Creative Ads of Gawaskar

மே 11, 2010

சென்னையை சேர்ந்தவர் கவாஸ்கர் விஸ்வநாதன். இவர் தனது கற்பனைத் திறமையால் பல சமுக நலன் மிக்க விளம்பரங்களை  உருவாக்கி தனது வலைப் பதிவில் (My Creatives) இணைத்துள்ளார். ஒரு தமிழருககுள்ளே   ஒளிந்திருந்த கற்பனைத் திறமையை பாராட்டும் வாய்ப்பாகவும் அவரது திறமைகளை எனது வலைப் பக்கத்திற்கு வருபவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக இதைக்கருதுகிறேன்.

இதோ முதலாவது படைப்பு.

இன்றைய அவசியத்தேவை….?

மரங்கள்.

இதே நிலை நீடித்தால் இந்தியாவின் தேசியக் கோடியில் பசுமையின் அடையாளமான பச்சை நிறம் காணாமல் போய்விடும் என்கிறார்.அதனால் மரம் வெட்டுவதை நிறுத்தி விடுங்கள்!

இந்த படத்தை பார்த்தீர்களா ?

ஏசு  சிலுவை இல்லாமல் இருக்கிறாரா?

மரங்கள் பற்றாக்குறை!

Drink & Drive என்பது Drink & Die என்பதே!

இதோ இரத்த தானைத்தை வலியுறுத்தும் அற்புதமான படைப்பு.

He is not alive now

என்ற ஒரு வரிக் கதையை

He is alive now

என்று மாற்றும் சக்தி நம்மிடம் தான் உள்ளது.

அதனால் இரத்த தானம் செய்வோம் என்கிறார்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த தனது வழிமுறைகளைக் சொல்கிறார். இதோ…

வளரும் தமிழரை வாழ்த்துவோம்  வாருங்கள்!

அவரது இணையம்: http://www.gawaskar.blogspot.com/

(மேலும் பல விளம்பர படங்கள் காணக் கிடைக்கின்றன)

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்

Recent Posts:

பணம் செய்ய உதவும் இணையதளங்கள்

Technology Development – Video

மே தின வாழ்த்துக்கள்!

கன்னியாகுமரி புகைப்படங்கள்

Phobia – பயம் பயமறியாது!

Google India Shopping Tool

Advertisements

Technology Development – Video

மே 4, 2010

இந்த வீடியோவைப் பாருங்கள்..உலகம் எத்தனை வேகமாக முன்னேறி வருகிறது என்பது தெரியும்…

இனி மேலாவது நாளை, நாளை என்று  எந்த வேலையயும் தள்ளிப் போடாமல், இன்றே, இப்பொழுதே என்று செய்து முடித்து வெற்றி வாகை சூடுவோமாக!

”சரி சரி வீடியோவப் பத்தி சொல்லு” என்கிறீர்களா? இதோ சில….

அமெரிக்க மக்கள் தொகையை விட IQ அதிகமுள்ள 25% இந்தியர்கள் அதிகமிருப்பர்.

8 ல் 1 அமெரிக்க தம்பதியரின் முதல் சந்திப்பே இணையத்தில் தான்.

200 மில்லியன் உறுப்பினர்கள் Myspace  தளத்தில் உள்ளனர். Myspace ஒரு நாடாக இருந்தால் அது,

உலகில் மக்கள் தொகையில் 5ஆவது பெரிய நாடாயிருக்கும்.

Google  ல் ஒரு மாதத்திற்கு 31 பில்லியன் தேடல்கள் நடக்கின்றன. அப்படீன்னா B.G (Before Google) யுகத்தில் மக்களின் கேள்விகளிக்கு யார் விடையளித்திருப்பார்கள்?

50 மில்லியன் பேரை சென்றடைய Radio வுக்கு 38 வருடங்கள், TV க்கு 13 வருடங்கள் பிடித்தன. ஆனால் இணையத்திற்கு 4 வருடங்களும் Ipod க்கு 3 வருடங்கள், Facebook ற்கு 2 வருடங்களுமே ஆனது.

ஷேக்ஸ்பியர் இருந்த காலத்தை விட தற்போது ஆங்கில எழுத்துக்கள் 5 மடங்கு அதிகமாயிருக்கின்றது.

தொழில்நுட்பத் தகவல்கள் 2 வருடத்திற்கு ஒரு முறை இரு மடங்காகிறது. அப்படின்னா 1 Year ல படிக்கிற பாடம் 3 rd  Year ல Outdate ஆயிருக்கும்.

2049 ல உலகத்தில இருக்கற மனுசங்க வேலை எல்லாத்தையும் செய்யற மாதிரி ஒரு கம்ப்யூட்டர் கண்டுபிடிச்சிருப்பாங்க…

என்ன தலை சுத்துதா? கீழே விழறதுக்கு முன்னாடி,

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்.

Recent Posts:

Technology Development – Video

மே தின வாழ்த்துக்கள்!

கன்னியாகுமரி புகைப்படங்கள்

Phobia – பயம் பயமறியாது!

Google India Shopping Tool


சுயம் போற்றி…தன்னம்பிக்கையூட்டும் கவிதை

ஏப்ரல் 10, 2010

முழுக்கவிதையும் seshadrir.com இணையத்தில்…

மேலே உள்ள படத்தினை கிளிக்கி படிக்க.


தேசப்பற்று-இன்று!

மார்ச் 27, 2010

படித்த இளைஞனே!

வா!

படித்து விட்டாயா?

வந்தவுடன் என்ன அவசரம்?

ஜார்ஜ் புஷ் உன் கனவில் வருகிறாரா?

பில் கேட்ஸ் உன் முன் மாதிரியா?

சரி நீ!

இந்திய இளைஞனே தான்!

இந்தியாவை விட்டுப்

போய் விட வேண்டும் என்ற எண்ணம்

இந்திய இளைஞனைத் தவிர

எந்த இளைஞனுக்கும் வராது!

உன் அதிகபட்ச இலட்சியம்

ஆறாயிரம் மைல்கள் தாண்டிய

அமெரிக்கா!

உன் குறைந்தபட்சஇலட்சியம்

இரண்டாயிரம் மைல்கள் தாண்டிய

அரேபியா!

வயிற்றை

இந்தியாவில் நிரப்பிக் கொண்டு

மூளையை

அயல் நாட்டில் விற்கப் போகிறாய்!

உன்னை

இந்தியப் புழு என்றால்

அழுவாய்!

அமெரிக்கப் புழு என்றால்

ஆனந்தமாவாய்!

அமெரிக்க-பிரிட்டிஷ்

தூதரக சாலைகளை

நடந்து நடந்து தேய்ப்பாய்!

ஒரு வழியாய் பயணமாவாய்…

அதுவும்

இந்தியன் ஏர்லைன்ஸ் என்றால்

“ச்சீ” என்பாய்!

என்னே உன் தேசியப் பற்று!

நீ இந்தியத் தாயின்

கண்ணில் விழுந்த

தூசி அல்ல…ஊசி!

உனக்கு சின்ன வயதில்

சுதந்திர தினத்தன்று

தேசியக் கொடியை

குண்டூசியால் சட்டைப் பையில்

குத்தியிருக்கக் கூடாது!

ஒரு ஆணி வைத்து

இதயத்தில் அடித்திருக்க வேண்டும்!

—-யாரோ.

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்.

Recent Posts:

Earth Hour 2010, March 27-08:30 PM to 09:30 PM

Scientific Information- அறிவியல் பற்றிய தளங்கள்

தினமணி இணையதளத்தில் உங்கள் வலைப்பூ

IPL 20-20 Videos Hatrick Wickets

இணையத்தில் வாக்காளர் பட்டியல்

Quit Smoking…புகைப்பதை நிறுத்துங்கள்!

CII Sohrabji Godrej Green Business Center Hyderabad


தன்னம்பிக்கை டானிக்-1

பிப்ரவரி 2, 2010

எனது டைரி குறிப்புகள்-1:

நட்சத்திரக் கூட்டங்களுக்கு குறி வையுங்கள். அப்போது தான் வானின் உச்சியையாவது நிச்சயம் தொட முடியும்.

”பிரம்மாண்டமாகத் திட்டமிடுங்கள்”….துணை இல்லையே என்று கவலைப்படாதீர்கள்…உங்களைச் செயல்படுத்த 60 லட்சம் கோடி உயிரணுக்கள் தயாராக உள்ளன. – ரூதர்போர்டு.

Don’t be Ever Rest.

Be an Everest.

தோல்வியை எருவாக்கு;

வெற்றியை உருவாக்கு.

சுற்றவே பிறந்தது பூமி

சுடரவே பிறந்தது கதிர்

உலவப் பிறந்தது காற்று

உழைக்கப் பிறந்தவன் நீ.

When you Rest, You Rust.

வீசும் காற்றும் எழும் அலையும் எப்போதும் மிகத் திறமையான மாலுமியின் பக்கமே இருக்கும்.

வீரியத்தோடு விடாது முயற்சி செய்! தயங்கிப் பின் வாங்காதே! தளர்ந்து தடம் புரண்டு விடாதே! தொடர்ந்து செய்! துணிந்து செய்! ஊக்கத்தோடு பாடுபடு! உறுதியோடு பாடுபடு! அப்போது காலங்கனிந்து கைகூடி வரும். வெற்றி தேவதை உன்னை வாழ்த்தி வரவேற்பாள்!

விழாமையன்று நம் பெருமை…விழுந்தொரும் எழுவதே!

சுறுசுறுப்பாயிருங்கள்…ஓடிக் கொண்டிருக்கும் நீரில் தான் ஆக்சிஜன் அதிகம்.

தீப்பொறியாக ஒரு கணம் இருந்து விட்டு மறைந்து விடுங்கள்.காலமெல்லாம் புகைந்து கொண்டிருப்பதை விட…

தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல;

தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி.

மறந்து விடாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உங்கள் சரித்திரத்தில் ஒவ்வொரு பக்கமாகும்..

மனச இரும்பாக்கனும்; மலய துரும்பாக்கனும்.

Even the word Impossible says I’m Possible.

பறந்து செல்லுங்கள். உலகம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள். நேரத்தைத் தவிர…- நெப்போலியன்.

If you want to be Remembered do one thing superbly well.

தன்னம்பிக்கை டானிக்-2 வேண்டுமா? Tamilish தளத்தில் வாக்களித்து இதனை பிரபல இடுகை ஆக்குங்கள்.

இது தான் Give & Take பாலிசி…

Recent Posts:

Happy Telugu Song Very Funny

All about 108: Medical, Police, Fire

India:Pulsar, China:Gulsar

மகோன்னதம்


மகோன்னதம்

ஜனவரி 27, 2010

நான் முட்டிக் கொண்ட
போதெல்லாம் உடைந்து
போனது என் தலை மட்டுமல்ல…
வெற்றியின் கட்டுத் தளைகளும் தான்…

நான் விழுந்த போது
தேய்ந்து போனது
என் முகம் மட்டுமல்ல
தோல்வியின் அகமும்!

எத்தனையோ இரவுகள்
எத்தனையோ விளக்குகள்
ஆனாலும் எனது
கண்கள் எப்போதும்
வெற்றியின் ஒளியை நாடியே!

புயலும்… பூகம்பமும்…
என் வீட்டு வாசலில்
இடியும் மழையும்…
என் வீட்டுக் கூரையில்!

ஆனாலும் நான்
நிம்மதியாகவே உறங்குகிறேன்
நம்பிக்கை என்னும் போர்வைக்குள்!

வானத்து நட்சத்திரங்களுக்கும்
ஒட்டடை தட்டும் வல்லமை வாய்ந்தவை
என் கரங்கள்

நான் உமிழ்ந்தால்
சூரியனும் உறைந்து போகும்
நான் பெருமூச்செறிந்தால்
எட்டுத் திக்குகளும்
இடம் மாறிப் போகும்.

என் பிரியமான தோல்விகளே
பிரபஞ்சத்தின் பால்வீதி மண்டலத்தை மடித்து
சட்டைப் பைக்குள் பத்திரப்படுத்திக் கொள்ளும்
திறம் வாய்ந்த என் மீது
உங்களால் நகக் கீறல்
கூட ஏற்படுத்த முடியாது…

நம்பிக்கை விந்துவால்
கருவானவன் நான்.

என் கல்லூரி நண்பர்:வேதான் “வினோத் பாபு”

இவரது மற்றொரு கவிதை: வளைவுச் சாலைப் பயணம்!

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்


கெமன்ஸிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது

ஜனவரி 27, 2010

Holiday Inn ன் கெமன்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள இருபது…

1. தினமும் அரை நாள் கடுமையாய் உழையுங்கள்.

2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்பு தான்.

3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்.

4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியில் தான் ஏற வேண்டும்.

5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு.ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது. மற்றொன்று நாமே ஏறுவது.

6. வியாபார அபாயங்களைக் கண்டு அஞ்சக்கூடாது.

7. பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதை விட செய்யும் காரியத்தை னமக்கு பிடித்ததாய் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

8. “முடியாது” “நடக்காது” போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.

9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.

10. வெற்றிக்குத் தேவை பாதி அதிர்ஷ்டம், பாதி அறிவு.

11. துணிச்சலாய் முடிவுகள் எடுக்க வேண்டும்.

12. நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் உழைக்க வேண்டும்.

13. மற்றவர்களை உங்களுக்காக உழைக்க வைப்பதில் புத்திசாலித்தனம் இருக்கிறது.

14. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

15. எதையும் நாளை என்று தள்ளிப் போடக் கூடாது

16. கைக்கடிகாரத்தைக் கொடுத்து விட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள்.

17. மற்றவர்கள் நம்மை வழி நடத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

18. கவலைப்படாதீர்கள். கவலையில் எந்த நன்மையும்  கிடைக்காது.

19. சந்தோசத்தை கொடுப்பது பணம் மட்டும் அல்ல.

20. கடவுளை நம்புங்கள்.

நன்றி: குமுதம் 18.08.2003

பிற தொடர்புடைய இடுகைகள்:

ஹைகூ கவிதைகள்- இறையன்பு

VICTORY- வெற்றிக்கான விளக்கம்!

தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள்

சாதனைத் தமிழர் கல்யாணராமன்