வயதில்

சுதந்திர தினத்தன்று

தேசியக் கொடியை

குண்டூசியால் சட்டைப் பையில்

குத்தியிருக்கக் கூடாது!

ஒரு ஆணி வைத்து

இதயத்தில் அடித்திருக்க வேண்டும்!

—-யாரோ.

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்.

Recent Posts:

Earth Hour 2010, March 27-08:30 PM to 09:30 PM

Scientific Information- அறிவியல் பற்றிய தளங்கள்

தினமணி இணையதளத்தில் உங்கள் வலைப்பூ

IPL 20-20 Videos Hatrick Wickets

இணையத்தில் வாக்காளர் பட்டியல்

Quit Smoking…புகைப்பதை நிறுத்துங்கள்!

CII Sohrabji Godrej Green Business Center Hyderabad


தன்னம்பிக்கை டானிக்-1

பிப்ரவரி 2, 2010

எனது டைரி குறிப்புகள்-1:

நட்சத்திரக் கூட்டங்களுக்கு குறி வையுங்கள். அப்போது தான் வானின் உச்சியையாவது நிச்சயம் தொட முடியும்.

”பிரம்மாண்டமாகத் திட்டமிடுங்கள்”….துணை இல்லையே என்று கவலைப்படாதீர்கள்…உங்களைச் செயல்படுத்த 60 லட்சம் கோடி உயிரணுக்கள் தயாராக உள்ளன. – ரூதர்போர்டு.

Don’t be Ever Rest.

Be an Everest.

தோல்வியை எருவாக்கு;

வெற்றியை உருவாக்கு.

சுற்றவே பிறந்தது பூமி

சுடரவே பிறந்தது கதிர்

உலவப் பிறந்தது காற்று

உழைக்கப் பிறந்தவன் நீ.

When you Rest, You Rust.

வீசும் காற்றும் எழும் அலையும் எப்போதும் மிகத் திறமையான மாலுமியின் பக்கமே இருக்கும்.

வீரியத்தோடு விடாது முயற்சி செய்! தயங்கிப் பின் வாங்காதே! தளர்ந்து தடம் புரண்டு விடாதே! தொடர்ந்து செய்! துணிந்து செய்! ஊக்கத்தோடு பாடுபடு! உறுதியோடு பாடுபடு! அப்போது காலங்கனிந்து கைகூடி வரும். வெற்றி தேவதை உன்னை வாழ்த்தி வரவேற்பாள்!

விழாமையன்று நம் பெருமை…விழுந்தொரும் எழுவதே!

சுறுசுறுப்பாயிருங்கள்…ஓடிக் கொண்டிருக்கும் நீரில் தான் ஆக்சிஜன் அதிகம்.

தீப்பொறியாக ஒரு கணம் இருந்து விட்டு மறைந்து விடுங்கள்.காலமெல்லாம் புகைந்து கொண்டிருப்பதை விட…

தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல;

தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி.

மறந்து விடாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உங்கள் சரித்திரத்தில் ஒவ்வொரு பக்கமாகும்..

மனச இரும்பாக்கனும்; மலய துரும்பாக்கனும்.

Even the word Impossible says I’m Possible.

பறந்து செல்லுங்கள். உலகம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள். நேரத்தைத் தவிர…- நெப்போலியன்.

If you want to be Remembered do one thing superbly well.

தன்னம்பிக்கை டானிக்-2 வேண்டுமா? Tamilish தளத்தில் வாக்களித்து இதனை பிரபல இடுகை ஆக்குங்கள்.

இது தான் Give & Take பாலிசி…

Recent Posts:

Happy Telugu Song Very Funny

All about 108: Medical, Police, Fire

India:Pulsar, China:Gulsar

மகோன்னதம்


Japan – ஒரு ஃபீனிக்ஸின் கதை

மார்ச் 23, 2009

எஸ். சந்திரமௌலி எழுதி கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட Japan – ஒரு ஃபீனிக்ஸின் கதை புத்தகத்தை சமீபத்தில் படித்தேன்.

இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பின் ஜப்பான் எவ்வாறு முன்னேறியது என்று சிறப்பான நடையில் எழுதப்பட்டு உள்ளது. இரண்டாம் உலகப் போரின் “Little Boy” “Fatsman” ல் துவங்கி,ஜப்பானின் சாதனையான E-Defense வரையிலும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.ஜப்பானியர்களின் நாட்டுப்பற்று, கல்விமுறை, உதவும் மனப்பான்மை, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, விவசாய முறைகள், கம்ப்யூட்டர் துறை, புல்லட் ரயில் தொழில் நுட்பம்,Kaizen, Zero Error, Hoshin Kanri Sony Club போன்ற உலகப் புகழ் பெற்ற நிர்வாக கொள்ககள், ஜப்பான் நாணயமான யென்னின் கதை போன்றவை விவரமாக எழுதப்பட்டு உள்ளன.

புத்தகத்தில் என் சிந்தனைகளைக் கிளறிய பகுதி: ஒரு பிரிட்டிஷ் தொழிலதிபர் ஜப்பானுக்கு வந்திருந்த பொழுது,ரயிலின் முதல் வகுப்பில் பயணம் செய்தார். அவருக்கு எதிரில் இருந்த இருக்கையில் ஒரு வயதான மனிதர் அமர்ந்து இருந்தார். அந்த முதியவரை ரயில்வே ஊழியர் என்று நினைத்தார் பிரிட்டிஷ்காரார்.காரணம் கிழிந்திருந்த ரயில் இருக்கையை அவர் ஊசி நூலால் தைத்துக் கொண்டிருந்தது தான்.கிழிசலைத் தைத்து முடித்து விட்டு அமர்ந்த அந்த முதியவரிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, அவரது பணியைப் பாராட்டினார் அந்த பிரிட்டிஷ் தொழிலதிபர். பாராட்டுக்கு நன்றி தெரிவித்த முதியவர், தனது விசிட்டிங் கார்டை நீட்டினார். அதைப் படித்து பார்த்தவுடன்,பிரிட்டிஷ் தொழில் அதிபருக்கு பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது.ஏன் தெரியுமா? அவர் நினைத்தது போல அந்த முதியவர் ரயில்வே ஊழியர் இல்லை. ஒரு பிரபல நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். ரயில் பயணத்தின் போது இருக்கை கிழிந்து இருப்பதைப் பார்த்த உடன் சிறிதும் தயங்காமல் அதைத் தைத்துவிட்டார்.‘இதை எல்லாம் நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?ரயில்களை பராமரிப்பது ரயில்வேயின் வேலை தானே?’ என்று பிரிட்டிஷ்காரர் கேட்க, அந்த முதியவர், ‘ரயில்வே ஜப்பானுக்குச் சொந்தமானது அல்லவா? அதை நன்கு பராமரிக்க வேண்டும் என்பதில் எனக்கும் பங்கு உண்டல்லவா?’ என்று பதிலுக்கு கேட்டு பிரிட்டிஷ்காரரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதனைப் படித்த பிறகு, இந்தியா இன்னும் ”வளரும் நாடாகவே” இருப்பதன் அர்த்தத்தை அறிந்து கொண்டேன். ஆயிரம் தனி மனிதர்களின் சாதனைச் சரித்திரத்தை படிப்பதும் ஒன்றுதான்; ஜப்பானின் இந்த வெற்றிக் கதையை படிப்பதும் ஒன்றுதான் என்ற வாசகத்தை தாங்கி வரு இந்த புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்றுதான்.


ISBN என்பது என்ன?

ஜனவரி 4, 2009

கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி அவர்களின் பயன்மிகு கோப்பு