புத்தியைத் தீட்டு…

தொழில் நுட்ப வளர்ச்சி எங்கோ சென்று கொண்டு இருக்கிறது….Skype மூலம் திட்டமிட்டு தீவிரவாத தாக்குதல் நடத்த மட்டும் அல்ல..கத்தியை தீட்ட மட்டும் அல்ல…புத்தியைத் தீட்டவும் தொழில் நுட்பம் உதவும்…இதோ…Brain Genius என்ற Mobile Game பற்றி விவரிக்கப் போகிறேன்…Java Support செய்யும் அனைத்து போன்களிலும் இதனை நிறுவலாம்..

Daily Exercises, Single Exercises & Bonus Games என்று மூன்று பிரிவாக நீங்கள் விளையாடலாம்..

இதனுள் Visual, Memory, Calculation & Logic என்ற நான்கு பிரிவுகள் உள்ளன.

Visual: கண்களை அகல விரித்துக் காத்திருப்பவர்களுக்கே வாய்ப்புகள் கதவைத் தட்டும் என்பார்கள்.எங்கும் எதிலும் உள்வாங்கும் சக்தி உள்ளவர்களுக்கே உலகம் வசப்படும். நமது Visual திறனை வளர்க்க இது உதவும்.

Memory: எங்கேயோ வெச்சேனே…எங்கேன்னு மறந்துருச்சு… என்று புலம்புபவரா நீங்கள்…இதில் உள்ள Memory Games ஐ முயற்சித்துப் பாருங்கள்…சாவி எங்க வெச்சேன் என்று தேடி உங்கள் நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள்…

Calculation: விகடனில் படத்துக்கு மட்டும் சரியாக மார்க் போட முடியுது…ஆனால் கணக்கு பரிட்சையில்…காய்கறி கடையில்…? கணக்குப் போடும் இந்த திறனைத் தான் பல்வேறு போட்டித் தேர்வுகளிலும் ஏன் உலகமே வியக்கும் IIM மிலும் சொல்லித் தருகிறார்கள்.மூளையைக் கூராக்கிக் கொள்ளுங்கள்..அடுத்த முறை கடைக்காரருக்கு அதிக காசைக் கொடுத்து விட்டு வீடு திரும்ப மாட்டீர்கள்…

Logic: தர்க்க ரீதியிலான முடிவுகளை வாழ்க்கையில் எடுக்கும் சந்தர்ப்பங்கள் அனைவருக்கும் வாய்க்கும்.அதுவும் ஒரு தொழிற்சாலை அல்லது நிறுவனத்தில் குழுவாக பணிபுரிபவர்களுக்கு,ஒரு பிரச்சனைக்கு முடிவு எடுக்கும் போது இது மிகவும் உதவி புரியும்…

ஒவ்வொரு பிரிவிலும் நீங்கள் முன்னேரும் போது கடினத்தன்மை அதிகரித்துக் கொண்டே செல்லும்…
போராட்டங்கள் தானே வாழ்க்கை.

இந்த Mobile Game ஐ http://www.mobile9.com என்ற தளத்தில் பெறலாம். Mobile9 தளத்தில் உங்கள் Phone Model ஐ Select செய்த பிறகு Games Section ல் Brain என்று தேடி Brain Genius ஐப் பெறலாம்.

Brain is like Muscle…Use it or Lose it..

இந்த இடுகையை எனக்கு Brain Genius ஐ அறிமுகப்படுத்திய Genius பாலாஜிக்கு சமர்ப்பிக்கிறேன்.

இது போன்ற தனிமனித வளர்ச்சிக்கு உதவும் தொழில் நுட்பங்கள் இருந்தால் பின்னூட்டமிடுங்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: