கண்களின் அருவியை நிறுத்து!

கைகளைக் கட்டிக் கொண்டு

கதவோரம் ஒட்டிக் கொண்டு

கண்ணீரை விட்டுக் கொண்டு

கனலுக்குள் வேகாதேடா-தோழா

கவலைக்குள் சாகாதேடா!


விழியோர நீரைத் தட்டும்

வேரோடு கவலை வெட்டும்

வார்த்தைகள் சேர்த்துக் கட்டும்

கவியோடு வந்தேனடா-தோழா

செவியோடு செந்தேனடா!


உள்ளத்துச் சிறையின் உள்ளே

ஓயாமல் தள்ளப் பட்டே

சிறையையே தண்டிக்கின்ற

பொல்லாத கைதிகளடா-தோழா

பிணந்தின்னிக் கவலைகளடா!


முடக்கங்கள் இந்தப் பக்கம்

பலகீனம் அந்தப் பக்கம்

மனத்தினுள் கிள்ளி வைக்கும்

கவலைகள் முள்ளாய் தைக்கும்-தோழா

முள்ளுக்குள் உயிரும் சிக்கும்!


வாழ்வென்னும் கடலில் நீந்தி

நம்பிக்கை வலைகள் வீசி

விழிகளை விரித்தே பாரு-தோழா

கவலையோ விலகும் சேறு!


பொருள் தேடி உலகம் ஏறு

பொன்னோடு பண்பும் சேறு

பொருள் கண்ட உன்னை யாரும்

பணம் என்று மட்டும் பார்த்தால்-தோழா

பிணம் என்று மட்டும் பாரு!


மாறாத மகத்துவம் என்று

மண் மீது மாற்றமே உண்டு

இருண்ட உன் இதயமே கேடு

சொர்க்கமும் பூட்டிய கூடு-தோழா

திறவிகோல் உனக்குள் தேடு!


கைகளில் அள்ளியே நாளும்

கணக்கின்றி உரித்தென்ன லாபம்

கவலைகள் பெருகியே போகும்

வெங்காயம் வேறென்ன ஆகும்-தோழா

வீசி நீ எறிந்தாலே தீரும்!


கனவுகள் முயற்சியின் பொறுப்பு

கைகளில் நம்பிக்கை நெருப்பு

கண்களில் வெற்றியின் சிரிப்பு

கவலையின் வேர்களை அறுத்து-தோழா

கண்களின் அருவியை நிறுத்து!


-கவிஞர் புகாரி

Advertisements

One Response to கண்களின் அருவியை நிறுத்து!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: