நோய் மருந்து மருத்துவம் பற்றிய இணைய தளங்கள்!

“எங்கெங்கு காணினும் போலிகளடா! என்று சொல்லும் அளவுக்கு போலிகள் நிறைந்துள்ள காலமிது. போலி மருத்துவர்கள் கைது, போலி மருந்துகள் பறிமுதல் என்றெல்லாம் செய்திகள் வரும்போது நம் இதயத்துடிப்பு எகிறுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

போலி எது? அசல் எது? என்று அவ்வளவு எளிதாகப் பிரித்தறிய இயன்றிடாதபடி நடமாடும் இந்த ”பசுத் தோல் போர்த்திய பன்றிகளிடமிருந்து” தப்பிக்க வழி தான் என்ன? என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது தான் நச்சென்று நான்கு இணைய தளங்கள் கிடைத்தன. அவற்றைப் பகிரும் முகம் தான் இப் பதிவு… நோய், மருந்து, மருத்துவம் பற்றிய இணைய தளங்கள்!

முதலாவதாக Drugs.Com இணைய தளம் பற்றி,

நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த மருந்து விற்பன்னர்கள் சேர்ந்த்து நடத்தும் Drugsite Trust ஆல் நடத்தப்படும் இணைய தளம். 107,000  மருந்துகள் A to Z வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த Food and Drug Administration (FDA) புதிதாக அங்கீகரிக்கும் மருந்துகள் பற்றிய விவரங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன. இத்தளத்தினை எவ்வாறு உபயோகிப்பது?

நம்ம ரஜினி சிவாஜி படத்துல வெள்ளையா மாற ஒரு கிரீம் போடுவாறே அது மாதிரி “ஆறே வாரங்களில் சிகப்பழகு பெற” எதாவது கிரீம் போடுறீங்களா? அந்த மருந்து அட்டையில் உள்ள அதன் வேதிப் பெயரைக் கண்டறியுங்கள்… உதாரணத்திற்கு, Hydroquinone. இதனை இத் தளத்தில் உள்ளீடு செய்து தேடு என்று கட்டளை பிறப்பித்தால்,

இந்த மருந்து நம் உடலில் செய்யும் மகத்துவங்கள் என்ன?

மருந்தை உபயோகிக்கும் முன் என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும்?

எவ்வாறு உபயோகிக்க வேண்டும்?

அளவுக்கு அதிகமானால் (Over Dose) என்னென்ன பிரச்சினைகள் வரும்?

என்று எல்லா விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கிறது.

இதன் மூலம் நமக்கு மருந்தெழுதிக் கொடுத்த Doctor, அந்த மருந்தை எடுத்துக் கொடுத்த Pharmacist ஆகியோர் (போலிகளாக இருக்கும் பட்சத்தில்) தவறுகளைத் தவிர்க்கலாம். உண்மையில் அந்த மருந்து நமக்குத் தேவை தானா? இல்லை காசுக்கு வந்த கேடா? என்றும் அறியலாம்.

சரி அடுத்த இணையத்துக்கு இணைக்கறதுக்கு முன்னாடி இன்னொரு விஷயத்தையும் பாத்துருவோம். மருந்துகளில் இருக்கும் USP, IP, BP என்ற எழுத்துக்களை பார்த்திருக்கிறீர்களா? அப்படின்னா,

USP: United States Pharmacopeia
IP: Indian Pharmacopeia
BP: British Pharmacopeia

என்று பொருள் படும் . எந்த நாட்டு மருத்துவ விதிகளின் படி உருவாக்கப்பட்ட கலவை இந்த மருந்து என்பதனைக் குறிக்கும்.

இரண்டாவதாக,

”கண்டதைப் படித்தவன் பண்டிதன் ஆவான்” அப்படின்னு கேள்விப் பட்டு இருக்கீங்களா? அதற்காகவே வடிவமைக்கப் பட்ட இணையம் தான் விக்கிபீடியா. எதனைக் கேட்டாலும் எங்கிருக்கிறது என்று சொல்லும் Google இணையத்தைவிட, எதனையும் தன்னகத்தே கொண்ட Wikipedia இணையதளம் நமக்கெல்லாம் ஒரு வரப் பிரசாதம். பல்துறைக் கலைக் களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியாவில் நாம் என்ன வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, ECG என்று தேடுங்கள்.. ECG  பற்றிய அனைத்தும் கிடைக்கும்.. பொறுமையும், நேரமும், கற்றுக் கொள்ளும் ஆர்வமும் இருப்பவர்களுக்கு கலங்கரை விளக்கம் விக்கிபீடியா.

மூன்றாவதாக,

நமக்கென்று ஒரு நாளும் தளர்வறியாமல் துடிக்கும் இதயத்தைப் பற்றி என்றாவது ஒரு நாள் நாம் அக்கறை கொண்டுள்ளோமா?

சச்சின் டெண்டுல்கரின் சாதனை சதங்களின் எண்ணிக்கையை விரல் நுனியில் வைத்திருக்கும் நாம், நம் விரல் நுனியில் இருந்து எடுக்கப்படும் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பற்றி என்றாவது சிந்தித்ததுண்டா?

ஆம் எனில் நன்று. இல்லையெனில் இதோ முத்தான மூன்றாவது இணைய தளம் medicinenet.com.

அற்புதமான பல விஷயங்களை உள்ளடக்கிய இந்த இணையதளம். மருத்துவரின் அறிவை நீங்கள் பெற உதவுகிறோம் என்கிறது இது.

Slideshows

Diseases & Conditions

Symptoms & Signs

Procedures & Tests

Medications

Image Collection

Medical Dictionary

Pet Health

என்று பிரிவுகள் அடங்கியது.

Slide Show பிரிவு அழகான புகைப்படங்களுடன், வலப்புறம் அதற்கேற்ற குறிப்பினையும் வழங்குகிறது.

உடல் எடை குறைக்க,

முடி உதிர்வதைத் தடுக்க,

புகைப் பழக்கத்தைக் கைவிட,

பற்களை வெண்மையாக்க,

உணவுகள் மூலம் மூளையை சுறுசுறுப்பாக வைக்க

என்று மொத்தம் 31 Slide Showக்கள் அமைக்கப் பட்டுள்ளன.

அடுத்துள்ள Diseases & Conditions பிரிவில் ஒரு நோய் பற்றிய அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. A to Z வரிசையில் அமைந்துள்ள இது நோயின் அனைத்து நிலைகள், எவ்வாறு உருவாகிறது, என்னென்ன சிகிச்சை முறைகள் மேற்கொள்ளலாம் என்பது பற்றி விவரிக்கிறது.

Symptoms & Signs பகுதியில் ஆண், பெண் உடல் புகைப்படத்துடன் எந்தெந்த பகுதியில், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்று விளக்கப்படுகிறது.

எனக்கு கால் வலிக்குது, கை வலிக்குது என்று வலியை உணர்பவர்கள் என்னென்ன வியாதியாக இருக்கலாம் என்று இப்பகுதியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்துள்ள Procedures & Tests பகுதியில்

நம் உடம்பில் என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன?

ஏன் செய்யப்படுகின்றன?

எது Normal Value?

அதிகமாக இருந்தால் என்ன?

குறைவாக இருந்தால் என்ன?

என்று விலாவாரியாக விளக்கம் தரப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு Hemoglobin அப்பிடிங்கற இரத்த சிவப்பு செல்களில் ஆக்ஸிஜனை எடுத்துச்செல்லும் ஊர்தி பற்றி பார்ப்போம். ஆண்களுக்கு 14-18 gm/dl  பெண்களுக்கு 12-16 gm/dl  இருக்க வேண்டும். இது குறைவாக இருந்தால் அனீமியா என்னும் நோய் தாக்குகிறது. அதிகமாக இருப்பது எம்ப்ஸீமா எனப்படுகிறது.

காய்ச்சல், தலைவலி அப்படீன்னு ஆஸ்பத்திரிக்கு போனாலே Blood Test, Urine Test ன்னு போட்டுத் தாக்குறாங்களா? மறக்காம அவங்க கிட்ட Test Reports வாங்கீட்டு வந்துருங்க… நம்ம உடம்ப பத்தி நாமளே தெரிஞ்சுக்கலாம்.

நான்காவதாக, Doctor.NDTV.Com இணைய தளம்,

…for the better health of Indians  என்னும் நோக்கத்துடன், 311 Experts மூலம் மெருகூட்டப்படும்  NDTV இணையம் இது. இங்கே நம் உடல் நலம் சம்பந்தப்பட்ட கேள்விகளை நாம் கேட்கலாம். விடை கிடைக்கும். இது போக Calculators என்னும் பகுதியில் Body Mass Index என்னும் உடல் பருமன் கணக்கிடும் பகுதி, உடல் நலம் சார்ந்த கட்டுரைகள் , புகைப்படங்கள் ஆகியவை அமைந்துள்ளன. இவை அனைத்தையும் எழுதுபவர்கள் மருத்துவர்கள் என்பது இதன் தனிச் சிறப்பு.

Science Is A Good Servant But A Bad Master என்பார்கள். மேற்கூறிய இணையங்களையும் அவ்வாறே பயன்படுத்துங்கள். .Servant ஆக மட்டும். அவற்றை Master ஆக விடாதீர்கள். போலிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள, மருத்துவ அறிவை வளர்த்துக் கொள்ள மட்டும் பயன்படுத்துங்கள். சுய மருத்துவத்தில் இறங்கி விட வேண்டாம்.

இந்த இடுகை ta.indli.Com பயனர்களை சென்றடைய இங்கே வாக்களியுங்கள்.

உங்கள் நண்பர்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றிகளுடன்,

ராம்மோகன்.

பிற பயனுள்ள இணைய தளங்கள் பற்றிய இடுகைகள்:

வேலை வாய்ப்பு தேடலில் வெற்றி பெற!

பணம் செய்ய உதவும் இணையதளங்கள்

Scientific Information- அறிவியல் பற்றிய தளங்கள்

Video Sites

E Books – மின் புத்தகங்கள்

Technology Information

பங்குச் சந்தை பற்றிய இணையதளங்கள்

Advertisements

3 Responses to நோய் மருந்து மருத்துவம் பற்றிய இணைய தளங்கள்!

 1. ram சொல்கிறார்:

  நல்ல உபோயோகமான பதிவு

  நன்றி மோகன் அவர்களே

 2. winmani சொல்கிறார்:

  மிக பயனுள்ள தகவல்கள்,
  நன்றி நண்பரே.

 3. ponmayil சொல்கிறார்:

  Hi,
  Sharing very useful information.article. helpful for everyone

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: