கூகுளின் SMS Channel-இலவச சேவை

கூகுள் இலவச SMS Channel சேவை இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Mytoday போன்ற SMS சேவைக்குப் பிறகு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.நீங்களாகவே ஒரு புதிய SMS சேனலை உருவாக்க முடியும்.அதன் பின் அதற்குரிய இணைய முகவரியைப் பெற்று நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களையும் இணையச் செய்யலாம். நாம் SMS சேனலுக்கு அனுப்பும் SMS ஆனது அதில் இணைந்துள்ள அனைவரின் அலைபேசியையும் இலவசமாகச் சென்றடையும்.

sms1உதாரணமாக, Saaral SMS சேனலானது சாரல் சமூக நல அமைப்பின் செயல்பாடுகளை அதன் அனைத்து உறுப்பினர்களும் அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. மேலும் நம்பிக்கை ஊட்டும் கருத்துக்களையும் (உதாரணமாக:A Candle loses nothing by lighting another candle), சமூக அக்கறையுள்ள பொது அறிவுத் தகவல்களையும் (உதாரணமாக:Save Energy,Save Earth-National Energy Conservation Day Wishes(Dec 14)-SAARAL) பகிர்ந்து வருகின்றது. இது தனது உறுப்பினர்களுக்கு குறுந்தகவலாக அனுப்பி வருகிறது.

சாரல் அமைப்பின் SMS சேனலுக்கு Subscribe செய்ய இங்கே வசிக்கவும்.

கூகிள் SMS சேனலின் சிறப்பம்சங்கள்:

• நாமாக புதிய SMS சேனல் உருவாக்கிக் கொள்ளலாம்.இதன் மூலம் நண்பர்கள், ஒத்த கருத்துள்ளவர்கள் தங்களுக்கென்று ஒரு SMS சேனலைத் தொடங்கலாம்.ஏற்கனவே பல உபயோகமுள்ள சேனல்கள் உள்ளன.உதாரணத்திற்கு: NDTV National News, Business Line etc.சுனாமி, புயல் எச்சரிக்கை போன்ற தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம்.

• நாம் அனுப்பும் செய்தியை அலைபேசி, கூகுள் இணையதளம், நம் இணையத்தின் RSS Feed மூலம் அனுப்பலாம்.

• நாம் சேர்ந்துள்ள SMS சேனலில் நம்முடைய மொபைல் எண் மற்றவர்களுக்குத் தெரியாது.

• நாம் SMS பெற நேரத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்.உதாரணத்திற்கு: 05:00 AM to 10:00 PM

• தேவையான SMS ன் எல்லையை வரைமுறை செய்யலாம்.உதாரணத்திற்கு: Max SMS per Day:50

• எந்த நேரத்திலும் SMS சேவை பிடிக்கவில்லை என்றால் விலகிக் கொள்ளலாம்.

கூகிள் SMS சேனலில் இணையும் முறை:

இணையத்திற்கு செல்லவும்.

• Nick Name செட் செய்யவும்

• மொபைல் எண் கொடுக்கவும்

• மொபைலுக்கு வரும் Code டைப் செய்யவும்

• விருப்பமான SMS சேனலுக்கு Subscribe செய்யலாம்.Eg:Saaral

கூகிள் SMS சேனலில் இணையுங்கள். Upto Date ஆக இருங்கள்.

Advertisements

One Response to கூகுளின் SMS Channel-இலவச சேவை

  1. Robot சொல்கிறார்:

    sir,apdiye canadalerunthu epdi anupalamnu sonniganna nannarukum?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: