சினிமா! சினிமா! சினிமா!

சினிமா செய்திகள், நடிகர் நடிகைகள் புகைப்படத்தொகுப்பு, விமர்சனங்கள், கிசு கிசுக்கள் ஆகியவை அடங்கிய தளங்கள்:

தினமலர் சினிமா இணையதளம்!


தமிழ் செய்தித்தாள்களுக்கென்று இணையதளங்களில் முன்னணி வகிப்பது தினமலர் இணையம்! அதே போல் சினிமா பற்றிய செய்திகளையும் உடனுக்குடன் Update செய்வதாலும், தினமலர் வாசகர்களின் பங்களிப்பாலும் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது தினமலர் சினிமா இணையதளம்!

நக்கீரன் சினிமா இணையதளம்

சினிமா நடிகர், நடிகைகளின் புகைப்படத்தொகுப்பு அருமை. ஆங்காங்கே த்ரிஷா ப்துசு, த்ரிஷா என்பதை ஒழுங்குபடுத்தலாம். நக்கீரன் சினிமாவில் அவ்வப்போது நக்கீரன் பாணியில் சூடான சினிமா செய்திகளை Update செய்வது இதன் தனிச் சிறப்பு. சினிக்கூத்து இதழின் பழைய பதிவுகளை படிப்பதற்கு Login செய்யச் சொல்வது வாசகர்களின் வருகையைக் குறைக்கலாம்.

சினிமா எக்ஸ்பிரஸ்

Indian Express Group இணைய தளம் என்பது இதன் ப்ள்ஸ். சினிமா புகைப்படத்தொகுப்பு விரைவாகத் திறக்க முடிகிறது. சினிமா விமர்சனங்கள் உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன. சினிமா எக்ஸ்பிரஸ் புத்தகத்தின் மிகக் குறைந்த பழைய பிரதிகள் மட்டும் pdf வடிவில் கிடைக்கின்றன.

Tamil Galatta

சினிமா நடிகர், நடிகைகளின் Profile, Birthday Greetings போன்றவை தந்திருப்பது இதன் கூடுதல் அம்சம். தமிழ் சினிமாப் பாடல்களின் Lyrics அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம். ஆனால் ஆங்கிலத்திலிருப்பது இதன் மைனஸ்.

http://tamil.webdunia.com/entertainment/film/

Webdunia வின் பன்மொழி ஊடுருவல் காரணமாக இந்திய சினிமா, உலக சினிமா பற்றிய செய்திகளும் கிடைக்கின்றன. புதிதாக வெளிவரும் சினிமா டிரெய்லர்கள் காணக் கிடைக்கின்றன. Pop up விளம்பரங்களின் இடையூறு அதிகம். ஏகப்பட்ட சினிமா நடிகர் , நடிகைகள் புகைப்படங்கள் இருந்தாலும் ஒழுங்காக வரிசைப்படுத்தப்படாதது இதன் மற்றொரு மைனஸ்.

http://www.viduppu.com/

விடுப்பு  என்னும் சினிமா இணையத்தளம்  லங்காசிறி இணையத்தள நிறுவனத்தின் ஓர் பகுதியாகும். இதில் சினிமா விமர்சனம் அருமை.தேதி வாரியாக அமைக்கப்பட்டுள்ளது. சினிமா செய்திகள் Blog போல அமைக்கப்பட்டுள்ளன. புகைப்படத்தொகுப்பு இல்லாதது, பிற வீடியோக்கள் இல்லாதது இதன் மைனஸ்.

http://www.indiaglitz.com/channels/tamil/

Indiaglitz இணையதளம். அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பது ஒரு அன்னியத்தை உண்டாக்கினாலும், சினிமா விமர்சனங்கள், சினிமா நடிகைகள், நடிகர்கள் புகைப்படங்கள், ட்ரெய்லர்கள் அனைத்தும் இருக்கின்றன. தென்னிந்திய மொழி சினிமா பற்றிய செய்திகள் அடங்கியுள்ளன.

Thamizhstudio

தமிழ் ஸ்டுடியோ இணையதளம்! உலக சினிமா விமர்சனங்கள் இங்கே உள்ளன. Update செய்யப்படாதது, புகைப்படங்கள் இல்லாதது இதன் மைனஸ். காணொளி பகுதியில் குறும்படங்கள் மற்றும் குறும்பட நிகழ்வு சார்ந்த வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ் சினிமாப் பாடல்கள் (Tamil Mp3 Songs) Download செய்ய உதவும் தளங்கள்:

http://www.tamilmp3world.com

அனைத்து தமிழ் சினிமாப் பாடல்களும் அகர வரிசையில் அமைக்கப்பட்டு உள்ளன. நேரடியாக Mp3 வடிவில் தரவிறக்கிக் கொள்ளலாம்.

http://www.oldtamilsong.net

பழைய தமிழ் சினிமாப் பாடல்களை தரவிறக்க ஒரு தளம். இதில் சினிமா பெயரில் இல்லாமல் பாடகர்கள் பெயரில் அமைந்துள்ளது இதன் ப்ளஸ் மற்றும் மைனஸ்.

தமிழ் சினிமா சார்ந்த வலைப்பதிவுகள்:

Jackie Sekar

பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்…. என்ற தலைப்பில் எழுதும் ஜாக்கி சேகர் அவர்களின் வலைப்பூ! திரை விமர்சனம் என்னும் பிரிவில் தமிழ் சினிமா விமர்சனங்களை (உலக சினிமாவும்) உடனுக்குடன், புகைப்படங்கள், வீடியோ, சினிமா டீமில் உள்ளவர்கள் விவரங்களுடன் அருமையாக அளிக்கிறார்! ஆறு லட்சம் ஹிட்ஸ் என்பதே இவரது சுவாரசியத்திற்கான ஆதாரம்!

Cable Sankar

Cable Sankar அவர்களின் வலைப்பூ. முழு நீள சினிமா விமர்சனங்களை புகைப்படங்களுடன் பார்க்க மற்றுமோர் வலைத்தளம்! Google Connect ல் 846 Followers பெற்று இருப்பது இவரின் பதிவுகளுக்கு உள்ள வரவேற்பு!

http://worldmoviesintamil.blogspot.com

மிகச்சிறந்த கதைகள், கருத்துக்கள் உள்ள படங்கள், வித்தியாசமான திரைக்கதை/கரு/தொழில்நுட்பம் உள்ள படங்களைப் பற்றி தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த வலைப்பதிவின் நோக்கம்! உள்ளூர் சினிமா போதும் உலக சினிமாவையும் பாருங்கள்! அறிவை விசாலப்படுத்துங்கள் என்கிறது இந்த வலைப்பூ!

உங்களுக்குத் தெரிந்த சுவாரசியமான சினிமா சார்ந்த தளங்கள் இருப்பின் தெரியப்படுத்துங்கள்!

Advertisements

2 Responses to சினிமா! சினிமா! சினிமா!

  1. tamilnilavan சொல்கிறார்:

    mp3,video songs ,tamil cinema news,cinema stills,more…………

  2. […] இடுகைகள் விக்ருதி வருட‌ ராசி பலன்கள்சினிமா! சினிமா! சினிமா!அனைத்து பதிவுகள்சின்மயியின் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: