வாழ்க்கை என்பது கடமையடா!

வாழ்க்கை என்பது கடமையடா – அதில்
வாழ்ந்து பார்ப்பது உரிமையடா!
இன்பமும் துன்பமும் குமிழிகளே -அவை
இரண்டும் இங்கே நிலையில்லை!

இன்பம் வந்தால் துள்ளாதே – அட
இன்னல் வளைத்தால் துவளாதே!
இரண்டையும் ஒன்றைக் கருதிவிடு –
இன்னலை இங்கே ஊதிவிடு!

இந்தச் சமநிலை தேவையடா – அது
இல்லை என்றால் குழப்பமடா!
என்றும் வேண்டும் நம்பிக்கை — அதை
இழந்தால் நாமோ வெறும்சக்கை!

காக்கை குருவி எறும்புகளும் – இந்தக்
காசினி மீதில் வாழ்கிறது!
ஊற்றாய் ஊறும் பகுத்தறிவை — ஏந்தும்
உன்னால் வாழ முடியாதா?

நேற்று என்பதை அழித்துவிடு – உலகில்
நாளை என்பதை மறந்துவிடு!
ஏக்கந் தன்னை எடுத்துவிடு — கனியும்
இன்றில் வாழ எழுந்துவிடு!

மனிதா! மனிதா! மயங்காதே — இங்கே
மலைப்பின் பிடியில் சிக்காதே!
துணிச்சல் கொண்டு நடைபோடு — வாழ்வைத்
தூக்கிப் பிடித்தே எடைபோடு!

Thanks: http://www.eelanesan.com/tamil-ilakiyam/48-kavithai/134-life.html

Advertisements

One Response to வாழ்க்கை என்பது கடமையடா!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: