அடிப்படை அவசியங்கள்; EHMAN; 1972

DESIDERETA

அடிப்படை அவசியங்கள்; EHMAN; 1972

ஞானியரின் ஞானத்தைக் கேள்!
அவசர இரைச்சல் இடையே
அமைதியாகச் செல்.

மௌனத்தின் நிம்மதியை நினைவில் கொள்
முடிந்த வரை சரணடையாமல்
அனைவருடனும் நல்லுறவு கொள்.

உன் உண்மையை
இதமாகத் தெளிவாகக் கூறு
பிறர் கூறுவதைக் கவனி
மந்த மூடர்களாயிருப்பவரிடமும்
சொல்வதற்கு அவர்களிடம்
ஒரு கதை உண்டு.

உரக்கப் பேசுபவர்களையும்
ஆத்திரக்காரர்களையும் தவிர்
அவர்கள் உள்ளத்தில்
வெறுப்பை உருவாக்குபவர்கள்.

பிறருடன் ஒப்பிட்டால்
உனக்குக் கசப்பும் சலிப்புமே மிஞ்சும்.

உன்னை விடவும்
உயர்ந்தவர்களும், தாழ்ந்தவர்களும்
எப்போதும் உண்டு.

உன் சாதனைகளை மகிழ்வுடன் அனுபவி
அதே நேரத்தில்
உன் திட்டங்களையும்
மகிழ்ச்சியோடு அணுகு.

உன் வாழ்வின் பாதை
எவ்வளவு சாதாரணமாக இருந்தாலும்
அதில் ஆர்வம் கொள்.

கால மாற்றங்களில் இதுவே
உனது நிரந்தரச் செல்வம்.

தொழிலில் எச்சரிக்கையோடிரு.
உலகில் ஏமாற்றல்கள் அதிகம்,
அதனால் நன்மைகள் இருப்பதை மறுக்காதே.

உழைப்பவர் பலர்
உலகம் முழுவதும் வெற்றிக்கான
வீர முனைப்பு இருக்கிறது.

நீ
நீயாக இரு.
அன்பு காட்டுவதாய் நடிக்காதே.
அன்பை ஏளனப்படுத்தாதே.

எல்லா விரோதங்களுக்கும்
ஏமாற்றங்களுகும் அப்பாலும்
அன்பு ஒரு நிரந்தரப் பசுமை.

வயதுகளின் ஆலோசனையை அனுமதி.
இளமையின் வேகத்தை நிதானமாக்கி,
உள்ளே உரம் பெறு,
பலம் பெறு, இது எதிர்பாரா தாக்கங்களிலிருந்து
உன்னைப் பாதுகாக்கும்.

மிகையான கற்பனைகளால்
மனதை வருத்திக் கொள்ளாதே
அசதியும் தனிமையும்
அச்சங்களைப் பிரசவிக்கும்

முழுமையான கட்டுப்பாடுடன்
உனக்கு நீயே
சலுகைகள் எடுத்துக் கொள்.

நீ
இந்தப் பிரபஞ்சத்தின் குழந்தை
மரங்களுக்கும், நட்சத்திரங்களுக்கும்
உள்ளது போலவே உனக்கும்
இங்கே உரிமைகள் உள்ளன.

புரிந்தாலும் புரியாவிட்டாலும்
பிரபஞ்சம் தன் விதிப்படியே
இயங்கிக் கொண்டிருக்கும்

உன் உழைப்பும் கனவும்
எதுவானாலும்
உள்ளே உனக்கோர்
இடம் செய்து கொள்.

பொய், புரட்டு, பகற் கனவுகளை மீறி
உலக அழகானது தான்.

இன்புற்றிரு,
இன்புற்றிருக்க முனை.

1972 ஆம் ஆண்டின் இந்த தன்னம்பிக்கை ஊட்டும் கவிதையினை
அளித்து உதவிய ”இளைஞர்” நரேந்திரன் அவர்களுக்கு நன்றிகள்….

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: