உயிரெழுத்துக்கள்/ மெய்யெழுத்துக்கள்
இரண்டாம் பாடத்தில் ஹிந்தி உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் ஆகியவற்றின் எழுத்து வடிவம் மற்றும் உச்சரிப்பு ஆகியவற்றைக் காண்போம். வார்த்தைகள் உருவாக்கத்தில் இது மிகவும் உதவும் என்பதால் திரும்பத் திரும்ப எழுதி, உச்சரித்து பார்த்தால் விரைவாக கற்றுக் கொள்ளலாம்.
ஹிந்தி எழுத்துக்கள் தேவநகரி எனப்படுகிறது.
உயிரெழுத்துக்கள் (Vowels) மொத்தம் 11
மெய்யெழுத்துக்கள்(Consonants) மொத்தம் 36
உச்சரிப்பு பயிற்சி:
எழுத்துக்களைப் பார்த்தாயிற்றல்லவா? சரி வாருங்கள் எப்படி உச்சரிப்பது என்று பார்ப்போம்.http://www.hindibhasha.com/ என்னும் இணையத்தில் உயிரெழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்கள் உச்சரிப்பினை அறிந்து கொள்ள சிறந்த தளமாக இருக்கிறது. உச்சரிப்புகளை பழகிய பின் Test என்னும் இணைப்பில் சென்று எழுத்துக்களின் பரிட்சயத்தை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
உச்சரிப்பு என்று வரும் போது Voiceless Anaspirated, Voiceless Aspirated, Voiced Anaspirated, Voiced Aspirated , nasalஎன்று ஐந்து வகையாக ஹிந்தி மெய்யெழுத்துக்கள் பகுக்கப்பட்டுள்ளன. அதெல்லாம் நமக்கெதுக்கு… மேற்கண்ட இணைய தளமே உச்சரிப்புப் பயிற்சியில் தேர்ச்சி பெற போதுமானது.
இன்னொரு இலவச இணைப்பாக இந்த காணொளிகள்:
எழுத்துப் பயிற்சி:
கீழே உள்ள எழுத்துப் பயிற்சிக்கான 5 பக்க MS – Word கோப்பினைப் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.
Hindi Letter Writing Practice
உங்கள் கணினியில் ஹிந்தி மொழிக்கான Unicode Font இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.
கோப்பினை அச்செடுத்து தினமும் எழுதிப்பார்த்து எழுத்துக்களின் மீதான பரிட்சயத்தினை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.
கோப்பிலுள்ள எழுத்துக்கள் யாவும் NHM Writer கொண்டு Hindi Phonetic மூலமாக எழுதப்பட்டவை.
இன்ன பிற:
அனைத்து மொழியையும் கற்றுவை தாய்மொழியில் பற்றுவை என்று ஹிந்தி மொழி கற்க உதவும் தளங்களின் இணைப்பை எதிர்நீச்சல் என்னும் தளத்தில் காணலாம்.
இந்த இடுகை ta.indli.Com பயனர்களை சென்றடைய இங்கே வாக்களியுங்கள்.
உங்கள் நண்பர்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க! பாடம்-2 பற்றிய கருத்துக்களை (Comments) பின்னூட்டமிடுங்கள்.
ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க! அழைப்பினை ஏற்று மின்னஞ்சல் சந்தாதாரர்களாகிய 43 நல் உள்ளங்கள் மற்றும் Ta.Indlii Followers 9 பேருக்கு ,
நன்றிகளுடன்,
ராம்மோகன்.
மீண்டும் சந்திப்போம்!
Develop Good Habits, Motivation is what gets you Started, Habit is What keeps you Going.







[...] [...]
Super Ji !
ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க! பாடம்-1:
http://rammohan1985.wordpress.com/2010/07/15/%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99/
வேண்டாம் வேண்டாம் என பார்த்த இடங்களில் எல்லாம் தார் பூசி அழித்து தவறு செய்த தமிழர்களுக்காக ஹிந்தி கற்பிக்கின்றீர்களே!.
-ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/
வேண்டாம் வேண்டாம் என்று தார் பூசி அழித்தவர்களுக்காக அல்ல ஜெகதீஸ்வரன் இப்பதிவு…. ”இந்தியனாக இருந்து கொண்டு இந்தி தெரியவில்லையா என்று யாரும் நம்மை இகழ்ந்து விடக்கூடாது” என்று எண்ணுபவர்களுக்கும், அறிவை விசாலப்படுத்திக் கொள்ள விரும்புபவர்களுக்கும்….
பணி நிமித்தமாக பல மாநிலங்களுக்கு
செல்ல வேண்டியவன் நான்.
இந்தி தெரியாமல் நான் பட்ட அவமானம் சொல்லி மாளாதது…
இந்தி கற்றுத்தான் தீர வேண்டும்.
இந்த பதிவு பாராட்டத்தக்க முயற்சி.
very very nice in this one.thanks of lot
sir details sent pels.
This is very much useful to learn an important language for those who feel shy to go for a learning class. The language was learned in early ages in the schools and forgot by letters and pronunciations.We appreciate the people who took the pain to get others learn in an easy way. People from north learn very easily tamil and other languages. But we are poor in learning Hindi in the same way. Let the lessons get a good success.