Sarath Got 14101 Votes In South Chennai

ஒரு வழியாக தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன…

தென் சென்னையில் சுயேச்சையாகப் போட்டியிட்ட சரத்பாபு 14,101 ஓட்டுகள் பெற்றுள்ளார்.

தென் சென்னை தேர்தல் முடிவுகள் பற்றி அறிய

இவருக்காக இணைய வழிப் பிரசாரம் மேற்கொண்ட சக நண்பர்களுக்கு நன்றி.

சரத் பாபுவுக்காக:

தோல்வியை விடச் சிறந்த முறையில் யாரும் பாடங்களைக் கற்றுத் தர முடியாது. உண்மையைச் சொல்லப் போனால் வெற்றி பெரிதாக எதையும் புதிதாகக் கற்றுத் தருவதில்லை. மாறாக தோல்வி நிறையவே கற்றுத் தருகிறது. நிறைய சிந்திக்க வைக்கிறது. எனவே தோல்வியைத் திறந்த மனத்துடன் ஆராயுங்கள்தோல்வி வெற்றிக்கு இனியும் தேவையான செயல்கள் இன்னதென்று தெரிவிக்கும். அந்தச் செயல்களை செய்யத் துவங்குங்கள்.

தாங்கள் பிரசாரம் செய்ததைப் போலவே தங்களுக்காக வாக்களித்தமைக்காக அனைவருக்கும் அனைத்து ஊடகங்கள் வாயிலாக நன்றி தெரிவியுங்கள்.

தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள்.

“சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வு ஏற்படும் வகையில், குடியுருப்பு நலச் சங்கங்கள் முதலிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்புரிவேன். அதன் வாயிலாக, தென் சென்னை தொகுதியில் நாளொன்றுக்கு 60 மரக்கன்றுகள் நடப்படும். ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 1,08,000 மரங்கள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.”

இதற்காக ஏற்கனவே இதே போன்ற நோக்கத்துடன் பணிபுரிந்து வரும் சாரல் போன்ற சமூக சேவை அமைப்புகளுடன் கை சேருங்கள்.

”கணினி போன்ற தொழில் நுட்பத்தின் துணை கொண்டு இளம் தலைமுறையினரின் கல்வித் திறனை மேம்படுத்துவேன்.”

தேர்தல் பிரசாரத்தின் மூலம் பெற்ற நண்பர்கள் துணை கொண்டு இதனை நிறைவேற்றுங்கள்.

அடுத்த தேர்தலில் மாற்றம் கண்டிப்பாக வரும். இதனைச் செய்வேன், செய்வேன் என்று ஓட்டு கேட்பதை விட பதவியில் இல்லாமலே இதனை செய்தேன், செய்தேன் என்று உரிமையுடன் வாக்கு கேளுங்கள்.

வெற்றி நிச்சயம்.

Sarath Got 14101 Votes In South Chennai க்கு 8 பதில்கள்

  1. கண்ணா சொல்லுகின்றார்:

    நல்ல தகவல்…

    தகவலுக்கு நன்றி

  2. நித்தில் சொல்லுகின்றார்:

    தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெற்ற சயேட்சை வேட்பாளர் சரத்பாபு என்பது பாராட்டதக்க விடயம்.

  3. Suresh சொல்லுகின்றார்:

    அண்ணே அவரு 17,000+ வோட்டுகள் மாற்றி விடுங்கள் அவரே சொன்னாரு

    அவர பத்தி ஒரு பதிவு போட்டு இருக்கேண்

    சரத்தின் வோட்டு எண்ணிக்கை மற்றும் பல
    http://www.sakkarai.com/2009/05/blog-post_17.html

  4. Joe சொல்லுகின்றார்:

    Good update.

    Hope Sarath will win the next election, if he jumps into the fray much earlier.

  5. Vidyasagar R சொல்லுகின்றார்:

    I agree with you. This is the first towrds the change.

  6. asfar சொல்லுகின்றார்:

    Good update

  7. Saran சொல்லுகின்றார்:

    You Are Posting Really Great Articles… Keep It Up…

    We recently have launched a website called “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
    http://www.namkural.com.

    நன்றிகள் பல…

    – நம் குரல்

  8. sreedhar சொல்லுகின்றார்:

    good

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: