போர்க்களமா வாழ்க்கை – தன்னம்பிக்கை கவிதை

ஜூன் 28, 2010
போர்க்களமா வாழ்க்கை?
பார்க்கலாமே ஒரு கை!

சோர்ந்து விடாதே!
இதுதானா வாழ்க்கை என்று
கோழைகளின் பட்டியலில்
சேர்ந்து விடாதே!

இல்லையென்பார்,
இருப்பதைக் கொடுப்பாய்;
இன்னமும் என்பார்
இதுதான் முடியும் என்பாய்!

மறுகணமே
கஞ்சப் பிரபு என
புறம் கூற புரண்டு நிற்கும்
பஞ்சப் பிரபுவின் நாக்கு!

கொடுத்ததை
திரும்பக் கேட்டால்
கோமாளி என்பான்;
இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ
ஏமாளி என்பான்!

நாம் இழைக்கும்
தவறுகளிலே
கதைப் பேசி
பிழைக்கும் கூட்டங்கள்

இந்த
நயவஞ்சக நாக்கினைக் கண்டு;
கதற வேண்டாம் -உன்மனம்
பதற வேண்டாம்!

வீணாய்
ஒலித்துக்கொண்டிருக்கும்
ஓநாய்களின்
ஒப்பாரி சத்தமிது..

தானாய்
குறைந்து விடும்;
ஒரு நாள் காணாமலே
கறைந்து விடும்!

கருணையற்ற கூட்டம்
காணும்படி,
கண்ணீரை மட்டும்
சிந்தி விடாதே!

இவர்கள் -உன்
விழி நீரிலே விளையாடும்
விந்தை மனிதர்கள் -உன்
கண்ணீரிலே கவிபாடும்
கந்தை மனிதர்கள்!

வில்லில் பூட்டின
அம்புக்கும்,
அவர்கள் நாவிலே
பிறக்கும் வார்த்தைகளுக்கும்,
அதிக வித்தியாசமில்லை!

இரண்டுமே
காயப்படுத்திவிட தயாராய்;

அம்பின் கூர்மையும்
மழுங்கி விடலாம்;
வம்பளக்கும் அவர்களின்
நாவுகளோ ஒருநாளும்
மழுங்கி விடாது!

புறம் கூறிடும்
வஞ்சக கூட்டத்தின்;
நிறம் மாறிடும் நாட்கள்
வெகு தொலைவில்
அல்ல தோழா!

நன்றி கெட்ட
மனிதனின் நாக்கு;
அப்படி இப்படி
புரளத்தான் செய்யும்!

அவனுக்கும்
ஒரு கூட்டம்;
எப்படி எப்படியோ
திரளத்தான் செய்யும்!

போகட்டும்
அவர்களிடம் இல்லாத,
ஆனால் உன்னிடம் இருக்கும்
ஒரே ஆயுதம் மன்னிப்பு!

இவர்களைப் பற்றி
இனி மனதிலே
சிந்திக்கவும் வேண்டாம்!

மறந்தும் கூட
நிந்திக்கவும் வேண்டாம்!

காலம் கண் போன்றது!
கவனித்துக்கொண்டே இருக்கிறது!!

நன்றி: ஷீ-நிசி

மேலும் தன்னம்பிக்கைக்கு Rammohan இணையத்திலிருந்து:

தன்னம்பிக்கை சிந்தனைகள் – பா.விஜய்

தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள்(படங்களுடன்)

சுயம் போற்றி…தன்னம்பிக்கையூட்டும் கவிதை

தன்னம்பிக்கை டானிக்-1(பொன்மொழிகள்)

மகோன்னதம் (கவிதை)

கெமன்ஸிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது

நம்பிக்கை ஊன்றி நட..

நம்பிக்கை விதை

விடியலை நோக்கி…

நெருப்பாய் இரு!

கண்களின் அருவியை நிறுத்து!

பாதை மறிக்கப்பட்ட நதியே பீறியெழும்!!

வளைவுச் சாலைப் பயணம்!

நீ உனக்கான வரம்

Advertisements

IQ வளர்க்க அற்புதமான ஐடியாக்கள்…

ஜூன் 26, 2010

நிறைய வாசியுங்கள்

இளமையோடு இருக்க வேண்டும் என்றால் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருங்கள். காரணம் வயதான நரி புதிய தந்திரங்களைக் கற்றுக் கொள்ளாது.

 

நீங்கள் வலது கைப் பழக்கம் உடையவராக இருந்தால், இடது கையாலும், இடது கைப் பழக்கம் உடையவராக இருந்தால் வலது கையாலும் எழுதிப் பழகுங்கள். இதன் மூலம் மூளையின் வேகமும், கவனமும் அதிகரிக்கும். தர்க்க அறிவை வளர்த்துக் கொள்வதற்கு இது ஒரு சின்ன எக்ஸ்சர்சைஸ்.

சுறுக்கெழுத்துப் புதிர்கள், சுடோகு புதிர்கள் ஆகியவற்றுக்கு விடை காண முயலுங்கள்.

ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காணாமல், இன்னொன்றுக்குத் தாவிப் பழகாதீர்கள்!

நன்றி: ந.வினோத் குமார், ஆனந்த விகடன்

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

ஸ்ரீ யந்திரம்: Sri Yantra

தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள்

புத்தியைத் தீட்டு…

VICTORY- வெற்றிக்கான விளக்கம்!

Excellent Excel Games for Download


தன்னம்பிக்கைக் கவிதை – பா.விஜய்

ஜூன் 22, 2010

நம்பிக்கையுடன்
மரங்கள் காற்றைச்
சுத்தம் செய்கின்றன
நம்பிக்கை மனசை
சுத்தம் செய்கிறது

கர்வம் வை
கிராம்; கணக்கில்!

நம்பிக்கை வை
கிலோ கணக்கில்!

நகம்கூட
நாளுக்கு
.001 அங்குலம்
வளர்கின்றது

நாம்?

பா.விஜயின் இணையத்திலிருந்து

மேலும் தன்னம்பிக்கைக்கு Rammohan இணையத்திலிருந்து:

தன்னம்பிக்கை சிந்தனைகள் – பா.விஜய்

தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள்(படங்களுடன்)

சுயம் போற்றி…தன்னம்பிக்கையூட்டும் கவிதை

தன்னம்பிக்கை டானிக்-1(பொன்மொழிகள்)

மகோன்னதம் (கவிதை)

கெமன்ஸிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது

நம்பிக்கை ஊன்றி நட..

நம்பிக்கை விதை

விடியலை நோக்கி…

நெருப்பாய் இரு!

கண்களின் அருவியை நிறுத்து!

பாதை மறிக்கப்பட்ட நதியே பீறியெழும்!!

வளைவுச் சாலைப் பயணம்!

நீ உனக்கான வரம்


நூறாவது பதிவு – Rammohan’s Blog

ஜூன் 2, 2010

இதோ வந்துவிட்டது நூறாவது பதிவு….

எத்தனை ரன்கள் எடுத்தாலும் நூறு அடித்தவுடன் வருகின்ற மகிழ்ச்சி, ஆரவாரம் , கொண்டாட்டம் இருக்கிறதே! அது தான் நூறு என்ற எண்ணின் தனிச் சிறப்பு!

நவம்பர் 26,2008 பதிவுலகில் WordPress வாயிலாக நுழைந்த நாள். அதற்கு முன்னர் Blogspot ல் வலைப்பூ வைத்திருந்தாலும் நாம் எழுதி என்னத்த சாதிக்கப் போகிறோம் என்ற ஒரு எண்ணம்/ சோம்பல் இருந்தது. Blospot ல் இருந்த Themes பிடிக்காததாலும், WordPress ன் எளிமையான அமைப்பாலும் இங்கு வந்தாயிற்று…

இணையதளங்களுக்கு சமூக மாற்றத்திற்கு வித்திடும் சக்தி இருக்கின்றது என்பதை கண்கூடாக ஆனந்த விகடனின் கட்டுரையான விகடன் ஸ்டார் அலேக்யா வும், குமுதத்தின் சாதித்துக் கொண்டிருக்கும் செந்தில்குமார் கட்டுரையும் கண்கூடாக உணர்த்தியது. இக்கட்டுரைகள், இவர்களது செயல்பாடுகள் தந்த உற்சாகத்தால் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன், எனக்கென்று சில கொள்கைகள் வகுத்துக் கொண்டு! பதிவில் எழுத விஷயங்கள், படங்கள், காணொளிகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் தனிமனித/ சமூக முன்னேற்றத்திற்கு வித்திடும் பதிவுகளை மட்டும் எழுதுவது/ பகிர்ந்து கொள்வது என்ற உறுதி கொண்டேன். அதனால் தன்னம்பிக்கை, தொழில்நுட்பம், சமூக மேம்பாடு அவ்வப்போது சற்று ’மதிமயக்காத’ பொழுதுபோக்கு என்று எனக்கே உரிய பாதையை வகுத்துக் கொண்டேன்.

பா.ராகவன் அவர்கள் தனது Excellent புத்தகத்தில் எழுதிய, ”புத்தகம் என்பது வாசிப்பவரை ஒரு அங்குலமாவது உயர்த்த வேண்டும்” என்கிற கூற்று பதிவுலகத்திற்கும் பொருந்தும். அதனால் ஒவ்வொரு பதிவையும், ”வாசிப்பவர்கள் ஒரு mm ஆவது உயர வேண்டும்” என்று மிக்க கவனத்துடன் பதிப்பிக்கிறேன்.

Tamilish தளத்தின் வருகைக்குப் பின்னர் தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் அதிகமாயினர் என்றாலும், தரமான இடுகைகளுக்கு இருக்கும் ஆதரவு குறைவு என்பது பல சமயங்களில் காணப் பெற்றேன். என் தளத்திற்கென்று தனியாக வாசகர்கள் இல்லாதது, குறைவான இடுகைகளிடுவது, பின்னூட்டங்களுக்கு சரியான பதிலளிக்காமலிருப்பது, ”காரசாரமாக” பதிவுகள் எழுதாமல் ”ஒரு mm ஆவது உயர வேண்டும்” போன்ற ”கொள்கைப் பிடிப்புகளை” வைத்திருப்பது போன்றவையும் குறைவான பார்வைகள்/ பின்னூட்டங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்பதை உணர்ந்தாலும், அதனைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் மன நிறைவுடன், நிதானமாக எடுத்து வைக்கிறேன் ஒவ்வொரு அடியையும்!

–  ராம்மோகன்


விக்ருதி வருட‌ ராசி பலன்கள்

ஏப்ரல் 13, 2010

ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கை தரும் விசயங்களை மட்டும் அன்னப்பறவையைப் போல எடுத்துக் கொள்ளுங்கள். நாளெல்லாம் வினை செய்யுங்கள். நினைப்பது முடியும்.

நாளை நமதே.

விக்ருதி – தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மேஷம்

Webdunia தினத்தந்தி தினமணி

ரிஷபம்

Webdunia தினத்தந்தி தினமணி

மிதுனம்

Webdunia தினத்தந்தி தினமணி

கடகம்

Webdunia தினத்தந்தி தினமணி

சிம்மம்

Webdunia தினத்தந்தி தினமணி

கன்னி

Webdunia தினத்தந்தி தினமணி

துலாம்

Webdunia தினத்தந்தி தினமணி

விருச்சிகம்

Webdunia தினத்தந்தி தினமணி

தனுசு

Webdunia தினத்தந்தி தினமணி

மகரம்

Webdunia தினத்தந்தி தினமணி

கும்பம்

Webdunia தினத்தந்தி தினமணி

மீனம்

Webdunia தினத்தந்தி தினமணி

சரி வந்தது தான் வந்தாச்சு…

நீங்க நல்லவரா? (சிகரெட்டா)

கெட்டவரா? (சினிமாவா)


சுயம் போற்றி…தன்னம்பிக்கையூட்டும் கவிதை

ஏப்ரல் 10, 2010

முழுக்கவிதையும் seshadrir.com இணையத்தில்…

மேலே உள்ள படத்தினை கிளிக்கி படிக்க.


VICTORY- வெற்றிக்கான விளக்கம்!

மார்ச் 27, 2010

V-VISION

அதாவது நாம் என்னவாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அந்த நிலையில் நம்மை வைத்துப் பார்க்க வேண்டும்.இப்படி தினந்தோறும், நாம் அதைச் செய்யும் போது நமக்குள்ளே தன்னம்பிக்கை வளரும்.

I-INVOLVEMENT

அந்த நிலையை அடைய நாம் தீவிரமாக உழைக்க வேண்டும். அதற்கு நம்முடைய ஆர்வமும், ஊக்கமும் அவசியம்.

C-CONFIDENCE

இடையிடையே எவ்வளவு தடைகள் வந்தாலும், நாம் மனம் தளராமல் இருத்தல் அவசியம். சற்று மனம் தளர்ந்தாலும் அது தோல்வி தான்.

T-TROUBLESHOOTING

ஏதாவது ஒரு சிறிய பிரச்சினை வந்தால் ‘ஐயோ பிரச்சினை வந்துவிட்டதே’ என்று எண்ணிக் கொண்டு இருக்கக் கூடாது. அப்படிச் செய்தால் பிரச்சினைதான் பெரிதாகும். அதை விடுத்து தீர்வைப் பற்றி சிந்திக்க வேண்டும். செய்ய ஆரம்பித்தால் பிரச்சினை சிறியதாகி விடும். பின்பு முழுமையாக தீர்ந்தே போகும்.

O- OPTIMISTIC THOUGHTS

இது ஒவ்வொரு நேரத்திலும் நம்மோடு இருக்க வேண்டும். ‘ நம்மால் முடியும், நாம் செய்வோம்’ என்ற எண்ணங்கள் நம் மனதில் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்.

R-REVISING

Error is Human, Forgive is Divine என்று சொல்வார்கள். மனிதர்கள் தவறு செய்வது இயல்புதான். நம் முயற்சியில் சிறு சிறு தவறுகள் நேர்ந்து விட்டால், அதை பெரிதாக்காமல், தவிர்த்து அடுத்த முறை மீண்டும் அப்பிழை நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Y- YA YOU HAVE WON IT!

இத்தனையும் தொடர்ந்து செய்து கொண்டு வந்தால், நிச்சயம் நாம் வெற்றி என்னும் கோபுரத்தில் நின்று கொண்டிருப்பதை உணரலாம். எந்த ஒரு வேலையையும், சிறிய வேலையாக பிரித்துக் கொண்டு, ஒவ்வொன்றாக செய்து முடிக்கும் போது, இறுதியில் அந்த பெரிய வேலை செய்து முடிக்கப்பட்டிருக்கும் என்பது உறுதி.

நன்றி: பாக்யா வார இதழ்.

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்.

Recent Posts:

தேசப்பற்று-இன்று!

Earth Hour 2010, March 27-08:30 PM to 09:30 PM

Scientific Information- அறிவியல் பற்றிய தளங்கள்

தினமணி இணையதளத்தில் உங்கள் வலைப்பூ

IPL 20-20 Videos Hatrick Wickets

இணையத்தில் வாக்காளர் பட்டியல்