LeoFEST- தினமணி செய்தி

தொழில்நுட்ப கருத்தரங்கு
First Published : 12 Mar 2010 01:45:35 AM IST
தூத்துக்குடி, மார்ச் 11:  தூத்துக்குடியில் ஸ்பிக் நகர் அரிமா சங்கங்கள் சார்பில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான 3 நாள் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.
ஸ்பிக் நகர் லியோ சங்கம், ஸ்பிக் நகர் அரிமா சங்கம் மற்றும் மகளிர் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து லியோ பெஸ்ட் என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கை நடத்தின.
ஸ்பிக்நகரில் 3 நாள்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் தொடக்கிவைத்துப் பேசினார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 57 பொறியியல் கல்லூரிகளில் இருந்து 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பயிலும் 425 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன.
தொடக்க விழாவுக்கு அரிமா சங்க மாவட்ட ஆளுநர் பி.ஒ.பி. ராமசாமி தலைமை வகித்தார். ஸ்பிக் பொதுமேலாளர் சொக்கலிங்கம், உதவிப் பொதுமேலாளர்கள் ஜெயபாலன், ராஜ்மோகன், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிறைவு விழாவில், தூத்துக்குடி துறைமுக சபைத் தலைவர் கு.ஜெ. ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
விழாவுக்கு அரிமா சங்கத் தலைவர் சி. சொக்கலிங்கம் தலைமை வகித்தார். சங்கச் செயலர் சரவணன், மகளிர் அரிமா சங்கத் தலைவி கலாவதி, செயலர் செல்வம், இளம் அரிமா சங்கத் தலைவர் ராம்மோகன், ஸ்பிக் நிறுவன உதவி மேலாளர் அருணாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி மூலம்:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: