Google ன் சோதனை முயற்சி – 1GB/S இணைய இணைப்பு

ஜூலை 16, 2010

கற்பனை செய்து கொள்ளுங்கள்… நீங்கள் ஒரு கிராமத்தில் இருக்கிறீர்கள்… நியூயார்க்கில் இருக்கும் ஒரு மருத்துவரிடம் நீங்கள் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் அதுவும் 3D படமாக…

இல்லையெனில் மதராசப்பட்டினம் போன்ற ஒரு முழு நீளத் (நீலமல்ல) திரைப்படத்தை ஐந்தே நிமிடத்தில் உங்கள் கணினிக்கு தரவிறக்க வேண்டும்…

உங்களைப் போன்ற கல்வி பயின்ற அறிஞர்களுடன் இணையத்தில் நேரடியாக அதே சமயம் உடனுக்குடன் உரையாட வேண்டும்….

இதெல்லாம் சாத்தியமா?

சாத்தியம்… Google அறிவித்துள்ள  Google Fiber for Communities என்னும் சேவை மூலமாக. 1 GB/S வேகத்தில் இணைய சேவையை வழங்கப் போவதாக அறிவித்துள்ள இந்நிறுவனம் சோதனை முயற்சியாக 50,000 முதல் 5,00,000 வீடுகளுக்கு வழங்கப் போகிறது என அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தங்கள் நாட்டில் Google ன் புதிய சேவை தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்.

இது பற்றிய காணொளி:

http://www.youtube.com/watch?v=wusklcNKDZc

நாம் ஏற்கனவே பார்த்த Technology Development Video உலகம் அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல் எடுத்துரைத்தது. எனவே தான் ஒபாமாவும் Google ன் சேவையை அமெரிக்காவில் துவங்குமாறு கூறுகிறார்.

இந்த பதிவை Publish செய்யவே பல நிமிடங்கள் காத்திருக்கும் இந்திய தேசத்திலும் இது போன்ற சேவைகளைத் துவக்க அரசோ, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களோ முன் வருமா?

சிந்திக்க வேண்டிய விஷயம்….

தாமதமின்றி செயல்படுத்த வேண்டியதும் கூட…

Related Posts:

Train without Stops – From China

SixthSense technology – TED.Com Video

Technology Information

Technology Development – Video


Advertisements

ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க! பாடம்-1

ஜூலை 15, 2010

அறிமுக பாடம் மற்றும் பாடங்களின் களஞ்சியம்:

ஒரு வருடம் ஒரு மொழி! இது எனது புத்தாண்டு சபதங்களாக பல வருடங்களாகவே இருந்து வந்துள்ளது! இலக்கில் ஆர்வமின்மை, சோம்பேறித்தனம் ஆகியவை அதனை ஒவ்வொரு வருடமும் சாதனையாக மாற்றாமல் சபதமாகவே விட்டுவிட்டது. இருப்பினும் ஏற்கனவே என் இதுவரை வெற்றிகளுக்கு காரணமாக இருந்த ரகசியமான What is Next? Give your Best என்பதே இந்த ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க! தொடர் பதிவுக்கு தூண்டுகோல்.

மேலும் Rammohan’s Blog – இன்று புதிதாய் கற்போம்! என்று ரஜினி பட ரேஞ்சுக்கு Build Up எல்லாம் குடுத்தாச்சு… எத்தனை நாள் தான் வாசகர்களை ஏமாற்றுவது… அதனால் தான் Win – Win மாடல்படி ஏதாவது உருப்படியாக செய்வோம் என்பதால் தான் இது!

சரி, ஒரு மொழி கற்றுக் கொள்ளும் போது எற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பார்க்கும் போது கீழ்க்கண்ட நலன்கள் இருப்பதாய் அறிகிறோம்.

  1. உலகளாவிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ள…
  2. உங்கள் வேலை வாய்ப்பு திறன்களை விசாலப்படுத்த…
  3. உங்கள் தாய் மொழித் திறன்களை செதுக்கிக் கொள்ள…
  4. மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்குத் தக்கவாறு நம்மை மாற்றிக்கொள்ள…
  5. வேறு ஒரு கல்லூரிக்கோ, பணியிடத்திற்கோ செல்ல…
  6. பன்மொழி இலக்கியம், இசை, சினிமா ஆகியவற்றைக் கற்க/கேட்க/ காண…
  7. உங்கள் சுற்றுலாப் பயணத்தை எளிமைப்படுத்த…
  8. பிற மொழி பேசும் நண்பர்களைப் பெற….
  9. மொழி பெயர்ப்பு சம்பந்தமான தொழில்களில் ஈடுபட….
  10. மேலும் பல…

உங்களுக்குத் தெரிந்த பயன்களையும் பின்னூட்டமிடுங்கள்!

ஏன் ஹிந்தி?

தமிழ்நாடு என்றவுடன் இந்தியர்களுக்கு தமிழ் மொழி ஞாபகம் வருவதைப் போலவே இந்தியா என்றவுடன் பிற நாட்டவர்களுக்கு நினைவுக்கு வருவது ஹிந்தி மொழி. தமிழராய்ப் பிறந்ததற்காகப் பெருமைப்படும் ஒவ்வொருவரும் இந்தியனாய்ப் பிறந்ததிலும் பெருமிதமடைய வேண்டும் என்பது அவா. இந்தியனாக இருந்து கொண்டு இந்தி தெரியவில்லையா என்று யாரும் நம்மை இகழ்ந்து விடக்கூடாது… அதனால் ஹிந்தி!

ஹிந்தி எதிர்ப்புக் கொள்கையுடையோருக்கு:

தமிழ் மொழி பேசும் தமிழர்கள் உலகெங்கும் வியாபித்திருக்கிறார்கள். தமிழ் செம்மொழி தொன்மையான மொழி.அதில் ஐயமில்லை!  ஹிந்தி எதிர்ப்புக் கொள்கையுடையோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், நீங்களும் ஒரு தொடர் பதிவெழுதுங்கள் அல்லது இணையம் ஆரம்பியுங்கள்… அதில் தமிழ் மொழியினை அனைவருக்கும் கற்றுக் கொடுங்கள் ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் இன்ன பிற மொழிகளின் வாயிலாக! ”எட்டுத் திக்கும் தமிழில் உள்ள கலைச் செல்வங்களை எடுத்துச் செல்லுங்கள்”.  எனது ஆதரவு எப்போதும் உண்டு தமிழுக்கு…. தமிழ் வளர்ப்போருக்கு!

பாடங்கள் எப்படியிருக்கப் போகின்றன?

வாரம் ஒரு பாடம் பதிவிடலாம் என்றிருக்கிறேன்.

இணையத்தின் உதவியுடன் தக்க படங்கள், காணொளிகள் கொண்டு கற்றலை எளிமைப்படுத்தவும் விருப்பம்.

தக்க இலவச மென்பொருட்கள், மின்னணு புத்தகங்கள் ஆகியவை கிடைத்தாலும் பகிர்ந்து கொள்ள அவா.

மொழித் திறன்களை மேம்படுத்திக் கொள்ள தகுந்த Work Books ஐ தேவைப்படும் இடங்களில் இணைக்கவும் ஆசை.

நீங்கள் என்ன செய்யலாம்?

ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒத்த கருத்துடையவரா? இந்த இணைய இணைப்பினை பின்தொடருங்கள் அல்லது பதிவுகளுக்கு மின்னஞ்சல் மூலம் பெற வலமேல்புறம் உள்ள பெட்டியில் Subscribe செய்யுங்கள்!

தொடர்ந்து எழுதவும், பேசவும் பயிற்சி மேற்கொள்ளுங்கள்… எல்லாப் பயணங்களும் முதல் அடி எடுத்து வைப்பதில் தான் ஆரம்பிக்கின்றன.

வெற்றி ஏணியில் நாம் நிதானமாக ஏறுவோம்…ஆனால் நிச்சயமாக!

ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க! என்ற தலைப்பில் எழுதப்படும் இடுகைகளை விருப்பமிருந்தால் உங்கள் நண்பர்களுடன் மின்னஞ்சல் மூலமோ, உங்கள் வலைப் பக்கம் மூலமோ (இது எனது வலைப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று சுட்டியை மேற்கோள் காட்டுவதும்/ மறுப்பதும் உங்கள் விருப்பமே!) பகிர்ந்து கொள்ளுங்கள்.. ஏனெனில் பகிர்தலும், தேடலுமே வாழ்க்கை!

நீங்கள் தமிழிஷ் பயனராக இருந்தால் http://ta.indli.com/user/ramchemics இணைப்பில் Follow என்று கொடுத்தும் இடுகைகளை உடனுக்குடன் ”தொடர்பவை” என்னும் பகுதியில் அறிந்து கொள்ளலாம் மற்றும் Like என்று கொடுத்து மற்றவர்களைச் சென்றடைய உதவலாம்.

உங்களுக்குத் தெரிந்த/ அல்லது நீங்கள் எழுதிய ஹிந்தி கற்க உதவும் இடுகைகள் அல்லது வளங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!

ஊர் கூடித் தேரிழுப்போம்! வாருங்கள்…

விரைவில் அடுத்த பாடம் ஆரம்பம்…

பாடங்கள்:

2. உயிரெழுத்துக்கள்/ மெய்யெழுத்துக்கள்: உச்சரிப்பு பயிற்சி/எழுத்துப் பயிற்சிசிரிப்புக்காக மட்டும்…

ஜூலை 12, 2010

தமிழ் ஹீரோக்களின் அடுத்து வரும் படங்கள்! நகைச்சுவை SMS . . .   சிரிப்பு மட்டும் . . . .சீரியஸாகக் கூடாது…ஆமா.

சிங்கம், கரடி, குரங்கு . . .

படிக்காதவன், எழுதாதவன், வரையாதவன்.

SMS, MMS, Missed Call . .

சத்யம், இன்ஃபோஸிஸ், விப்ரோ. . .

ராவணன், அர்ச்சுனன், துரியோதனன் . .

குரு என் ஆளு, கவிதா உன் ஆளு, அனிதா யார் ஆளு. .

பில்லா? செக்கா? கேஷா? கார்டா? . . .

சுறா, எறா, கெண்டை, கெளுத்தி, திமிங்கலம். . .

மேலும் சிரிப்புக்கு:

3000 ஆவது வருடம்..

New Olympic Games- Just for Fun

Happy Telugu Song Very Funny


ஹைகூ கவிதைகள்- இறையன்பு

ஜூலை 10, 2010

இறையன்பு அவர்கள் எழுதிய ”முகத்தில் தெளித்த சாரல்” புத்தகத்திலிருந்து….

தலைப்பு: வெட்டுப்பட்டால் பெட்டிக்குள்…

கருப்பொருள் ஹைகூ கவிதை:

“பெட்டிக்கு வந்த பிறகு

எல்லோருமே சமம்-

சதுரங்கக் காய்கள்” – ISSA

ஆங்கில மொழி பெயர்ப்பு:

Once in the box

everyone of them equal in the Chess pieces – ISSA

இறையன்பு அவர்கள் ஹைகூ கவிதை:

சதுரங்கக் காய்களில்

ராணிகளுக்குத் தான் மதிப்பு

அவற்றால் தான் யாரையும்

எப்படியும் வெட்ட முடியும்-

கவிழ்க்க முடியும்-

அழிக்க முடியும்.

மேலோட்டமாகப் பார்த்தால்

ராஜாக்களுக்குத்தான் சக்தி அதிகம்.

ஆனால் அந்த சக்தியைக்

கூட்டுபவர்களாகவும்

குறைப்பவர்களாகவும்,

குலைப்பவர்களாகவும்

இருப்பவர்கள் எப்போதும்

ராணிகளாய் இருக்கிறார்கள்.

சாம்ராஜ்யங்கள் பல சரிந்ததற்கு

ராஜாக்களைக்காட்டிலும்

ராணிகள் தான் காரணம்.

எவ்வளவு வலிமை பெற்ற சதுரங்கக்

காயாக இருந்தால் என்ன?

அது இருக்கும் இடத்தில் தான்

அதன் சக்தி

தீர்மானிக்கப்படுகிறது.

மூலையில் முடங்கினால்

ராணியைச் சின்ன கூனி கூட

வீழ்த்தலாம்

என்பதற்கு ராமாயணம்

மட்டுமல்ல

சதுரங்கமும் சான்று.

பக்கவாட்டிலேயே நகர்ந்தால்

நேரே வரும் பிரச்சனைகளை

எதிர்கொள்ளும் திராணி

இருக்காது என்பது

பிஷப் மூலமும்

நேரடியான எதிரிகள் மீது

மட்டுமே

கவனமிருந்தால்

மறைமுக ஆபத்துகள்

விழிகளுக்குத் தெரியாது

என்பது ரூக் மூலம்

வெளிப்படும்

வாழ்க்கைத் தத்துவம்

சதுரங்கத்தில் புலப்படும்.

சின்னச் சின்ன வெற்றிகளுக்கு

ஆசைபடாமல்

திடமான இலட்சியத்துடன்

இறுதிவரை

பயணிப்பவன்

சிப்பாயின் நிலையிலிருந்து

மிக உயர்ந்த நிலைக்கு மாற

முடியும்

என்பதற்குக் கடைசிக்

கட்டத்தில் சிப்பாய் நிலை உயரும்

காட்சியே சாட்சி.

சதுரங்கம் விளையாட்டு

மட்டுமல்ல வாழ்க்கையைக் கற்றுத் தரும்

போதனை.

இதுவரை போனவை போகட்டும்

இனிமேலாவது

விழிப்புணர்விருந்தால் போதும்.

எத்தனை காய்கள் என்பதிலும்

எப்படி அவற்றை

உபயோகப்படுத்துகிறோம்

என்பதே சூக்குமம்.

ஆனால் விளையாடி முடிந்த

பிறகும்

சதுரங்கம் கற்றுத்தருகிறது-

பெட்டிக்குள் போன பிறகு

காய்கள் எல்லாம் சமம்தான்

என்கிற உண்மையை.

மரணம்

எல்லோரையும் சமமாக்குகிறது.

அமைதியாக்குகிறது.

ஆனால்

அதற்கு முன் நடக்கும் நிகழ்வுகள்

தான்

முக்கியமானவை.

பெட்டிக்குள் போனால்

ஒன்று தானே

என்பதால் சதுரங்கக்காய்கள்

சும்மா இருப்பதில்லை.

இன்னும் சொல்லப்போனால்

சதுரங்கக் காய்களுக்கு ஏது

மரியாதை?

அது நம்மிடம் இருந்துதான்

ஆரம்பமாகிறது.

எதற்கு அதிக அதிகாரம்

என்பதை நாம் தான்

தருகிறோம்-

நம்மிடமிருந்து அதிகாரத்தை

அவை எடுத்துக் கொள்கின்றன.

நமது ராஜாக்களுக்கும்

ராணிகளுக்கும்

நம்மிடம் இருந்தே அதிகாரம்

அளிக்கப்பட்டிருக்கின்றன.

பல திறமைகள்

பெட்டிக்குள் முடங்கிக்

கிடக்கின்றன

உரிய களம் இல்லாமல்

நல்ல தளம் இல்லாமல்

பெட்டி என்பது

சதுரங்கப்பெட்டி மட்டுமல்ல-

சவப்பெட்டி மட்டுமல்ல

ஆற்றலை சிறைப்படுத்தும்

அனைத்துக்குமே

அவை பொருந்தும்.


ஹிந்தி தமிழ் வழியில்…

ஜூலை 10, 2010

ஹிந்தி தமிழ் வழியில் கற்க மத்திய அரசின் Central Hindi Directorate அமைப்பானது தொலைதூரக் கல்வி முறையில் ஹிந்தியில் Certificate Course in Hindi மற்றும் Diploma Course in Hindi ஆகிய இரண்டு பாடங்களைக் கற்றுத் தருகிறது. Certificate Couse ஐ தமிழ், ஆங்கிலம், மலையாளம் மற்றும் வங்காள மொழிகளின் மூலமாக ஹிந்தி கற்கலாம்..

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது:

1. விண்ணப்பத்தின் மாதிரியைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

2. 50 ரூபாய்க்கு Demand Draft யை Director, Central Hindi Directorate payable at New Delhi என்ற பெயரில் எடுத்துக் கொள்ளவும்.

3. விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, The Deputy Director, Department of Correspondance Courses, Central Hindi Directorate, West Block -7, R.K. Puram, New Delhi – 110066 என்ற முகவரிக்கு ஜூலை 30 ஆம் தேதிக்குள் அனுப்பவும்.

வாருங்கள்… ஹிந்தி மொழி கற்போம்… தமிழ் மொழி வழியில்…


வேலை வாய்ப்பு தேடலில் வெற்றி பெற!

ஜூலை 10, 2010

வேலை தேடுவது என்பது கனிகள் நிறைந்த மாமரத்தில் இருந்து கனியைப் பறிப்பது போன்றது.

வேலை தேடும் வேலை!

சிலர் கண்ணை மூடிக் கொண்டு மரத்தில் கல்லெறிவர்(அனைத்து    வேலைகளுக்கும் விண்ணப்பிப்பது),

சிலர் அர்ச்சுனன் போல் குறி வைத்துத் தாக்குவர்(தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலைக்கு மட்டும் விண்ணப்பிப்பது),

சிலர் மாமரத்தின் அடியில் படுத்துக் கொண்டு மாங்கனிகள் கிடைக்காதா என ஏங்குவர் ( மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு காத்திருப்பர்).

எது எப்படியோ!

வேலை வாய்ப்புத் தேடலில் வெற்றி பெற இணையதளங்களின் பங்கு இன்றியமையாதது. அவைகளைப் பற்றிப் பார்ப்போம்!

வேலை வேண்டுமா வேலை!

முதலில்,

Naukri.com இணையதளம். என் நினைவறிந்த காலத்தில் இருந்து முதலிடத்தில் இருக்கும் வேலை வாய்ப்பு தேடல் இயந்திரம். (Job Search Engine). இத்தளத்தில் நீங்கள் வேலை தேடுவது, விண்ணப்பிப்பது மட்டுமல்லாது, பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இருக்கும் தேவை பற்றிய அறிவிப்புகளை, அந்த நிறுவனங்களின் Career இணைப்பிலிருந்து பெறலாம். இது மட்டுமல்லாது உங்கள் தகுதிக்கேற்ற வேலைகளை உங்கள் மின்னஞ்சல், அலைபேசியில் பெறுவதோடு SMS மூலமும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இரண்டாவதாக,

Shine.com வலைத்தளம். வேலை வாய்ப்புத் தேடலுக்கான அனைத்து அம்சங்களுடன், இதன் மற்ற சிறப்பம்சங்கள் Career Advice மற்றும் Industry Information. வேலை தேடும் வேலையின் அடுத்த அங்கமான நேர்முகத்தேர்வுக்கு இந்த இரண்டு பிரிவுகளும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

மூன்றாவதாக,

Freshersworld.com இணையம். முற்றிலும் புதியவர்களுக்கானது. கல்லூரியில் இருந்து வெளியே காலடி எடுத்து வைப்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது. வேலைவாய்ப்புத் தேடலின் முதல் மைல் கல்லான Written Test என்றாலே பலருக்கு அலர்ஜி. இதில் வெற்றி பெற வெவ்வேறு நிறுவனங்களின் Placement Papers இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போக MBA, GATE, GRE போன்ற முதுகலைக் கல்லூரிப் படிப்புகளுக்குத் தயாராவதற்கான வளங்கள் கிடைக்கின்றன.

விஸ்வநாதன் வேலை வேண்டும்!

அடுத்ததாக

Careerage.com இணையத்தளம். உங்கள் Qualification மூலம் வேலை தேடும் சிறப்பு இதன் வெற்றிக்கான காரணம். மற்ற வேலை வாய்ப்பு தேடல் இயந்திரங்களின் குறையும் இதுவே. கல்லூரியில் படித்த படிப்பை தேர்வு செய்து வேலை தேடலாம் இந்த இணையத்தில்.

ஐந்தாவதாக,

fundoodatajobs.com தளம். நீங்கள் இத்தளத்தில் நேரடியாக நிறுவனங்களுக்கே உங்கள் Resume அனுப்ப முடியும். Apply Directly to Companies என்ற வாசகத்தை தாங்கி வரும் இந்த இணையம் உங்கள் வேலை வேட்டையில், வெற்றி பெற உதவும் என்பதில் சந்தேகமில்லை.

சரி, சரி,

”அரைக் காசு சம்பளமானாலும் அரசாங்க சம்பளம், கால் காசு சம்பளமானாலும் கவர்ன்மெண்ட் சம்பளம்” என்ற நோக்கம் கொண்டவரா நீங்கள்… அரசாங்க வேலையில் உள்ள காலியிடங்கள் பற்றிய அறிவிப்புகளை தரும் தளங்கள் இதோ… sarkarjobs.comமற்றும் http://sarkari-naukri.blogspot.com/

A to Z வேலை வாய்ப்புத் தளங்களின் தொகுப்பு:

http://jobsitesindia.com

உங்கள் வேலை தேடும் படலத்தில் வெற்றிச் செய்தியைப் பெற விழையும்,

ராம்மோகன்.


Save Girl Child: பெண் குழந்தையைக் காப்போம்!

ஜூலை 9, 2010

People always pray for a BOY..Not for a GIRL


Blessings of elders are for MALENot for FEMALE


But in need of wealth


We pray to Ma LAXMIFor success in education


We pray to Ma SARASWATI


For removal of tension


We pray to Ma AMBAJI


And to escape from the devil


We pray to Ma KALI


Now tell me, why do people hesitate to have a FEMALE in the family,

While those whom they pray to during trouble, are FEMALES?


SAVE THE GIRL CHILD!!!


பெண் குழந்தையைக் காப்போம்!

Thanks to M. Sundararaman of Saaral Yahoo Groups