விடியலை நோக்கி…

கிழக்கின் ஓரத்தில்

விடியலைத் தேடும்

நண்பா…


உன் சொந்த

திசைக்குப்

புறப்பட்டு வா!


உனது திசைக்கு

நீதான் சூரியன்!


கனவைத் தொலை!

நினைவைத் துவை!


நடப்பதற்கு முன்

பாதையை மட்டுமே

பார்ப்பவன் நீ..

பாதங்களையும் பார்!


உறை விட்டு வராத

உடைவாளைப் போல்

புகழைப் பயன்படுத்து!


மூளையை

நிரப்ப மட்டுமே கல்வி

உடைக்க அல்ல

உணர்ந்து கொள்!


வெண்முகிலில் கலந்த

நிலவொளியாய்

கொள்கையில்

கரைந்து போ!


உன் இலட்சிய வெறி

கிளப்பும் தீப்பொறி

மூங்கில் காட்டில்

விழாமல் பார்த்துக் கொள்


எல்லா வெற்றிகளும்

ஒரு வகைத் தோல்விகள்

எல்லாத் தோல்விகளும்

ஒரு வகை வெற்றிகள்

வெற்றித் தோல்விக்குத்

தீர்ப்பு வழங்கு!


முதுகுக்குப் பின்னால்

கண் வளர்த்து வை!


சூழ்ச்சிகள் அறி

சகுனிகள் எத்தனை பேர்..

கணக்கெடு!


உண்மைக்கு

உதட்டுச் சிரிப்பால்

முகமூடி போடு!


கையளவு சம்பாதி

நகமளவேனும் தானம் செய்!


கடலில் விழுந்த கடுகு

புவியில் விழுந்த நேசம்

முயற்சி செய்து கண்டெடு!


மூளையின்

ஒரு பகுதியில் அறிவு

மறு பகுதியில் ஞானம்

பிரித்துப் பழகு!


உலக வீதியில்

தெளிவைத் தெளி!


அலைகளின் மடியில்

நீச்சலடிக்கும்

கதிரொளிபோல்

மின்ன மின்ன

வெற்றிகள் மிதக்கும்!

வெற்றியின் விளிம்பில்

விடியல் பிறக்கும்!

உலகம் யாவையும்….கபிலன் நூலில் இருந்து

Advertisements

One Response to விடியலை நோக்கி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: