ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க! பாடம்-1

அறிமுக பாடம் மற்றும் பாடங்களின் களஞ்சியம்:

ஒரு வருடம் ஒரு மொழி! இது எனது புத்தாண்டு சபதங்களாக பல வருடங்களாகவே இருந்து வந்துள்ளது! இலக்கில் ஆர்வமின்மை, சோம்பேறித்தனம் ஆகியவை அதனை ஒவ்வொரு வருடமும் சாதனையாக மாற்றாமல் சபதமாகவே விட்டுவிட்டது. இருப்பினும் ஏற்கனவே என் இதுவரை வெற்றிகளுக்கு காரணமாக இருந்த ரகசியமான What is Next? Give your Best என்பதே இந்த ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க! தொடர் பதிவுக்கு தூண்டுகோல்.

மேலும் Rammohan’s Blog – இன்று புதிதாய் கற்போம்! என்று ரஜினி பட ரேஞ்சுக்கு Build Up எல்லாம் குடுத்தாச்சு… எத்தனை நாள் தான் வாசகர்களை ஏமாற்றுவது… அதனால் தான் Win – Win மாடல்படி ஏதாவது உருப்படியாக செய்வோம் என்பதால் தான் இது!

சரி, ஒரு மொழி கற்றுக் கொள்ளும் போது எற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பார்க்கும் போது கீழ்க்கண்ட நலன்கள் இருப்பதாய் அறிகிறோம்.

 1. உலகளாவிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ள…
 2. உங்கள் வேலை வாய்ப்பு திறன்களை விசாலப்படுத்த…
 3. உங்கள் தாய் மொழித் திறன்களை செதுக்கிக் கொள்ள…
 4. மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்குத் தக்கவாறு நம்மை மாற்றிக்கொள்ள…
 5. வேறு ஒரு கல்லூரிக்கோ, பணியிடத்திற்கோ செல்ல…
 6. பன்மொழி இலக்கியம், இசை, சினிமா ஆகியவற்றைக் கற்க/கேட்க/ காண…
 7. உங்கள் சுற்றுலாப் பயணத்தை எளிமைப்படுத்த…
 8. பிற மொழி பேசும் நண்பர்களைப் பெற….
 9. மொழி பெயர்ப்பு சம்பந்தமான தொழில்களில் ஈடுபட….
 10. மேலும் பல…

உங்களுக்குத் தெரிந்த பயன்களையும் பின்னூட்டமிடுங்கள்!

ஏன் ஹிந்தி?

தமிழ்நாடு என்றவுடன் இந்தியர்களுக்கு தமிழ் மொழி ஞாபகம் வருவதைப் போலவே இந்தியா என்றவுடன் பிற நாட்டவர்களுக்கு நினைவுக்கு வருவது ஹிந்தி மொழி. தமிழராய்ப் பிறந்ததற்காகப் பெருமைப்படும் ஒவ்வொருவரும் இந்தியனாய்ப் பிறந்ததிலும் பெருமிதமடைய வேண்டும் என்பது அவா. இந்தியனாக இருந்து கொண்டு இந்தி தெரியவில்லையா என்று யாரும் நம்மை இகழ்ந்து விடக்கூடாது… அதனால் ஹிந்தி!

ஹிந்தி எதிர்ப்புக் கொள்கையுடையோருக்கு:

தமிழ் மொழி பேசும் தமிழர்கள் உலகெங்கும் வியாபித்திருக்கிறார்கள். தமிழ் செம்மொழி தொன்மையான மொழி.அதில் ஐயமில்லை!  ஹிந்தி எதிர்ப்புக் கொள்கையுடையோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், நீங்களும் ஒரு தொடர் பதிவெழுதுங்கள் அல்லது இணையம் ஆரம்பியுங்கள்… அதில் தமிழ் மொழியினை அனைவருக்கும் கற்றுக் கொடுங்கள் ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் இன்ன பிற மொழிகளின் வாயிலாக! ”எட்டுத் திக்கும் தமிழில் உள்ள கலைச் செல்வங்களை எடுத்துச் செல்லுங்கள்”.  எனது ஆதரவு எப்போதும் உண்டு தமிழுக்கு…. தமிழ் வளர்ப்போருக்கு!

பாடங்கள் எப்படியிருக்கப் போகின்றன?

வாரம் ஒரு பாடம் பதிவிடலாம் என்றிருக்கிறேன்.

இணையத்தின் உதவியுடன் தக்க படங்கள், காணொளிகள் கொண்டு கற்றலை எளிமைப்படுத்தவும் விருப்பம்.

தக்க இலவச மென்பொருட்கள், மின்னணு புத்தகங்கள் ஆகியவை கிடைத்தாலும் பகிர்ந்து கொள்ள அவா.

மொழித் திறன்களை மேம்படுத்திக் கொள்ள தகுந்த Work Books ஐ தேவைப்படும் இடங்களில் இணைக்கவும் ஆசை.

நீங்கள் என்ன செய்யலாம்?

ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒத்த கருத்துடையவரா? இந்த இணைய இணைப்பினை பின்தொடருங்கள் அல்லது பதிவுகளுக்கு மின்னஞ்சல் மூலம் பெற வலமேல்புறம் உள்ள பெட்டியில் Subscribe செய்யுங்கள்!

தொடர்ந்து எழுதவும், பேசவும் பயிற்சி மேற்கொள்ளுங்கள்… எல்லாப் பயணங்களும் முதல் அடி எடுத்து வைப்பதில் தான் ஆரம்பிக்கின்றன.

வெற்றி ஏணியில் நாம் நிதானமாக ஏறுவோம்…ஆனால் நிச்சயமாக!

ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க! என்ற தலைப்பில் எழுதப்படும் இடுகைகளை விருப்பமிருந்தால் உங்கள் நண்பர்களுடன் மின்னஞ்சல் மூலமோ, உங்கள் வலைப் பக்கம் மூலமோ (இது எனது வலைப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று சுட்டியை மேற்கோள் காட்டுவதும்/ மறுப்பதும் உங்கள் விருப்பமே!) பகிர்ந்து கொள்ளுங்கள்.. ஏனெனில் பகிர்தலும், தேடலுமே வாழ்க்கை!

நீங்கள் தமிழிஷ் பயனராக இருந்தால் http://ta.indli.com/user/ramchemics இணைப்பில் Follow என்று கொடுத்தும் இடுகைகளை உடனுக்குடன் ”தொடர்பவை” என்னும் பகுதியில் அறிந்து கொள்ளலாம் மற்றும் Like என்று கொடுத்து மற்றவர்களைச் சென்றடைய உதவலாம்.

உங்களுக்குத் தெரிந்த/ அல்லது நீங்கள் எழுதிய ஹிந்தி கற்க உதவும் இடுகைகள் அல்லது வளங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!

ஊர் கூடித் தேரிழுப்போம்! வாருங்கள்…

விரைவில் அடுத்த பாடம் ஆரம்பம்…

பாடங்கள்:

2. உயிரெழுத்துக்கள்/ மெய்யெழுத்துக்கள்: உச்சரிப்பு பயிற்சி/எழுத்துப் பயிற்சி


Advertisements

15 Responses to ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க! பாடம்-1

 1. siva சொல்கிறார்:

  இந்தியனாக இருந்து கொண்டு இந்தி தெரியவில்லையா என்று யாரும் நம்மை இகழ்ந்து விடக்கூடாது… Super lines. i have experiance in this matter.My boss Korean asked me “pakistani.bangali,nepali”this people speak hindi.u india and ur national language is hindi and why you dont know hindi”?How can i answer this question.Shame of stupid tamilnadu politicians..

 2. Janaa.s சொல்கிறார்:

  ஊர் கூடித் தேரிலுப்போம்! வாருங்கள்…

  naan ready !!!

 3. ibrahim சொல்கிறார்:

  இந்தி தெரியவில்லை

 4. sivaji chandra kumar சொல்கிறார்:

  naan ready

 5. M.Subramanian சொல்கிறார்:

  Please send the new details.

 6. s.Arivazhagan சொல்கிறார்:

  I want to lean hindi

 7. prabhu சொல்கிறார்:

  hai hindi mikaum kastamaka ullathu

 8. Ramachandran சொல்கிறார்:

  Sir i want to learn hindi . Pls help me

  Sriram

 9. durga சொல்கிறார்:

  easy hindi details

 10. SARANYA சொல்கிறார்:

  I WANT LEARN HINDI

 11. dhivya சொல்கிறார்:

  Respected Sir,
  intha muthal vakuppu hindi paadam
  rompa puriyambadiyaga iruntathu.
  aduthhu varam paadangalai solli tharaungul Sir.
  Romba Thanks

 12. silambarasan சொல்கிறார்:

  i have completed prathmic and mathiyama hindi exam so i know just all words read and write only but i cannot speak hindi i think this web site use for me so please i need hindi language

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: