விகடன் ஸ்டார் அலேக்யா

”மகிழ்ச்சி வெள்ளம், குதூகலக் குற்றாலம்னெல்லாம் நம்ம உற்சாகத்தைப் பகிர்ந்துக்க என்னென்னவோ எழுதுவோம், பேசுவோம். ஆனா, பிறந்ததில் இருந்து சந்தோஷத்தோட சாரல்கூட படாதவங்களைப் பத்தி எப்பவாவது யோசிச்சிருக்கோமா?” சின்னப் பெண்ணாகத் தெரிந்த அலேக்யாவிடம் இருந்து இத்தனை பெரிய கேள்வி!

ஜாலி, கேலி, அரட்டை, டேட்டிங் இத்யாதிகளுக்கான இணைய ஸ்பாட் ஆர்குட். ஆனால், இந்த சோஷியல் நெட் வொர்க்கிங் வெப்சைட்டை சமூக நலனுக்காகப் பயன்படுத்தி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் அலேக்யா.

”வாழ்க்கையில் சந்தோஷ மழைக்காக ஏங்கிக்கிடப்பவர்களுக்கு எங்களோட சின்ன உதவி சாரலாக இது இருக்கட்டுமேன்னுதான் ‘சாரல்’ என்கிற பேரையே என் கம்யூனிட்டிக்கு வெச்சேன்!” என்கிறார் அலேக்யா.

ஆர்குட்டில் ‘ஒபாமா’வில் ஆரம்பித்து ‘ஓசி டீ’ வரைக்கும் பலப் பல விஷயங்களுக்கு ‘கம்யூனிட்டி’கள் எனப்படும் ரசிகர் வட்டங்கள் இருக்கும். அதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களுக்குள் விவாதித்துக்கொண்டு இருப்பார்கள். அதுபோன்ற அரட்டை கம்யூனிட்டிகளுக்கு மத்தியில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக அலேக்யா உருவாக்கிய சாரல் கம்யூனிட்டியில் இப்போ 4,495 உறுப்பினர்கள்!

”எங்க குடும்பத்தில் பிறந்த நாள், திருமண நாள் மாதிரி சந்தோஷங்களை ஆதரவற்றோர் இல்லங்களில்தான் கொண்டாடுவோம். ஆர்குட்டில் யார் வேண்டுமானாலும் கம்யூனிட்டி ஆரம்பிக்கலாம்னு வாய்ப்பு கிடைச்சப்போ, என் சின்னக் கனவான சாரலை ஆரம்பிச்சேன். இது போன்ற கம்யூனிட்டியில் சேர ஆர்வம் காட்டுவாங்களான்னு ஒரு சந்தேகம் இருந்தது. ஆனா, ஆரம்பிச்சதுமே ஆயிரக்கணக்கில் ஹிட் அடிச்சிருச்சு சாரல். இப்போ அதில் இருந்து 60 உறுப்பினர்கள் சேர்ந்து, ‘சாரல்’ என்கிற ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பைத் தொடங்கியிருக்கோம். ஒன்றரை வருஷங்களா ஈரமான இதயங்களின் இணைய இல்லமா இருக்கு சாரல்!” என்று பூரிக்கும் அலேக்யாவின் வயது இருபத்து நாலு. இன்ஜினீயரிங் முடித்துவிட்டு எம்.பி.ஏ., படிப்பதற்காககக் காத்திருக்கிறார்.

Saaral Social Service Society,Saaral Orkut Community


”ஆதரவற்ற குழந்தைகளைக் காப்பாத்தணும்னு ஆர்வமா இல்லங்கள் ஆரம்பிக்கிறவங்க கையில் காசு இருக்கிற வரை சமாளிச்சுடுவாங்க. அப்படி முடியாதபோது ஒழுகுகிற கூரை, ரெண்டு வேளை சாப்பாடுனு அந்த குழந்தைங்களுக்கு இன்னமும் சோகம் சேர்ந்துடும். அப்படி நிதி வசதி இல்லாம திண்டாடுகிற இல்லங்கள்தான் சாரலின் இலக்கு. இப்போதைக்கு நான்கு இல்லங்களுக்கு ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்டுக் கொடுத்திருக்கோம். இரண்டு இல்லங்களைச் சேர்ந்த 85 குழந்தைகளுக்கு இந்த வருடத்திலிருந்து படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டு இருக்கோம்.

சாரல் கம்யூனிட்டியின் உறுப்பினர்கள் அனைவரும் படிக்கிற, வேலை பார்க்கிற இளைஞர்கள்தான். உசிலம்பட்டிப் பக்கம் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளைக் கட்டாயமா வேலைக்கு அனுப்புறாங்கன்னு கேள்விப்பட்டோம். அந்தப் பெற்றோர்களுக்குக் குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் கொடுத்துவிட்டு, குழந்தைகளைப் பள்ளிக்குஅனுப்பும்படி கேட்கப்போறோம். இன்னொரு சந்தோஷமான விஷயம், அப்துல் கலாமுடைய ‘இந்தியா விஷன் 2020’ திட்டத்தில் சாரலும் இணைந்து செயல்பட பரிந்துரை செய்யப்பட்டு பரிசீலனையில் இருக்கு. அவங்களோட இணையும் வாய்ப்பு கிடைச்சா, இன்னும் எங்கள் பணி வேகமா நிறையப் பேரைப் போய்ச் சேரும். நல்ல நோக்கமும் நண்பர்களும்தான் ‘சாரல்’ உருவானதற்குக் காரணம். இன்னும் நிறைய வேலைகள் காத்திருக்கு எங்களுக்கு… இல்ல நமக்கு!” என்று என்னைப் பார்த்துச் சிரிக்கிறது அந்தக் கனிவான ஓவியம். அலேக்யா என்றால் ஓவியா என்று அர்த்தம்!

Click to Visit SaaRaL ~:~ HeLp tHe OrPhAnS Community in Orkut


Update:

April 1,2010 அன்று நிலவரப்படி, சாரல் Orkut குழுமத்தில் 7124, Yahoo Groups ல் 1551, SMS Channel ல் 162 பேர் இணைந்துள்ளனர்.

Advertisements

8 Responses to விகடன் ஸ்டார் அலேக்யா

 1. RAM சொல்கிறார்:

  Your are doing great service…For any help related to medicines and medical treatment….you may contact in my mail id…

 2. எட்வின் சொல்கிறார்:

  சாரல் குறித்த தகவலுக்கு நன்றி அன்பரே

 3. சிவாஜி சொல்கிறார்:

  அன்பு நண்ப,

  உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!
  மிகவும் அருமையான பதிவுகள், இது போல் இன்னும் நிறைய நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்! என் வலையிலும் இதை பதிவிடுகிறேன்.

  நட்புடன்…
  சிவாஜி

 4. rammohan1985 சொல்கிறார்:

  மிக்க நன்றி சிவாஜி அவர்களே…

 5. […] கண்கூடாக ஆனந்த விகடனின் கட்டுரையான விகடன் ஸ்டார் அலேக்யா வும், குமுதத்தின் சாதித்துக் […]

 6. padmahari சொல்கிறார்:

  நல்ல பகிர்வு! ஈர்க்கிறார் அலேக்யா, நம்மையும் சமுதாயத் தொண்டு செய்ய!!
  தொடரட்டும் பதிவுப் பயணம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: