உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பாடல்

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் வருகிற June 23 முதல் 27 வரை நடைபெற இருக்கிறது.

செம்மொழி மாநாட்டுப் பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. கலைஞர் கருணாநிதி எழுதிய பாடல் வரிகளுக்கு A.R.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பாடலை கௌதம் மேனன் இயக்கி உள்ளார்.

பாடல் வரிகள்:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் –
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி –
ஓதி வளரும் உயிரான உலக மொழி –
நம் மொழி நம் மொழி – அதுவே
செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!

MP3 வடிவில்:

Tamil2Friends.Com

செம்மொழிப் பாடல் காணொளி:

பாடலில் என்னைக் கவர்ந்த இடங்கள்:

1.அகர முதல எழுத்தெல்லாம் என்று தமிழருக்கே உரிய துவக்கம்

2. உழைத்து வாழ்வோம் என்ற வரிகளுக்கான காட்சியமைப்பு

3. தமிழ் எழுத்துக்களை வடகம் போல் பொறித்தல்

4. கணினி மற்றும் அலைபேசியில் தமிழ் மொழி

இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணியிருக்கலாம். கலைஞர், ரஹ்மான் & கௌதம் மேனன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றே தோன்றுகிறது.

17 Responses to உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பாடல்

 1. பாடல் நன்று! நான் கவிஞன் இல்லை, எனவே இதனை எழுதியவர் மீது கருத்து கூற விரும்பவில்லை!

  சாமான்யனின் பார்வையில் சில சந்தேகங்கள்!

  ௧. இந்த பாடலை ஏன் கிராமிய இசை கலைஞர்களை வைத்து எடுக்க வில்லை? (பின்னாளில் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு இந்த குழுவை உபயோகப்படுத்தல்லாம் என்றா

 2. […] தெரிஞ்சவங்க மறுமொழில சொல்லுங்க! உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கொண்டாடுற இந்த வேளைல உதவியா […]

 3. கீதா.பா சொல்கிறார்:

  பாடல் நன்றாக இருக்கின்றது

 4. A.SURPHONISHA சொல்கிறார்:

  padal unmail super this soung is very nice

 5. medeswaran சொல்கிறார்:

  http://dhinamalar.info/Political_detail.asp?news_id=17991
  மேற்கண்ட சுட்டியில் காணப்படும் செய்தியின் படி,செம்மொழி மாநாட்டை முன்னிட்டு ‘சங்கத்தமிழ் அனைத்தும் தா’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டி என்றும் ,கவிதை சமர்ப்பிக்க இறுதி நாள் மே 20 மற்றும் பரிசுத்தொகை ஒரு லட்சம் என்றும் அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். அது குறித்த தற்போதைய நிலையை மாநாடு சம்பந்தப்பட்ட எவரும் சொல்வதாகத் தெரியவில்லையே..

 6. A.NIYAS BASHA சொல்கிறார்:

  this songs is verynice I’AM COME IN england

 7. niyas சொல்கிறார்:

  this soung is very very nice

 8. ramya சொல்கிறார்:

  superb song chanceless wat song i ever heared a song like that i love this song very much

 9. tamizh tells சொல்கிறார்:

  a.r.rahman’s music is perfect…………

 10. Sebastin சொல்கிறார்:

  A.R Rahman ji is rocking & song screen play is excellent execution by Gauthm menon.

 11. Abiramimanian சொல்கிறார்:

  This song is very very supper

 12. julietbenitta சொல்கிறார்:

  very a pretty song i have no words say how it is beautiful!

 13. bharathi சொல்கிறார்:

  thanks c m sir supar song

 14. ashwini சொல்கிறார்:

  i like this song very much. nice song, nice lyrics, no words to explain.hands off to A.R. RAHMAN SIR.

  really really sooooooooooooooooooooooooooooooper song.

niyas க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: