நூறாவது பதிவு – Rammohan’s Blog

இதோ வந்துவிட்டது நூறாவது பதிவு….

எத்தனை ரன்கள் எடுத்தாலும் நூறு அடித்தவுடன் வருகின்ற மகிழ்ச்சி, ஆரவாரம் , கொண்டாட்டம் இருக்கிறதே! அது தான் நூறு என்ற எண்ணின் தனிச் சிறப்பு!

நவம்பர் 26,2008 பதிவுலகில் WordPress வாயிலாக நுழைந்த நாள். அதற்கு முன்னர் Blogspot ல் வலைப்பூ வைத்திருந்தாலும் நாம் எழுதி என்னத்த சாதிக்கப் போகிறோம் என்ற ஒரு எண்ணம்/ சோம்பல் இருந்தது. Blospot ல் இருந்த Themes பிடிக்காததாலும், WordPress ன் எளிமையான அமைப்பாலும் இங்கு வந்தாயிற்று…

இணையதளங்களுக்கு சமூக மாற்றத்திற்கு வித்திடும் சக்தி இருக்கின்றது என்பதை கண்கூடாக ஆனந்த விகடனின் கட்டுரையான விகடன் ஸ்டார் அலேக்யா வும், குமுதத்தின் சாதித்துக் கொண்டிருக்கும் செந்தில்குமார் கட்டுரையும் கண்கூடாக உணர்த்தியது. இக்கட்டுரைகள், இவர்களது செயல்பாடுகள் தந்த உற்சாகத்தால் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன், எனக்கென்று சில கொள்கைகள் வகுத்துக் கொண்டு! பதிவில் எழுத விஷயங்கள், படங்கள், காணொளிகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் தனிமனித/ சமூக முன்னேற்றத்திற்கு வித்திடும் பதிவுகளை மட்டும் எழுதுவது/ பகிர்ந்து கொள்வது என்ற உறுதி கொண்டேன். அதனால் தன்னம்பிக்கை, தொழில்நுட்பம், சமூக மேம்பாடு அவ்வப்போது சற்று ’மதிமயக்காத’ பொழுதுபோக்கு என்று எனக்கே உரிய பாதையை வகுத்துக் கொண்டேன்.

பா.ராகவன் அவர்கள் தனது Excellent புத்தகத்தில் எழுதிய, ”புத்தகம் என்பது வாசிப்பவரை ஒரு அங்குலமாவது உயர்த்த வேண்டும்” என்கிற கூற்று பதிவுலகத்திற்கும் பொருந்தும். அதனால் ஒவ்வொரு பதிவையும், ”வாசிப்பவர்கள் ஒரு mm ஆவது உயர வேண்டும்” என்று மிக்க கவனத்துடன் பதிப்பிக்கிறேன்.

Tamilish தளத்தின் வருகைக்குப் பின்னர் தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் அதிகமாயினர் என்றாலும், தரமான இடுகைகளுக்கு இருக்கும் ஆதரவு குறைவு என்பது பல சமயங்களில் காணப் பெற்றேன். என் தளத்திற்கென்று தனியாக வாசகர்கள் இல்லாதது, குறைவான இடுகைகளிடுவது, பின்னூட்டங்களுக்கு சரியான பதிலளிக்காமலிருப்பது, ”காரசாரமாக” பதிவுகள் எழுதாமல் ”ஒரு mm ஆவது உயர வேண்டும்” போன்ற ”கொள்கைப் பிடிப்புகளை” வைத்திருப்பது போன்றவையும் குறைவான பார்வைகள்/ பின்னூட்டங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்பதை உணர்ந்தாலும், அதனைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் மன நிறைவுடன், நிதானமாக எடுத்து வைக்கிறேன் ஒவ்வொரு அடியையும்!

–  ராம்மோகன்

Advertisements

5 Responses to நூறாவது பதிவு – Rammohan’s Blog

 1. வாழ்த்துக்கள் நண்பரே.

 2. bala சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் நண்பரே… தொடருங்கள் உங்கள் சேவையை

 3. ராமலக்ஷ்மி சொல்கிறார்:

  வாழ்த்துக்கள். தொடருங்கள்.

 4. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  வாழ்த்துகள்

  – ஜெகதீஸ்வரன்
  http://sagotharan.wordpress.com/

 5. எஸ்கா சொல்கிறார்:

  ///காரசாரமாக பதிவுகள் எழுதாமல் ஒரு mm ஆவது உயர வேண்டும் போன்ற கொள்கைப் பிடிப்புகளை வைத்திருப்பது போன்றவையும் குறைவான பார்வைகள்/பின்னூட்டங்களுக்குக் காரணம்/// உண்மை. கவலைப்படாதீரும். உம்மைப் போல் பலரும் இங்கே உண்டு. உங்கள் சேவையைத் தொடருங்கள். நீங்களாவது நூறாவது பதிவைத்தொட்டு விட்டீர். நானெல்லாம் பதிவே போடுவதில்லை. பிற வலைதளங்களில் வெளியான கட்டுரைகளை மட்டும் பதிவு என்று சொல்லி ஏற்றி வைத்திருக்கிறேன். எஸ்கா http://yeskha.blogspot.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: