Japan – ஒரு ஃபீனிக்ஸின் கதை

மார்ச் 23, 2009

எஸ். சந்திரமௌலி எழுதி கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட Japan – ஒரு ஃபீனிக்ஸின் கதை புத்தகத்தை சமீபத்தில் படித்தேன்.

இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பின் ஜப்பான் எவ்வாறு முன்னேறியது என்று சிறப்பான நடையில் எழுதப்பட்டு உள்ளது. இரண்டாம் உலகப் போரின் “Little Boy” “Fatsman” ல் துவங்கி,ஜப்பானின் சாதனையான E-Defense வரையிலும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.ஜப்பானியர்களின் நாட்டுப்பற்று, கல்விமுறை, உதவும் மனப்பான்மை, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, விவசாய முறைகள், கம்ப்யூட்டர் துறை, புல்லட் ரயில் தொழில் நுட்பம்,Kaizen, Zero Error, Hoshin Kanri Sony Club போன்ற உலகப் புகழ் பெற்ற நிர்வாக கொள்ககள், ஜப்பான் நாணயமான யென்னின் கதை போன்றவை விவரமாக எழுதப்பட்டு உள்ளன.

புத்தகத்தில் என் சிந்தனைகளைக் கிளறிய பகுதி: ஒரு பிரிட்டிஷ் தொழிலதிபர் ஜப்பானுக்கு வந்திருந்த பொழுது,ரயிலின் முதல் வகுப்பில் பயணம் செய்தார். அவருக்கு எதிரில் இருந்த இருக்கையில் ஒரு வயதான மனிதர் அமர்ந்து இருந்தார். அந்த முதியவரை ரயில்வே ஊழியர் என்று நினைத்தார் பிரிட்டிஷ்காரார்.காரணம் கிழிந்திருந்த ரயில் இருக்கையை அவர் ஊசி நூலால் தைத்துக் கொண்டிருந்தது தான்.கிழிசலைத் தைத்து முடித்து விட்டு அமர்ந்த அந்த முதியவரிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, அவரது பணியைப் பாராட்டினார் அந்த பிரிட்டிஷ் தொழிலதிபர். பாராட்டுக்கு நன்றி தெரிவித்த முதியவர், தனது விசிட்டிங் கார்டை நீட்டினார். அதைப் படித்து பார்த்தவுடன்,பிரிட்டிஷ் தொழில் அதிபருக்கு பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது.ஏன் தெரியுமா? அவர் நினைத்தது போல அந்த முதியவர் ரயில்வே ஊழியர் இல்லை. ஒரு பிரபல நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். ரயில் பயணத்தின் போது இருக்கை கிழிந்து இருப்பதைப் பார்த்த உடன் சிறிதும் தயங்காமல் அதைத் தைத்துவிட்டார்.‘இதை எல்லாம் நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?ரயில்களை பராமரிப்பது ரயில்வேயின் வேலை தானே?’ என்று பிரிட்டிஷ்காரர் கேட்க, அந்த முதியவர், ‘ரயில்வே ஜப்பானுக்குச் சொந்தமானது அல்லவா? அதை நன்கு பராமரிக்க வேண்டும் என்பதில் எனக்கும் பங்கு உண்டல்லவா?’ என்று பதிலுக்கு கேட்டு பிரிட்டிஷ்காரரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதனைப் படித்த பிறகு, இந்தியா இன்னும் ”வளரும் நாடாகவே” இருப்பதன் அர்த்தத்தை அறிந்து கொண்டேன். ஆயிரம் தனி மனிதர்களின் சாதனைச் சரித்திரத்தை படிப்பதும் ஒன்றுதான்; ஜப்பானின் இந்த வெற்றிக் கதையை படிப்பதும் ஒன்றுதான் என்ற வாசகத்தை தாங்கி வரு இந்த புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்றுதான்.

Advertisements

ISBN என்பது என்ன?

ஜனவரி 4, 2009

கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி அவர்களின் பயன்மிகு கோப்பு


கிழக்கு பதிப்பகம்-Orkut Community

திசெம்பர் 1, 2008
kizhakkuorkut1

தரமான நல்ல புத்தகங்களை சர்வதேசத் தரத்தில் வெளியிடுவதே கிழக்கு பதிப்பகத்தின் நோக்கம். புத்தகம் என்பது ஒரு பொருள் அல்ல. அது ஓர் இயக்கம். New Horizon Media Private Limited நிறுவனத்தின் ஓர் அங்கமான கிழக்கு பதிப்பகம், தமிழில் இலக்கியம், கலை, அறிவியல், அரசியல், சமூகம், வரலாறு, மானுடவியல், வாழ்க்கை, கேளிக்கை எனப் பல்வேறு துறைகள் சார்ந்த ஆழமும் அக்கறையும் மிக்க படைப்புகளைத் தொடர்ந்து வெளியிடும். உள்ளடக்கம், உருவம் இரண்டிலுமே சமரசமற்ற, உயர்தரத்தைப் பேண விரும்புகிறது கிழக்கு

என்ற உத்தரவாதத்துடன் அறிமுகம் ஆகி சொன்னதைச் செய்து கொண்டிருக்கும் கிழக்கின் வாசகர்கள், நலம்விரும்பிகளுக்காக Orkut ல் ஒரு Community…

இங்கே நீங்கள் விமர்சிக்கலாம்!

பிடித்த வரிகளை பகிர்ந்து கொள்ளலாம்!

புதிய புத்தக வெளியீடு பற்றிக் கூறலாம்!

கிழக்கு பதிப்பக Community க்கு வருகை தர இங்கே க்ளிக்கவும்