Creative Ads of Gawaskar

மே 11, 2010

சென்னையை சேர்ந்தவர் கவாஸ்கர் விஸ்வநாதன். இவர் தனது கற்பனைத் திறமையால் பல சமுக நலன் மிக்க விளம்பரங்களை  உருவாக்கி தனது வலைப் பதிவில் (My Creatives) இணைத்துள்ளார். ஒரு தமிழருககுள்ளே   ஒளிந்திருந்த கற்பனைத் திறமையை பாராட்டும் வாய்ப்பாகவும் அவரது திறமைகளை எனது வலைப் பக்கத்திற்கு வருபவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக இதைக்கருதுகிறேன்.

இதோ முதலாவது படைப்பு.

இன்றைய அவசியத்தேவை….?

மரங்கள்.

இதே நிலை நீடித்தால் இந்தியாவின் தேசியக் கோடியில் பசுமையின் அடையாளமான பச்சை நிறம் காணாமல் போய்விடும் என்கிறார்.அதனால் மரம் வெட்டுவதை நிறுத்தி விடுங்கள்!

இந்த படத்தை பார்த்தீர்களா ?

ஏசு  சிலுவை இல்லாமல் இருக்கிறாரா?

மரங்கள் பற்றாக்குறை!

Drink & Drive என்பது Drink & Die என்பதே!

இதோ இரத்த தானைத்தை வலியுறுத்தும் அற்புதமான படைப்பு.

He is not alive now

என்ற ஒரு வரிக் கதையை

He is alive now

என்று மாற்றும் சக்தி நம்மிடம் தான் உள்ளது.

அதனால் இரத்த தானம் செய்வோம் என்கிறார்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த தனது வழிமுறைகளைக் சொல்கிறார். இதோ…

வளரும் தமிழரை வாழ்த்துவோம்  வாருங்கள்!

அவரது இணையம்: http://www.gawaskar.blogspot.com/

(மேலும் பல விளம்பர படங்கள் காணக் கிடைக்கின்றன)

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்

Recent Posts:

பணம் செய்ய உதவும் இணையதளங்கள்

Technology Development – Video

மே தின வாழ்த்துக்கள்!

கன்னியாகுமரி புகைப்படங்கள்

Phobia – பயம் பயமறியாது!

Google India Shopping Tool

Advertisements

பணம் செய்ய உதவும் இணையதளங்கள்

மே 7, 2010

ஏற்கனவே பங்குச் சந்தை பற்றிய இணையதளங்கள் இடுகைக்கு இருந்த வரவேற்பும் இந்த இடுகைக்குக் காரணம். இதுவரை இந்த இடுகை 600 முறை பார்வையிடப்பட்டுள்ளது. தினமும் ஒருவராவது இதனைப் படித்துப் பயன்பெறுகிறார். இது போன்ற பயனுள்ள இணையதளங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதன் விளைவே பின்வருகிறது.

பணம் சம்பாதிக்க, சேமிக்க, நல்வழியில் செலவழிக்க வழிகளை தந்துதவும் இணையங்களைக் காண்போம்.

முதலாவதாக,

Google  ளின் ஒரு சேவை. இங்கே யார் வேண்டுமானாலும் எந்த தலைப்பில் வேண்டுமானாலும் Tips கொடுக்கலாம். Google பயனர்கள் வாக்களிக்கலாம். சிறந்த Tips முன்னணியில் இருக்கும். Finance தலைப்பிலுள்ள Tips மிகவும் பயனளிக்கும் என நம்பலாம். Online ல் பில் கட்டணங்களை செலுத்துங்கள், நேரம், பெட்ரோல் ஆகியவற்றை சேமியுங்கள் (How to Pay your BSNL Bills Online?) என்பது போன்ற ஒரு வரி Tips நிறைய காணக் கிடைக்கின்றன.

இரண்டாவதாக,

இந்த இணையதளம் பன்முகத் தன்மைகள் கொண்டது. Loan, Life Insurance, Fixed Deposits போன்ற சேவை வழங்கும் நிறுவனங்களை Compare செய்ய உதவுகிறது. உதாரணத்திற்கு Fixed Deposit ற்கு அதிக வட்டி வழங்கும் Bank ஐ 39 வங்கிகள் அடங்கிய வரிசையில் இருந்து தேர்ந்தெடுக்கலாம். இதே போல் Mediclaim அல்லது மற்ற Insurance சேவையில் உள்ள நிறுவனங்களின் Premium தொகையை ஆராய்ந்து நமக்குத் தேவையான திட்டத்தை தேர்வு செய்யலாம்.

மூன்றாவதாக,

Google ன் Tipjar போன்றதொரு இணையதளம். சிறிது விளக்கங்களுடன். இங்கே பணத்தை சேமிக்க மட்டுமல்ல, Rapid share போன்ற இணையதளங்களில் Download செய்யும் நேரத்தை குறைக்க, புதிதாக சந்தைக்கு வந்துள்ள Gadgets இயக்குவது பற்றி அறிய, Software ன் Shortcut அறிந்து வேலைப்பளுவைக் குறைக்க என்று ஏகப்பட்ட பயனுள்ள செய்திகள் நிரம்பிக் கிடக்கின்றன.

நான்காவதாக,

பெரும்பாலும் இணையதளங்கள் வைத்து பணம் சம்பாதிப்பதைப் பற்றிக் கூறுகிறது. .Com Domain கள் வைத்திருப்பதன் பயன்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இன்று இணைய உலகில் Traffic, SEO என்னும் இரு காரணிகள் ஒரு இணையதளத்தின் வளர்ச்சிக்கான அவசியமானவை. இது பற்றிய உதாரணங்களும் தரப்பட்டுள்ளன.

ஐந்தாவதாக,

இங்கே தொழில்முனைவோருக்கான குறிப்புகள், Freelancing பற்றிய கட்டுரைகள், கல்லூரி மாணவர்களுக்கான பகுதி நேரத் தொழில்கள் என பல்வேறு கட்டுரைகள் விளக்கமாக, உதாரணங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆறாவதாக,

littlepeoplewealth.com இணையத்தில், 97 ways to Save Money என்னும் கட்டுரையில் உங்கள் செலவுகளைக் குறைப்பது, வருமானத்தினை அதிகரிப்பது, குழந்தைகள் செலவு, மளிகைச் செலவு போன்றவற்றைக் குறைப்பதற்கான வழிகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக,

http://taxworry.com/

ஜூலை மாதம் வந்தாலே, வருமான வரி கட்டவேண்டுமே என்று அடிவயிறு கலங்க ஆரம்பித்து விடும். இங்கே வருமான வரி பற்றிய பல்வேறு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

கடைசியாக,

20 Money Hacks என்னும் தலைப்பிலான இடுகை மாறுபட்ட கோணத்தில் ஆனால் எளிமையாக நம் நிதி நிலைமயை உயர்த்தும் வழிகளைச் சொல்கிறது. உதாரணத்திற்கு உடற்பயிற்சி செய்யுங்கள் என்கிறது. இது எவ்வாறு நம் நிதி நிலைமையை உயர்த்தும்? உடற்பயிற்சி உடலை நோயிலிருந்து காக்கும். அதனால் மருத்துவச் செலவுகள் குறைவதால் சேமிப்பு உயரும் என்கின்றது. இது போன்று பல கட்டுரைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

பணம் பற்றிய ஒரு கூற்று:

When you have Money in Hand, only you forget who are you,

When you donot have Money in your Hand, the whole world forgets who you are.

கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்கள் தங்கள் நிதிநிலையை எள்ளளவாவது உயர்த்த உதவும் என எண்ணுகிறேன்.

பணம் சேர்ப்பதோடல்லாது, ஏழை எளியோருக்கு கொடுத்து உதவுங்கள்.

தர்மம் தலை காக்கும்.

அதற்கான இணையங்களும் இதோ:

1. சென்னையைச் சேர்ந்த இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள சாரல் சமூக நல அமைப்பு – ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது. சாரலின் உதவிகள் புகைப்படத் தொகுப்பு, சாரலுக்கு நிதி உதவி அளிக்க


2. Give India என்னும் இணையவழி  200 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கும் அமைப்பு. மேலதிக விவரங்கள் Give India தளத்தில்


Technology Development – Video

மே 4, 2010

இந்த வீடியோவைப் பாருங்கள்..உலகம் எத்தனை வேகமாக முன்னேறி வருகிறது என்பது தெரியும்…

இனி மேலாவது நாளை, நாளை என்று  எந்த வேலையயும் தள்ளிப் போடாமல், இன்றே, இப்பொழுதே என்று செய்து முடித்து வெற்றி வாகை சூடுவோமாக!

”சரி சரி வீடியோவப் பத்தி சொல்லு” என்கிறீர்களா? இதோ சில….

அமெரிக்க மக்கள் தொகையை விட IQ அதிகமுள்ள 25% இந்தியர்கள் அதிகமிருப்பர்.

8 ல் 1 அமெரிக்க தம்பதியரின் முதல் சந்திப்பே இணையத்தில் தான்.

200 மில்லியன் உறுப்பினர்கள் Myspace  தளத்தில் உள்ளனர். Myspace ஒரு நாடாக இருந்தால் அது,

உலகில் மக்கள் தொகையில் 5ஆவது பெரிய நாடாயிருக்கும்.

Google  ல் ஒரு மாதத்திற்கு 31 பில்லியன் தேடல்கள் நடக்கின்றன. அப்படீன்னா B.G (Before Google) யுகத்தில் மக்களின் கேள்விகளிக்கு யார் விடையளித்திருப்பார்கள்?

50 மில்லியன் பேரை சென்றடைய Radio வுக்கு 38 வருடங்கள், TV க்கு 13 வருடங்கள் பிடித்தன. ஆனால் இணையத்திற்கு 4 வருடங்களும் Ipod க்கு 3 வருடங்கள், Facebook ற்கு 2 வருடங்களுமே ஆனது.

ஷேக்ஸ்பியர் இருந்த காலத்தை விட தற்போது ஆங்கில எழுத்துக்கள் 5 மடங்கு அதிகமாயிருக்கின்றது.

தொழில்நுட்பத் தகவல்கள் 2 வருடத்திற்கு ஒரு முறை இரு மடங்காகிறது. அப்படின்னா 1 Year ல படிக்கிற பாடம் 3 rd  Year ல Outdate ஆயிருக்கும்.

2049 ல உலகத்தில இருக்கற மனுசங்க வேலை எல்லாத்தையும் செய்யற மாதிரி ஒரு கம்ப்யூட்டர் கண்டுபிடிச்சிருப்பாங்க…

என்ன தலை சுத்துதா? கீழே விழறதுக்கு முன்னாடி,

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்.

Recent Posts:

Technology Development – Video

மே தின வாழ்த்துக்கள்!

கன்னியாகுமரி புகைப்படங்கள்

Phobia – பயம் பயமறியாது!

Google India Shopping Tool


Google India Shopping Tool

ஏப்ரல் 14, 2010

Google தனது இந்திய சேவையின் மேலும் ஒரு அம்சமாக Shopping Tool ஐ வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 30,000 இணையதளங்களில் இருந்து தகவல்களை சேகரித்து நமக்கு கொடுக்கும்.

எடுத்துக்காட்டாக Sony Ericsson k810i என்ற மொபைல் போனின் விலை பற்றி அறிய,

1.Google.co.in இணையதளத்திற்கு செல்லுங்கள்.

2. Search boxல் Sony Ericsson k810i என்று Type செய்து Search செய்யுங்கள்.

3. இப்போது மேலே உள்ள Show Options என்னும் இணைப்பை அழுத்துங்கள்.

4. இடது புறம் உள்ள Shopping என்னும் இணைப்பை அழுத்தி Sony Ericsson k810i எந்த விலையில் இணையத்தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

5. இடது புறம் உள்ள விலையை வைத்து வடிகட்டும் வசதியினையும் நமது Price Range கொடுத்தும் உபயோகித்துக் கொள்ளலாம்.

இணையதளத்தின் மூலம் பொருட்களை வாங்குகிறோமோ, இல்லையோ Washing Machine, TV, Refrigerator, Laptop போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கும் முன் அதன் விலைப் பட்டையை முடிவு செய்து குறைவான விலைக்கு வாங்க இத்தளம் உதவிடும் என நினைக்கிறேன்.

வாழ்க Google சேவை!

மேலும் கூகுளின் SMS Channel-இலவச சேவை பற்றி அறிய..

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்

Recent Posts:

விக்ருதி வருட‌ ராசி பலன்கள்

விக்ருதி – தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Excellent Excel Games for Download

சுயம் போற்றி…தன்னம்பிக்கையூட்டும் கவிதை

Chicken a la carte -Short Film: 6 Minசுயம் போற்றி…தன்னம்பிக்கையூட்டும் கவிதை

ஏப்ரல் 10, 2010

முழுக்கவிதையும் seshadrir.com இணையத்தில்…

மேலே உள்ள படத்தினை கிளிக்கி படிக்க.


Chicken a la carte -Short Film: 6 Min

ஏப்ரல் 8, 2010

உலகில் தினமும் 25,000 பேர் உண்ண உணவின்றி மரணத்தை தழுவுகிறார்கள்.

உணவை உதாசீனப்படுத்தும் யுவதிகள், உணவையே தெய்வமெனத் தொழும் கடவுளர்கள் என இரு சாராரையும் காட்டியுள்ளனர் இந்த குறும்படத்தில்…

”தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த சகத்தினை அழித்திடுவோம்” என்ற பாரதியின் வழித்தோன்றலாகிய நாம்,

“வெட்கித் தலை குனிவோம், இன்னொரு முறை உணவை வீணாக்கினால்”

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்.

Recent Posts:

LeoFEST- தினமணி செய்தி

உலகின் பசி போக்குங்கள்…Free Rice.Com

3000 ஆவது வருடம்..

Vodafone ZooZoo Ads- IPL 2010 season

VICTORY- வெற்றிக்கான விளக்கம்!


உலகின் பசி போக்குங்கள்…Free Rice.Com

மார்ச் 31, 2010

Free Rice. com என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம்…

உலகில் உள்ள அனைவருக்கும் இலவச கல்வியை அளிப்பது,உலகில் உள்ள பசிக்கொடுமையை போக்குவது என்னும் இரண்டு நோக்கங்களுக்காகத் துவக்கப்பட்ட இணையம்.

இங்கே நாம் நமது மொழியறிவை வளர்த்துக் கொள்ளலாம். பிரென்ச், ஜெர்மன், இத்தாலியன், ஸ்பானிஷ், ஆங்கில மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம். SAT, GRE, LSAT and GMAT போன்ற போட்டி தேர்வுகளுக்கு இது உதவும்.

உங்களின் பொது அறிவை வளர்க்கும் முகமாக உலக நாடுகளின் வரைபடங்கள், உலக நாடுகளின் தலைநகரங்கள், வேதியலில் தனிமங்களின் குறியீடுகள், கணித வாய்ப்பாடுகள், சிறு கணக்குகள் ஆகியவை உள்ளன.

நீங்கள் விடையளிக்க, விடையளிக்க கடினமான கேள்விகள் கேட்கப்படும். இது நம் அறிவை மெருகேற்ற உதவுகிறது.

உலகில் ஒவ்வொரு 6 வினாடிக்கும் ஒரு இறப்பு பசிக் கொடுமையால் நிகழ்கிறது. நாம் விடையளிக்கும் சரியான கேள்வி ஒவ்வொன்றுக்கும் 10 அரிசி வறுமையில் பசியால் வாடுவோருக்கு தானமாக அளிக்கப்படுகிறது.

நீங்களும் இத்தளத்தினை உபயோகித்து உதவலாமே!

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்.

Recent Posts:

Vodafone ZooZoo Ads- IPL 2010 season

VICTORY- வெற்றிக்கான விளக்கம்!

தேசப்பற்று-இன்று!

இணையத்தில் வாக்காளர் பட்டியல்