நமது தன்னம்பிக்கையை தேடிப் பெறுவதற்கு, அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு கடைபிடிக்க வேண்டிய 5 வழிகள்:

IMEI நம்பர் என்பது The International Mobile Equipment Identification. 15 எண்கள் அடங்கிய இந்த எண்ணானது திருடு போன மொபைல் போன்களை கண்டறியவும், அரசின் உளவுத்துறையாலும் பயன்படுத்தப்படுகிறது.
IMEI என்றழைக்கப்படும் அடையாள எண் இல்லாத மொபைல் போன்களுக்கான சேவை, டிசம்பர் 1ம் தேதி நிறுத்தப்படும் என்று தொலைத் தொடர்புத் துறை அறிவித்து உள்ளது.
உங்களது போனின் IMEI நம்பரின் Validity அறிய இரண்டு வழிகள் உள்ளன.
*06# என்று உங்கள் மொபைலில் Type செய்து 15 இலக்க எண்ணை குறித்துக் கொள்ளுங்கள்.
இணைய வழியில் Validity அறிய:
http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr
என்ற தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.
SMS மூலம் Validity அறிய:
உங்கள் IMEI நம்பரை கீழ்கண்டவாறு 53232 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். Charges: Rs.3 per SMS
For eg : IMEI 351868910323340 to 53232
Message displayed for correct IMEI – Success
Message displayed for incorrect IMEI – Invalid IMEI
IMEI நம்பர் இல்லாதவர்கள் அரசின் Genuine IMEI Implant program என்ற இந்த தளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.மனித ஆலை – Human Factory
அற்புதமான காணொளி… மனித உறுப்புகளை இயந்திரங்களோடு ஒப்பிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.
வசிக்க: http://www.vimeo.com/6505158
அடிப்படை அவசியங்கள்; EHMAN; 1972
ஞானியரின் ஞானத்தைக் கேள்!
அவசர இரைச்சல் இடையே
அமைதியாகச் செல்.
மௌனத்தின் நிம்மதியை நினைவில் கொள்
முடிந்த வரை சரணடையாமல்
அனைவருடனும் நல்லுறவு கொள்.
உன் உண்மையை
இதமாகத் தெளிவாகக் கூறு
பிறர் கூறுவதைக் கவனி
மந்த மூடர்களாயிருப்பவரிடமும்
சொல்வதற்கு அவர்களிடம்
ஒரு கதை உண்டு.
உரக்கப் பேசுபவர்களையும்
ஆத்திரக்காரர்களையும் தவிர்
அவர்கள் உள்ளத்தில்
வெறுப்பை உருவாக்குபவர்கள்.
பிறருடன் ஒப்பிட்டால்
உனக்குக் கசப்பும் சலிப்புமே மிஞ்சும்.
உன்னை விடவும்
உயர்ந்தவர்களும், தாழ்ந்தவர்களும்
எப்போதும் உண்டு.
உன் சாதனைகளை மகிழ்வுடன் அனுபவி
அதே நேரத்தில்
உன் திட்டங்களையும்
மகிழ்ச்சியோடு அணுகு.
உன் வாழ்வின் பாதை
எவ்வளவு சாதாரணமாக இருந்தாலும்
அதில் ஆர்வம் கொள்.
கால மாற்றங்களில் இதுவே
உனது நிரந்தரச் செல்வம்.
தொழிலில் எச்சரிக்கையோடிரு.
உலகில் ஏமாற்றல்கள் அதிகம்,
அதனால் நன்மைகள் இருப்பதை மறுக்காதே.
உழைப்பவர் பலர்
உலகம் முழுவதும் வெற்றிக்கான
வீர முனைப்பு இருக்கிறது.
நீ
நீயாக இரு.
அன்பு காட்டுவதாய் நடிக்காதே.
அன்பை ஏளனப்படுத்தாதே.
எல்லா விரோதங்களுக்கும்
ஏமாற்றங்களுகும் அப்பாலும்
அன்பு ஒரு நிரந்தரப் பசுமை.
வயதுகளின் ஆலோசனையை அனுமதி.
இளமையின் வேகத்தை நிதானமாக்கி,
உள்ளே உரம் பெறு,
பலம் பெறு, இது எதிர்பாரா தாக்கங்களிலிருந்து
உன்னைப் பாதுகாக்கும்.
மிகையான கற்பனைகளால்
மனதை வருத்திக் கொள்ளாதே
அசதியும் தனிமையும்
அச்சங்களைப் பிரசவிக்கும்
முழுமையான கட்டுப்பாடுடன்
உனக்கு நீயே
சலுகைகள் எடுத்துக் கொள்.
நீ
இந்தப் பிரபஞ்சத்தின் குழந்தை
மரங்களுக்கும், நட்சத்திரங்களுக்கும்
உள்ளது போலவே உனக்கும்
இங்கே உரிமைகள் உள்ளன.
புரிந்தாலும் புரியாவிட்டாலும்
பிரபஞ்சம் தன் விதிப்படியே
இயங்கிக் கொண்டிருக்கும்
உன் உழைப்பும் கனவும்
எதுவானாலும்
உள்ளே உனக்கோர்
இடம் செய்து கொள்.
பொய், புரட்டு, பகற் கனவுகளை மீறி
உலக அழகானது தான்.
இன்புற்றிரு,
இன்புற்றிருக்க முனை.
1972 ஆம் ஆண்டின் இந்த தன்னம்பிக்கை ஊட்டும் கவிதையினை
அளித்து உதவிய ”இளைஞர்” நரேந்திரன் அவர்களுக்கு நன்றிகள்….
வாழ்க்கை என்பது கடமையடா – அதில்
வாழ்ந்து பார்ப்பது உரிமையடா!
இன்பமும் துன்பமும் குமிழிகளே -அவை
இரண்டும் இங்கே நிலையில்லை!
இன்பம் வந்தால் துள்ளாதே – அட
இன்னல் வளைத்தால் துவளாதே!
இரண்டையும் ஒன்றைக் கருதிவிடு -
இன்னலை இங்கே ஊதிவிடு!
இந்தச் சமநிலை தேவையடா – அது
இல்லை என்றால் குழப்பமடா!
என்றும் வேண்டும் நம்பிக்கை — அதை
இழந்தால் நாமோ வெறும்சக்கை!
காக்கை குருவி எறும்புகளும் – இந்தக்
காசினி மீதில் வாழ்கிறது!
ஊற்றாய் ஊறும் பகுத்தறிவை — ஏந்தும்
உன்னால் வாழ முடியாதா?
நேற்று என்பதை அழித்துவிடு – உலகில்
நாளை என்பதை மறந்துவிடு!
ஏக்கந் தன்னை எடுத்துவிடு — கனியும்
இன்றில் வாழ எழுந்துவிடு!
மனிதா! மனிதா! மயங்காதே — இங்கே
மலைப்பின் பிடியில் சிக்காதே!
துணிச்சல் கொண்டு நடைபோடு — வாழ்வைத்
தூக்கிப் பிடித்தே எடைபோடு!
Thanks: http://www.eelanesan.com/tamil-ilakiyam/48-kavithai/134-life.html