CII Sohrabji Godrej Green Business Center Hyderabad

2006 ஆம் வருடம் எனக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது…

திருச்சியில் உள்ள ஒரு சிமெண்ட் உற்பத்தித் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். Green Cementech என்ற தேசிய அளவிலான கருத்தரங்கம் ஹைதராபத்தில் தகவல் தொழில் நுட்ப நகரமாம் Hitech City அருகில் உள்ள CII Sohrabji Godrej Green Business Center ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தியாவின் முதல் பசுமைக் கட்டிடத்தை (Green Building) கண்டு வியந்த அந்த தருணங்கள் என்றும் நினைவில் நிற்பவை.

இதோ அந்த பசுமைக் கட்டிடத்தின் சிறப்பம்சங்கள்:

20,000 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்ட அந்தக் கட்டிடம் கருத்தரங்க அறைகள், கண்காட்சிக்கான அறைகள், அலுவலகத்திற்கான கட்டிடம் மற்றும் உணவகங்களை உள்ளடக்கியது.

இந்த பசுமைக் கட்டிடமானது இதே அளவில் உள்ள மின்சாரத்தை உபயோகிக்கும் கட்டிடங்களை விட 88% குறைவான மின்சாரத்தை உபயோகிக்கும். இது எப்படி?

அறையின் உற்பகுதி முழுவதும் ஒளியை பிரதிபலிக்க கூடிய பொருட்களால் ஆனது.ஒளியின் அளவை கட்டுப்படுத்தும் Automatic Dimmers அமைக்கப்பட்டுள்ளது. ஆளில்லாத நேரங்களில் விளக்குகளை அணைக்க Occupancy sensors பொருத்தப்பட்டுள்ளன.90% அறையின் பரப்பளவு சூரிய ஒளி பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது மின்சார உபயோகத்தை பெருமளவு குறைக்க உதவுகிறது.

மேற்கூரையில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் எடுக்கும் தொழில்நுட்பமான Solar PV Cells உபயோகித்திருக்கிறார்கள். இது 24 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, கட்டிடத்தின் மொத்த மின் தேவையில் 16% த்தை பூர்த்தி செய்கிறது.

கட்டிடத்தின் அடுத்த சிறப்பம்சம் Wind Tower என்பது. இது பெரும்பாலான தொழிற்சாலைகளில் உபயோகிக்கும் Cooling Tower போன்ற தொழில்நுட்பம். AC க்கு தேவையான காற்று இந்த Wind Towerன் கீழ்ப்புறத்தில் இருந்து வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலிருந்து விழும் நீரானது காற்றை குளிர்விக்கிறது. குளிர்ந்த காற்று AC Unitற்குள் செல்வதால் ACன் சுமை குறைகிறது.

மேலும் Roof Garden அமைக்கப்பட்டு உள்ளதால் சூரிய வெப்பத்தால் அறை சூடாவது தவிர்க்கப்படுகிறது.

கட்டிடத்திற்கு வெளியே உள்ள வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள், நடைபாதைகள் அனைத்தும் மழை நீர் பூமிக்குள் புகும் வகையில் நீர் உட்புகும் Permeable Materialஆல் அமைக்கப்பட்டு உள்ளது.

இதையும் தாண்டி வெளிச் செல்லும் மழை நீரானது Root Zone Treatment என்னும் முறைப்படி சேகரிக்கப்பட்டு அங்குள்ள குளத்தினை அடைகிறது. இது செடிகள் மற்றும் மரங்களுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

இங்கு அமைந்துள்ள Low Flush Toilets மற்றும் Water Less Urinals தண்ணீர் தேவையை மேலும் குறைக்கிறது.

Wash Basinனில் அமைந்துள்ள ETap Sensor மூலம் தேவையான போது மட்டும் தண்ணீர் தருகிறது. மேலும் இதில் உள்ள Aerator காற்றுக் குமிழிகளுடன் தண்ணீர் வருமாறு செய்கிறது. இது தண்ணீர் உபயோகத்தை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இது போன்ற தொழில்நுட்பங்களால் 35% தண்ணீர் உபயோகம் குறைகிறது.

Building Management System என்னும் Software மூலமாக அறையின் வெப்பம்(Temperature), கரியமில வாயுவின் அளவு(CO2 %) ,நீரின் அளவு (Humidity) ஆகியவை கண்கானிக்கப்பட்டு AC ல் இருந்து வரும் Make up Airன் அளவை நிர்ணயிக்கின்றன. இது சாதாரணமாக பெரும் வளாகங்களில் இருக்கும் அளவை விட குறைவு என்பதால் AC Load குறைகிறது.

Electric Car போக்குவரத்துக்கு உபயோகப் படுத்தப் படுகிறது. இது எண்ணெய் வளங்களை பாதுகாக்கிறது.

இதோ அத்தனையும் அடங்கிய காணொளி:

Recent Posts:

How to Pay your BSNL Bills Online?

Good Tutorials

Video Sites

Think About Nation

ஸ்ரீ யந்திரம்: Sri Yantra

புலிகளைப் பாதுகாப்போம்-Save Tigers

CII Sohrabji Godrej Green Business Center Hyderabad க்கு ஒரு பதில்

  1. […] பசுமை இல்லம் அமைப்பீர் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: