தேசப்பற்று-இன்று!

மார்ச் 27, 2010

படித்த இளைஞனே!

வா!

படித்து விட்டாயா?

வந்தவுடன் என்ன அவசரம்?

ஜார்ஜ் புஷ் உன் கனவில் வருகிறாரா?

பில் கேட்ஸ் உன் முன் மாதிரியா?

சரி நீ!

இந்திய இளைஞனே தான்!

இந்தியாவை விட்டுப்

போய் விட வேண்டும் என்ற எண்ணம்

இந்திய இளைஞனைத் தவிர

எந்த இளைஞனுக்கும் வராது!

உன் அதிகபட்ச இலட்சியம்

ஆறாயிரம் மைல்கள் தாண்டிய

அமெரிக்கா!

உன் குறைந்தபட்சஇலட்சியம்

இரண்டாயிரம் மைல்கள் தாண்டிய

அரேபியா!

வயிற்றை

இந்தியாவில் நிரப்பிக் கொண்டு

மூளையை

அயல் நாட்டில் விற்கப் போகிறாய்!

உன்னை

இந்தியப் புழு என்றால்

அழுவாய்!

அமெரிக்கப் புழு என்றால்

ஆனந்தமாவாய்!

அமெரிக்க-பிரிட்டிஷ்

தூதரக சாலைகளை

நடந்து நடந்து தேய்ப்பாய்!

ஒரு வழியாய் பயணமாவாய்…

அதுவும்

இந்தியன் ஏர்லைன்ஸ் என்றால்

“ச்சீ” என்பாய்!

என்னே உன் தேசியப் பற்று!

நீ இந்தியத் தாயின்

கண்ணில் விழுந்த

தூசி அல்ல…ஊசி!

உனக்கு சின்ன வயதில்

சுதந்திர தினத்தன்று

தேசியக் கொடியை

குண்டூசியால் சட்டைப் பையில்

குத்தியிருக்கக் கூடாது!

ஒரு ஆணி வைத்து

இதயத்தில் அடித்திருக்க வேண்டும்!

—-யாரோ.

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்.

Recent Posts:

Earth Hour 2010, March 27-08:30 PM to 09:30 PM

Scientific Information- அறிவியல் பற்றிய தளங்கள்

தினமணி இணையதளத்தில் உங்கள் வலைப்பூ

IPL 20-20 Videos Hatrick Wickets

இணையத்தில் வாக்காளர் பட்டியல்

Quit Smoking…புகைப்பதை நிறுத்துங்கள்!

CII Sohrabji Godrej Green Business Center Hyderabad

Advertisements

ஸ்ரீ யந்திரம்: Sri Yantra

பிப்ரவரி 5, 2010

இங்கே காட்டப்பட்டுள்ள ஸ்ரீ யந்திரமானது நம் மன ஒருமைப்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

5000 ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாகக் கருதப்படும் இதனை எவ்வாறு உபயோகிப்பது?

1. படத்தினை புதிய Window வில் திறந்து கொள்ளவும்.

2. அமைதியான இடத்தில் தளர்வாக அமர்ந்து கொள்ளவும்.

3. படத்தின் மையத்தில் உள்ள புள்ளியில் உற்று நோக்கவும்.

4. உங்கள் பார்வை படத்தில் அங்குமிங்கும் அலை மோதும். Optical Illusion இதற்குக் காரணம்.

5. மையப் புள்ளியிலேயே சிந்தனை/பார்வை இருக்கட்டும்.

இவ்வாறு செய்வது இடது மற்றும் வலது மூளைக்கு இடையிலான தொடர்பை அதிகரிக்கிறது. இது உங்கள் மன ஒருமைப்பாடு (Concentration) மற்றும் நினைவாற்றல் (Memory Power) அதிகரிக்க உதவுகிறது.

இப்பயிற்சியை அதிக நேரம் செய்ய வேண்டாம். சில நிமிடங்கள் மட்டும் செய்யவும்.

பிறகென்ன Tamilish ல் ஓட்டுப் போட வேண்டியது தானே…

Recent Posts:

புலிகளைப் பாதுகாப்போம்-Save Tigers

New Olympic Games- Just for Fun

Best Videos of Cricket

தன்னம்பிக்கை டானிக்-1


தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள்

திசெம்பர் 7, 2009

நமது தன்னம்பிக்கையை தேடிப் பெறுவதற்கு, அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு கடைபிடிக்க வேண்டிய 5 வழிகள்:

என்னும் நூலுக்கு சொக்கன் அவர்கள் குமுதம் இதழில் எழுதிய விமர்சனம்

1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள்.

2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம்.

3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள்.

நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.

4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாகட்டும்.

5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்.


மாணவரைத் தத்தெடுங்கள்!

ஜூன் 10, 2009

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் கட்-ஆப் மதிப்பெண் 195-க்கு அதிகம் எடுத்தவர்கள் பொறியியல் படிப்புக்கு 6500 பேர்; மருத்துவப் படிப்புக்கு 7500 பேர். விண்ணப்பங்களும் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக விற்றுள்ளன. இது மகிழ்ச்சியைத் தருகிறது என்றாலும், இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உயர் கல்வியைத் தொடருவதற்குப் போதுமான நிதிவசதி இல்லாதவர்கள் என்பது சுடுகின்ற உண்மை.

வங்கிக் கடன் கிடைக்கும் என்றாலும்கூட, குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் ரூபாயை முன்னதாகச் செலவழித்த பிறகுதான் வங்கிக் கடனை வாங்கி ஈடுசெய்ய முடியும். ஆனால் அதற்கும் வழியில்லாமல், கலந்தாய்வு நெருங்கிவரும் நிலையில், பல குடும்பங்களின் இரவுகள் தூக்கமின்றி விடிந்துகொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் குஜராத் மாநில காவல்துறை ஒரு நல்ல வழியைக் காட்டியுள்ளது. “மாநிலத்தில் உள்ள 500 காவல்நிலையங்களும், அதிக மதிப்பெண் பெற்றும் உயர்கல்வியைத் தொடர வழியில்லாத ஏழை மாணவர் ஒருவரைத் தத்தெடுக்கும்’ என்று அந்த மாநில காவல்துறைத் தலைவர் எஸ்.எஸ். கந்தவவாலா தெரிவித்துள்ளார். காவல் உயர் அதிகாரிகள் தனிப்பட்ட முறையிலும் தத்தெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், தானே ஒரு மாணவரை தத்தெடுத்துள்ளார்.

“இதற்கான செலவை அரசு சாரா நிறுவனங்களின் ஆதரவைப் பெற்று ஈடுசெய்வோம்’ என்றும் கூறியுள்ளார். அடுத்தவர்களிடம் பணம் வாங்கித்தானே படிக்க வைக்கப் போகிறார்கள் என்று எண்ணத் தோன்றும். ஆனால், புரவலர்களை பிடிப்பது எத்தனை சிரமம் என்பதும், இந்த விஷயத்தில் காவல்துறை விரல்அசைவில் விந்தைகள் செய்யும் என்பதும் அறிந்திருப்பவர் யாருமே, காவல்துறையின் இத்திட்டத்தைப் பாராட்டவே செய்வர்.

எல்லா மாநிலங்களிலும், போக்குவரத்துக் காவல்துறைக்குத் தேவையான அனைத்து தளவாடப் பொருள்களையும் அந்தந்த நகர்ப் பகுதிகளில் உள்ள அரசு சாரா, தனியார் நிறுவனங்கள்தான் வழங்குகின்றன. இதேபோன்று ஏழை மாணவரைத் தத்தெடுத்து, அவரது உயர்கல்விச் செலவுக்கு- கல்விக்கட்டணம், விடுதிச்செலவு உள்பட ஆண்டுக்கு சுமார் ரூ.80 ஆயிரம்- பொறுப்பேற்பது காவல்துறைக்கு மிக எளிமையான செயல்.

இதேபோன்று, தமிழகக் காவல்துறையும் அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், படிக்க வசதி இல்லாத சிறந்த மாணவர்களைத் தத்தெடுத்தல் இயலாத காரியம் அல்ல. இத்தகைய நற்செயல் காவல்துறையின் மீதான பொதுமக்களின் பார்வையை மாற்றப் பெரிதும் உதவும்.

காவல்துறை மீது குற்றவாளிகளுக்குப் பயமும், பொதுமக்களுக்கு மரியாதையும் இருக்க வேண்டும். தற்போது அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்பதுடன், காவல்துறை என்றாலே ஆளும்கட்சியின் அடியாள் என்ற எண்ணமும் மக்களிடம் ஏற்பட்டுவிட்டது. இதை மாற்ற வேண்டிய பொறுப்பும் சமூகக் கடமையும் காவல்துறைக்கு உள்ளது. இத்தகைய மாணவர் தத்தெடுப்பு திட்டங்கள் காவல்துறைக்குப் புதிய பெருமையை – பொலிவை நிச்சயமாக ஏற்படுத்தும்.இத்தகைய திட்டங்களில் வசதியுள்ள சிலரும் தங்கள் குழந்தைகளை நுழைத்துவிடும் சம்பவங்கள் நடக்கவே செய்யும். ஆனாலும், 90 சதவீதம் மாணவர்கள் உண்மையாகவே ஏழைகளாகவும், சிறந்த மாணவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஏழை மாணவர்களைத் தத்தெடுப்பதில் காவல்துறை மட்டுமன்றி வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் போன்றவையும் ஈடுபடலாம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு சில வங்கிகள், மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ. 50 கிடைக்க வழிசெய்தன. ஒரு கல்லூரிக்கு ஓரிரு மாணவர்கள் என வரையறை செய்து, கல்லூரிப் பேராசிரியர்கள் பரிந்துரைத்த மாணவர்களை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் பணியாற்ற வகை செய்தார்கள். பெரும்பாலும், கடன் நிலுவை அறிவிப்புக் கடிதங்கள் எழுதுதல் மற்றும் கடிதங்களைப் பிரித்துக் கோப்புகளில் அடுக்குதல் போன்ற பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. இப்போதைய கல்விக் கட்டணங்களைப் பார்க்கும்போது அத்தகைய சிறு பணிகளால் எந்த நன்மையும் ஏற்பட்டுவிட முடியாது. மாறாக, ஒவ்வொரு வங்கிக் கிளையும் ஒரு மாணவரைத் தத்தெடுத்து கல்விச் செலவை ஏற்க முன்வர வேண்டும். வேண்டுமென்றால், அனைத்துப் பருவத் தேர்வுகளிலும் தொடர்ந்து தேர்ச்சி பெற வேண்டும் என்பதை நிபந்தனையாக வைத்துக்கொள்ளலாம்.

விளையாட்டு வீரர்களின் முதுகிலும், தோளிலும், காலிலும், மட்டையிலும் வணிகச் சின்னம் பொறிப்பதற்கு ஆகும் செலவில் ஒரு சிறு பகுதி போதும் – ஒரு மாணவரின் உயர் கல்விச் செலவுக்கு.Japan – ஒரு ஃபீனிக்ஸின் கதை

மார்ச் 23, 2009

எஸ். சந்திரமௌலி எழுதி கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட Japan – ஒரு ஃபீனிக்ஸின் கதை புத்தகத்தை சமீபத்தில் படித்தேன்.

இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பின் ஜப்பான் எவ்வாறு முன்னேறியது என்று சிறப்பான நடையில் எழுதப்பட்டு உள்ளது. இரண்டாம் உலகப் போரின் “Little Boy” “Fatsman” ல் துவங்கி,ஜப்பானின் சாதனையான E-Defense வரையிலும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.ஜப்பானியர்களின் நாட்டுப்பற்று, கல்விமுறை, உதவும் மனப்பான்மை, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, விவசாய முறைகள், கம்ப்யூட்டர் துறை, புல்லட் ரயில் தொழில் நுட்பம்,Kaizen, Zero Error, Hoshin Kanri Sony Club போன்ற உலகப் புகழ் பெற்ற நிர்வாக கொள்ககள், ஜப்பான் நாணயமான யென்னின் கதை போன்றவை விவரமாக எழுதப்பட்டு உள்ளன.

புத்தகத்தில் என் சிந்தனைகளைக் கிளறிய பகுதி: ஒரு பிரிட்டிஷ் தொழிலதிபர் ஜப்பானுக்கு வந்திருந்த பொழுது,ரயிலின் முதல் வகுப்பில் பயணம் செய்தார். அவருக்கு எதிரில் இருந்த இருக்கையில் ஒரு வயதான மனிதர் அமர்ந்து இருந்தார். அந்த முதியவரை ரயில்வே ஊழியர் என்று நினைத்தார் பிரிட்டிஷ்காரார்.காரணம் கிழிந்திருந்த ரயில் இருக்கையை அவர் ஊசி நூலால் தைத்துக் கொண்டிருந்தது தான்.கிழிசலைத் தைத்து முடித்து விட்டு அமர்ந்த அந்த முதியவரிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, அவரது பணியைப் பாராட்டினார் அந்த பிரிட்டிஷ் தொழிலதிபர். பாராட்டுக்கு நன்றி தெரிவித்த முதியவர், தனது விசிட்டிங் கார்டை நீட்டினார். அதைப் படித்து பார்த்தவுடன்,பிரிட்டிஷ் தொழில் அதிபருக்கு பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது.ஏன் தெரியுமா? அவர் நினைத்தது போல அந்த முதியவர் ரயில்வே ஊழியர் இல்லை. ஒரு பிரபல நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். ரயில் பயணத்தின் போது இருக்கை கிழிந்து இருப்பதைப் பார்த்த உடன் சிறிதும் தயங்காமல் அதைத் தைத்துவிட்டார்.‘இதை எல்லாம் நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?ரயில்களை பராமரிப்பது ரயில்வேயின் வேலை தானே?’ என்று பிரிட்டிஷ்காரர் கேட்க, அந்த முதியவர், ‘ரயில்வே ஜப்பானுக்குச் சொந்தமானது அல்லவா? அதை நன்கு பராமரிக்க வேண்டும் என்பதில் எனக்கும் பங்கு உண்டல்லவா?’ என்று பதிலுக்கு கேட்டு பிரிட்டிஷ்காரரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதனைப் படித்த பிறகு, இந்தியா இன்னும் ”வளரும் நாடாகவே” இருப்பதன் அர்த்தத்தை அறிந்து கொண்டேன். ஆயிரம் தனி மனிதர்களின் சாதனைச் சரித்திரத்தை படிப்பதும் ஒன்றுதான்; ஜப்பானின் இந்த வெற்றிக் கதையை படிப்பதும் ஒன்றுதான் என்ற வாசகத்தை தாங்கி வரு இந்த புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்றுதான்.


சாதித்துக் கொண்டிருக்கும் செந்தில்குமார்

நவம்பர் 26, 2008

குமுதம் கட்டுரையிலிருந்து:

படித்தது இன்ஜினீயரிங். பார்த்தது அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலை. சம்பளம் மூன்று வருடத்திற்கு முன் மாதம் நான்கு லட்சம்…

பேங்கில் பேலன்ஸ் கோடிகளை நெருங்கும்போது மனதில் சின்ன குறுகுறுப்பு. பட்டென வேலையை விட்டார். திருச்சிக்குத் திரும்பினார் செந்தில்குமார்.

`உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிட்டு!’ என்று உறவுக்காரர்கள் முதல், நண்பர்கள் வரை பலரும் ஆலோசனைகளையும், ஆற்றாமையையும் அள்ளிக்கொட்ட, எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கிராமம் கிராமமாக சைக்கிளில் அலைந்திருக்கிறார் செந்தில்குமார். இறுதியாக தேனூரில் தன் வாழ்க்கையை செட்டிலாக்க முடிவு செய்தார்.

விவசாயம், வேலை, சாலை என சகலத்திலும் பின்தங்கிய ஒரு குக்கிராமத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் செட்டிலாகி சாதிக்க என்ன இருக்கும்?

முதல்கட்டமாக சின்னதாக ஒரு மருத்துவமனை, ஒரு கம்ப்யூட்டர் சென்டர். சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு மரத்தடி பாடசாலை என தன் கைக்காசை செலவழித்து காரியங்களில் இவர் இறங்க, இன்று ஒட்டுமொத்த கிராமமும் செந்தில்குமாரை `எங்க ஊர் சிவாஜி!’ என்கின்றனர்.

பிறந்தது திருச்சி அருகே உள்ள திண்ணனூர் கிராமம் என்றாலும், தேனூரை தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தை மேம்படுத்த தன் சேமிப்பில் இருந்து இதுவரை நாற்பது லட்ச ரூபாயை செலவழித்திருக்கும் இந்த லட்சிய மனிதரை நேரில் சந்தித்தோம்.

வேஷ்டி-சட்டை. அதுவும் மலிவாக. கஞ்சிபோட்டு விறைப்பாக இல்லாமல் குழைவாக… கேரியர் வைத்த சைக்கிள். ஹாண்டில் பாரில் சாப்பாட்டுத் தூக்குப் பாத்திரம். கேரியரில் மஞ்சள் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி. ஒழுங்கு படுத்தாத மீசை, தாடி என தானும் ஒரு கிராமத்து மனிதராகவே மாறியிருந்தார் செந்தில்குமார்.

“நான் மாறவில்லை. எப்பொழுதுமே இப்படித்தான்” என்றவர் தன்னைப்பற்றிச் சொல்லத் துவங்கினார்.
“அப்பா கோபாலன். சர்க்கரை ஆலையில் வேலை பார்த்தவர். அம்மா லீலா. அண்ணன் டாக்டர், இலண்டனில். அக்கா திருமணமாகி சென்னையில். நான் கிராமங்களுக்கு சேவை செய்யப்போறேன்னு தேனூருக்கு வந்திட்டேன்.

2005 ஜனவரி 24-ல் வேலையை ஆரம்பிச்சேன். இன்னைக்கு நாலு வருஷம் ஆகப் போகுது. பாதி நிறைவேறி இருக்கு!

கிராமங்களில் அடிப்படையான மருத்துவ வசதி இல்லாமல் எத்தனையோ பேர் தெனந்தெனம் சாகிறாங்க. அப்படி ஒரு கிராமமாகத்தான் தேனூரும் இருந்துச்சு. அதனால் முதலில் ஒரு மருத்துவமனையைக் கட்டினேன்.

அப்புறம் பள்ளிக்கூடம்.

கல்விக்கூடத்தை இயந்திரமயமாக்காமல் யதார்த்த அணுகுமுறையை கடைப்பிடிக்கிறோம். முதலில் உலக வரலாறு படிக்கணும்னு அவசியமில்லை. உங்களைச் சுத்தி இருக்கிற கிராமங்களைப் பற்றியும், அந்த ஊர்களோட சிறப்புகளையும் தெரிஞ்சுக்கிடணும். இதுதான் எங்க பாட முறை.

கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தணும். அதுக்காக தொழிற்கல்வியை தொடங்கினோம். மண்புழு உரம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், திருப்பூர் வேஸ்ட் பனியன்களை வரவச்சு அதை நூலாக பிரித்துக்கொடுப்பது, சமுதாயக்கூடம் கட்டுவதென பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்பை இந்த கிராமத்தில் அதிகப்படுத்தி இருக்கோம். இயற்கை வேளாண்மையை செய்கிறோம். எண்ணெயும் எடுக்கிறோம். இதுவரை 3000 மரங்கள் நட்டிருக்கோம்.

இதெல்லாம் சாதாரண விஷயந்தான். மனசுக்குப் பிடிச்சிருக்கு. அதனால சுமையாத் தெரியல. கிராமத்துக்கு நல்லது செய்யணும்ங்கிற விஷயம் மட்டுந் தான் கடமையாத் தெரியுது. இப்ப நான் செய்யற விஷயம்… ரொம்ப நாளா என் மனசுல ஊறுன விஷயம்.

நான் ஆரம்பித்த இந்த வேலையில் இப்பொழுது என் கல்லூரி, சாஃப்ட்வேர் நண்பர்கள் உதவி பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.

இனி எங்களுக்குத் தேவை என்னவென்றால், அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், செவிலியர் எல்லாம் வாரம் ஒரு நாளோ, மாதம் இரு நாளோ கொஞ்சம் வந்து போனால் போதும். இந்த கிராமங்களின் வளர்ச்சியில் இன்னும் வேகம் கூடும். இப்போதைக்கு இதுதான் எனக்கு தேவை” என்று பிரமிப்பூட்டுகிறார் செந்தில்குமார்.

செந்தில்குமாரின் தாய் லீலாவோ, “சீக்கிரம் இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணுங்கிறதுதான் எங்களோட ஆசை. ஆனால், சம்பாதித்த காசை சேவைன்னு செலவு பண்ற பிள்ளைக்கு யார் பொண்ணு தர்றாங்க… அதுவுமில்லாம `உங்க புள்ளை நல்லாப் படிச்சுட்டு, நல்லா சம்பாதிக்கிறப்பவே ஏன் இப்படி ஆயிட்டார்’னு அபத்தமா பேசுறதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்குதுங்க!” என்று வேதனையோடு கண்கலங்கினார்..