சுயம் போற்றி…தன்னம்பிக்கையூட்டும் கவிதை

ஏப்ரல் 10, 2010

முழுக்கவிதையும் seshadrir.com இணையத்தில்…

மேலே உள்ள படத்தினை கிளிக்கி படிக்க.

Advertisements

உலகின் பசி போக்குங்கள்…Free Rice.Com

மார்ச் 31, 2010

Free Rice. com என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம்…

உலகில் உள்ள அனைவருக்கும் இலவச கல்வியை அளிப்பது,உலகில் உள்ள பசிக்கொடுமையை போக்குவது என்னும் இரண்டு நோக்கங்களுக்காகத் துவக்கப்பட்ட இணையம்.

இங்கே நாம் நமது மொழியறிவை வளர்த்துக் கொள்ளலாம். பிரென்ச், ஜெர்மன், இத்தாலியன், ஸ்பானிஷ், ஆங்கில மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம். SAT, GRE, LSAT and GMAT போன்ற போட்டி தேர்வுகளுக்கு இது உதவும்.

உங்களின் பொது அறிவை வளர்க்கும் முகமாக உலக நாடுகளின் வரைபடங்கள், உலக நாடுகளின் தலைநகரங்கள், வேதியலில் தனிமங்களின் குறியீடுகள், கணித வாய்ப்பாடுகள், சிறு கணக்குகள் ஆகியவை உள்ளன.

நீங்கள் விடையளிக்க, விடையளிக்க கடினமான கேள்விகள் கேட்கப்படும். இது நம் அறிவை மெருகேற்ற உதவுகிறது.

உலகில் ஒவ்வொரு 6 வினாடிக்கும் ஒரு இறப்பு பசிக் கொடுமையால் நிகழ்கிறது. நாம் விடையளிக்கும் சரியான கேள்வி ஒவ்வொன்றுக்கும் 10 அரிசி வறுமையில் பசியால் வாடுவோருக்கு தானமாக அளிக்கப்படுகிறது.

நீங்களும் இத்தளத்தினை உபயோகித்து உதவலாமே!

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்.

Recent Posts:

Vodafone ZooZoo Ads- IPL 2010 season

VICTORY- வெற்றிக்கான விளக்கம்!

தேசப்பற்று-இன்று!

இணையத்தில் வாக்காளர் பட்டியல்


Quit Smoking…புகைப்பதை நிறுத்துங்கள்!

மார்ச் 17, 2010

புகைப்பழக்கத்தினால் ஏற்படும் கேடுகள் பற்றி நாளொரு செய்தி, ஆராய்ச்சி முடிவு வருகிறது.

இதனால் உலகில் 7 நிமிடங்களுக்கு ஒருவர் உயிரிழக்கிறார் என்று அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. புகைபிடிப்பதால் ஆயுட்காலம் குறைகிறது, புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த  I.Q. திறன் நாளுக்கு 0.5 அளவு குறைகிறது, நம்மை நம்பியுள்ள நம் குடும்பம் திக்கற்று விடுகிறது, இயற்கை அன்னையின் காற்று மாசுபடுகிறது என்று அதன் பாதகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இணையதளங்களுக்கு சமூக மாற்றத்திற்கு வித்திடும் சக்தி உள்ளதால், புகைப்பழக்கத்தினை ஒழிப்பதற்கான போரில் நானும் குதிக்கிறேன்.வலைப்பூ மூலமாக!

கவர்ச்சியான தலைப்புகளில் இடுகைகளிட்டு காமக் கிளர்ச்சியை உண்டு செய்யும் கட்டுரைகளுக்கு மத்தியில் நமது இது போன்ற “அறுவைகளுக்கு” ஆதரவு தர குறைவானவர்களே இருப்பர் என்பதை அறிகின்றேன். என்றாலும் “முயற்சி திருவினையாக்கும்” என்பதனையும் உணர்ந்தவனாய், புதிய விடியலை நோக்கி பயணத்தை தொடர்கிறேன்….

”In war there is no prize for the runner-up” என்பார்கள். நானும் வெற்றி வாகை சூடுவதையே விரும்புகிறேன். இப்பதிவில் புகைப்பழக்கத்தினால் வரும் தீமைகள் பற்றிய காணொளிகள், மற்ற தமிழ் இணைய தளங்களில் வெளி வந்துள்ள கட்டுரைகள் ஆகியவற்றை தொகுத்தளித்திருக்கிறேன்.

புகைக்கெதிரான இப்போரில் ஒருவர் மனம் மாறினாலே வெற்றி தான்!

பின்னூட்டத்தில் உண்மையானவெற்றிச் செய்தியைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Women feel Safe with Men who Smoke….Smoking Causes Impotency…

A person looses 7 min in Life when he Smoke a cigarette…Every minute, seven people die of tobacco use…

Smoking Causes 92% of Oral Cancer.

49 known carcinogenic compounds and 4000 other toxins constitute a single cigarette.

மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி முதல் பொது இடங்களில் புகைப் பிடிக்க தடை விதிக்கப்படுவதாக, மத்திய அரசு 2008 ல் அறிவித்தது.இதைப் போன்றே பொது இடத்தில் புகைக்கும் ஒருவர் பற்றி: Voice from AAJTAK:  No Smoking in Public Places

Do u smoke? Do u really need fire to light it up?

Successfully Installed Cancer…Smokers never become old simply because they die younger…

Welcome to Smoking Zone…

Smoking causes impotency

Smoking Causes Emphysema, Lung Cancer

Nicotine….What it will Do in Your Body?
நிகோடின் மூளையில் Dopamine அளவுகளை அதிகரிக்கிறது. இது மூளைக்கு புத்துணர்ச்சி தருவது போன்ற மாயையை உருவக்குகிறது. இது எவ்வாறு இரசாயன மாற்றங்களை

உடம்பில் நிகழ்த்துகிறது என்பது இங்கே…

இது பற்றி மேலும் தமிழ் இணையத்தில்:

1. ஆயுர்வேதம்.காம்: புகைப்பதை நிறுத்த 8 நிலைகள்

2. தெனாலி.காம்: சிகரெட்டில் இருக்கும் இரசாயனப் பொருட்கள்

3. தினமணி: புகைப்பிடித்தால் பார்வை பறிபோகும்!

4.அதிகாலை.காம்:இன்று உலக புகையிலை இல்லா தினம்‍ – மே 31, 2008

5.சிகரெட்டை விட வேண்டுமா- 10 வழிகள்!

6.தமிழ் மருத்துவம் Blogspot ல்ஒரு அவசர பொது வேண்டுகோள் !

7. புகை மூளைக்குப் பகை!

8.புகைபிடிப்பதை நிறுத்த வழி!

9.காதலும் கத்தரிக்காயும் ! .

10.Do You Still Want to Smoke?தமிழ்நெஞ்சம் Photo Collection

மேலும் தங்களுக்கு தெரிந்த இணைப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மாற்றம் ஒன்றே மகத்தானது….

இதைப் படிக்கும் ஒரு மனதிலாவது மாற்றங்களை விரும்பி நிறைவு செய்கிறேன். நன்றி.

இது பற்றி Orkut ல் Tamil தமிழ் Community ல் கருத்துக்கள்:


Tamilish தளத்தில் 250 வாக்குகள் பெற்று 365 நாள் இடுகைகளில் முதலிடம் பெற்று இப்பதிவை தமிழ் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது குறிக்கோள். ஆதரவளியுங்கள்! Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்.

Tamilish தளத்தில் “நித்யானந்தாவின் லீலைகள் பற்றித் தெரிந்து கொண்டது போதும்….. நிகோடின் நம் உடம்பில் செய்யும் லீலைகள் பற்றி பார்ப்போம் வாருங்கள்…” என்ற இணைப்பிற்கு இதுவரை வாக்களித்து உற்சாகப்படுத்திய நல் உள்ளங்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.

  இந்த வலைப்பூவில் உள்ள மற்ற சமூக அக்கறையுள்ள பதிவுகள்:

  இரயில் பாதையைக் கடக்காதீர்

  உணவை வீணாக்காதீர்

  கண் தானம் செய்வீர்

  108 பற்றி அறிவீர்

  பசுமை இல்லம் அமைப்பீர்

  மின்சாரத்தினை சேமித்திடுவீர்

  சுற்றுச் சூழல் காப்பீர்

  வாக்களிப்பீர்

  மரம் நடுவீர்,   மரங்களைப் பாதுகாப்பீர்

  சமூக அக்கறை கொள்வீர்

  அன்பு காட்டுவீர்

  சாரலில் இணைவீர்


  தன்னம்பிக்கை டானிக்-1

  பிப்ரவரி 2, 2010

  எனது டைரி குறிப்புகள்-1:

  நட்சத்திரக் கூட்டங்களுக்கு குறி வையுங்கள். அப்போது தான் வானின் உச்சியையாவது நிச்சயம் தொட முடியும்.

  ”பிரம்மாண்டமாகத் திட்டமிடுங்கள்”….துணை இல்லையே என்று கவலைப்படாதீர்கள்…உங்களைச் செயல்படுத்த 60 லட்சம் கோடி உயிரணுக்கள் தயாராக உள்ளன. – ரூதர்போர்டு.

  Don’t be Ever Rest.

  Be an Everest.

  தோல்வியை எருவாக்கு;

  வெற்றியை உருவாக்கு.

  சுற்றவே பிறந்தது பூமி

  சுடரவே பிறந்தது கதிர்

  உலவப் பிறந்தது காற்று

  உழைக்கப் பிறந்தவன் நீ.

  When you Rest, You Rust.

  வீசும் காற்றும் எழும் அலையும் எப்போதும் மிகத் திறமையான மாலுமியின் பக்கமே இருக்கும்.

  வீரியத்தோடு விடாது முயற்சி செய்! தயங்கிப் பின் வாங்காதே! தளர்ந்து தடம் புரண்டு விடாதே! தொடர்ந்து செய்! துணிந்து செய்! ஊக்கத்தோடு பாடுபடு! உறுதியோடு பாடுபடு! அப்போது காலங்கனிந்து கைகூடி வரும். வெற்றி தேவதை உன்னை வாழ்த்தி வரவேற்பாள்!

  விழாமையன்று நம் பெருமை…விழுந்தொரும் எழுவதே!

  சுறுசுறுப்பாயிருங்கள்…ஓடிக் கொண்டிருக்கும் நீரில் தான் ஆக்சிஜன் அதிகம்.

  தீப்பொறியாக ஒரு கணம் இருந்து விட்டு மறைந்து விடுங்கள்.காலமெல்லாம் புகைந்து கொண்டிருப்பதை விட…

  தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல;

  தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி.

  மறந்து விடாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உங்கள் சரித்திரத்தில் ஒவ்வொரு பக்கமாகும்..

  மனச இரும்பாக்கனும்; மலய துரும்பாக்கனும்.

  Even the word Impossible says I’m Possible.

  பறந்து செல்லுங்கள். உலகம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள். நேரத்தைத் தவிர…- நெப்போலியன்.

  If you want to be Remembered do one thing superbly well.

  தன்னம்பிக்கை டானிக்-2 வேண்டுமா? Tamilish தளத்தில் வாக்களித்து இதனை பிரபல இடுகை ஆக்குங்கள்.

  இது தான் Give & Take பாலிசி…

  Recent Posts:

  Happy Telugu Song Very Funny

  All about 108: Medical, Police, Fire

  India:Pulsar, China:Gulsar

  மகோன்னதம்


  தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள்

  திசெம்பர் 7, 2009

  நமது தன்னம்பிக்கையை தேடிப் பெறுவதற்கு, அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு கடைபிடிக்க வேண்டிய 5 வழிகள்:

  என்னும் நூலுக்கு சொக்கன் அவர்கள் குமுதம் இதழில் எழுதிய விமர்சனம்

  1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள்.

  2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

  அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம்.

  3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள்.

  நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.

  4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாகட்டும்.

  5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.

  Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்.


  பங்குச் சந்தை பற்றிய இணையதளங்கள்

  நவம்பர் 8, 2009

  nselogo

  Google SMS Channel SMARTINVEST (Free tips by SMS)

  Orkut Community: India Stock Market (BSE NSE )

  சந்தை நிலவரம் Tamil Blog

  22274386

  pangu

  Panguvanikam

  share-bazaar17.8.09

  pil

  cmlogo

  2676871.cms


  அடிப்படை அவசியங்கள்; EHMAN; 1972

  ஒக்ரோபர் 24, 2009
  DESIDERETA

  அடிப்படை அவசியங்கள்; EHMAN; 1972

  ஞானியரின் ஞானத்தைக் கேள்!
  அவசர இரைச்சல் இடையே
  அமைதியாகச் செல்.

  மௌனத்தின் நிம்மதியை நினைவில் கொள்
  முடிந்த வரை சரணடையாமல்
  அனைவருடனும் நல்லுறவு கொள்.

  உன் உண்மையை
  இதமாகத் தெளிவாகக் கூறு
  பிறர் கூறுவதைக் கவனி
  மந்த மூடர்களாயிருப்பவரிடமும்
  சொல்வதற்கு அவர்களிடம்
  ஒரு கதை உண்டு.

  உரக்கப் பேசுபவர்களையும்
  ஆத்திரக்காரர்களையும் தவிர்
  அவர்கள் உள்ளத்தில்
  வெறுப்பை உருவாக்குபவர்கள்.

  பிறருடன் ஒப்பிட்டால்
  உனக்குக் கசப்பும் சலிப்புமே மிஞ்சும்.

  உன்னை விடவும்
  உயர்ந்தவர்களும், தாழ்ந்தவர்களும்
  எப்போதும் உண்டு.

  உன் சாதனைகளை மகிழ்வுடன் அனுபவி
  அதே நேரத்தில்
  உன் திட்டங்களையும்
  மகிழ்ச்சியோடு அணுகு.

  உன் வாழ்வின் பாதை
  எவ்வளவு சாதாரணமாக இருந்தாலும்
  அதில் ஆர்வம் கொள்.

  கால மாற்றங்களில் இதுவே
  உனது நிரந்தரச் செல்வம்.

  தொழிலில் எச்சரிக்கையோடிரு.
  உலகில் ஏமாற்றல்கள் அதிகம்,
  அதனால் நன்மைகள் இருப்பதை மறுக்காதே.

  உழைப்பவர் பலர்
  உலகம் முழுவதும் வெற்றிக்கான
  வீர முனைப்பு இருக்கிறது.

  நீ
  நீயாக இரு.
  அன்பு காட்டுவதாய் நடிக்காதே.
  அன்பை ஏளனப்படுத்தாதே.

  எல்லா விரோதங்களுக்கும்
  ஏமாற்றங்களுகும் அப்பாலும்
  அன்பு ஒரு நிரந்தரப் பசுமை.

  வயதுகளின் ஆலோசனையை அனுமதி.
  இளமையின் வேகத்தை நிதானமாக்கி,
  உள்ளே உரம் பெறு,
  பலம் பெறு, இது எதிர்பாரா தாக்கங்களிலிருந்து
  உன்னைப் பாதுகாக்கும்.

  மிகையான கற்பனைகளால்
  மனதை வருத்திக் கொள்ளாதே
  அசதியும் தனிமையும்
  அச்சங்களைப் பிரசவிக்கும்

  முழுமையான கட்டுப்பாடுடன்
  உனக்கு நீயே
  சலுகைகள் எடுத்துக் கொள்.

  நீ
  இந்தப் பிரபஞ்சத்தின் குழந்தை
  மரங்களுக்கும், நட்சத்திரங்களுக்கும்
  உள்ளது போலவே உனக்கும்
  இங்கே உரிமைகள் உள்ளன.

  புரிந்தாலும் புரியாவிட்டாலும்
  பிரபஞ்சம் தன் விதிப்படியே
  இயங்கிக் கொண்டிருக்கும்

  உன் உழைப்பும் கனவும்
  எதுவானாலும்
  உள்ளே உனக்கோர்
  இடம் செய்து கொள்.

  பொய், புரட்டு, பகற் கனவுகளை மீறி
  உலக அழகானது தான்.

  இன்புற்றிரு,
  இன்புற்றிருக்க முனை.

  1972 ஆம் ஆண்டின் இந்த தன்னம்பிக்கை ஊட்டும் கவிதையினை
  அளித்து உதவிய ”இளைஞர்” நரேந்திரன் அவர்களுக்கு நன்றிகள்….